சிசோடியாவுக்கு ஜாமீன் ஏன்.. சுப்ரீம் கோர்ட் சொன்ன முக்கிய பாயிண்டு! அப்போ மற்ற தலைவர்கள் நிலை என்ன?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: டெல்லி மதுபான கொள்கை ஊழல் புகாரில் கைதான மனிஷ் சிசோடியாவுக்கு சுமார் 17 மாதங்களுக்குப் பிறகு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. இந்த தீர்ப்பை வாசித்த போது சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் வேறு சில முக்கிய கருத்துகளையும் குறிப்பிட்டனர். இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.

டெல்லி மதுபான கொள்கை விவகாரத்தில் கடந்த 2023 பிப். மாதம் மனிஷ் சிசோடியா கைது செய்யப்பட்டார். அப்போது முதலே சிறையில் இருந்து வரும் அவருக்கு உச்ச நீதிமன்றம் இப்போது ஜாமீன் வழங்கியுள்ளது.

Manish Sisodia Delhi Liquor policy supreme court

ஜாமீன் தொகையாக ரூ.10 லட்சம் செலுத்த வேண்டும், பாஸ்போர்ட்களை ஒப்படைக்க வேண்டும், வாரத்திற்கு இரண்டு முறை விசாரணை அதிகாரிகள் முன்பு ஆஜராக வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கப்பட்டது.

உச்ச நீதிமன்றம்: ஜாமீன் காலத்தில் சாட்சியங்களைக் கலைக்கும் முயற்சியில் ஈடுபடக்கூடாது என்றும் நீதிபதிகள் அறிவுறுத்தினர். அப்போது ஆம் ஆத்மி அலுவலகம் மற்றும் டெல்லி தலைமைச் செயலகம் செல்ல சிசோடியாவை அனுமதிக்கக் கூடாது என்று அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ கோரிக்கை விடுத்தன. இருப்பினும், அதை ஏற்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துவிட்டது.

மேலும், இந்த ஜாமீன் உத்தரவைப் பிறப்பிக்கும் போது உச்ச நீதிமன்றம் சில முக்கிய கருத்துகளையும் தெரிவித்தது. ஒருவரை நீதிக்காக ஓட வைக்க முடியாது. மேல்முறையீடு செய்தவரை மீண்டும் மீண்டும் விசாரணை நீதிமன்றத்திற்குத் தள்ளுவது கேலிக்கூத்து ஆகும் என்று சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.

எதிர்க்க முடியாது: விசாரணையை விரைவு படுத்த வேண்டும் என்று கேட்பது விசாரணையை எதிர்கொள்பவரின் உரிமை என்றும் குறிப்பிட்ட உச்ச நீதிமன்றம், மணிஷ் சிசோடியாவின் உரிமை பறிக்கப்பட்டு உள்ளது என்றும் இப்படிக் கேட்கும் உரிமை என்பது ஒரு புனிதமான உரிமை என்றும் தெரிவித்துள்ளது. மேலும், குற்றம் தீவிரமானது என்று கூறி ஜாமீனை எதிர்க்க முடியாது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

மிக முக்கிய கருத்து: மேலும் ஜாமீன் விவகாரத்தில் உயர் நீதிமன்றமும் மற்றும் கீழமை விசாரணை நீதிமன்றம் குறித்தும் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்தனர். ஜாமீன் விவகாரத்தில் டெல்லி ஐகோர்ட்டும், விசாரணை நீதிமன்றமும் பாதுகாப்பாக இருக்கவே பார்ப்பதாக சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். குறிப்பாக ஜாமீன் என்பது தான் விதி.. சிறை விதிவிலக்கு தான் என்பதை கீழமை நீதிமன்றங்கள் உணர வேண்டிய நேரம் இது என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டனர்

விசாரணையை முடிவடையும் வரை ஒருவரைச் சிறையில் அடைப்பது என்பது அரசியல் சாசன பிரிவு 21 மீறும் வகையில் செயல் என்றும் தீர்ப்பில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். இந்த வழக்கில் விசாரணையை மேற்கொள்வதில் சிபிஐ, அமலாக்கத்துறை அமைப்புகள் செய்துள்ள தாமதம் மணிஷ் சிசோடியாவின் சுதந்திரத்தை, தனி உரிமை பறிக்கும் செயல் என்று கூறியே ஜாமீன் வழங்கினர்.

முந்தைய தீர்ப்புகள்: ஒருவர் நீண்ட காலத்திற்குச் சிறையில் இருக்கும் போது ​​ஜாமீன் வழங்கப்படலாம் என்று இதற்கு முன்பு வழங்கப்பட்டுள்ள தீர்ப்புகளையும் கவனத்தில் எடுத்துள்ளோம் என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டனர். மேலும் நீண்டகால சிறைவாசம் தொடர்பான வழக்குகளில் சில கடுமையான விதிகள் தளர்த்தப்படலாம் என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.

அச்சம் இல்லை: மேலும், ஜாமீன் வழங்காமல் மேல்முறையீடு செய்தவரை (மனிஷ் சிசோடியா)மீண்டும் விசாரணை நீதிமன்றத்திற்கு அனுப்புவது என்பது அவருடன் பரமபதம் ஆடுவது போல என்று குறிப்பிட்டே அவருக்கு ஜாமீன் வழங்கினர். மனிஷ் சிசோடியா தான் விசாரணையைத் தாமதப்படுத்துவதாக விசாரணை நீதிமன்றம் கூறியிருப்பது தவறானது அதை ஏற்க முடியாது. மேல்முறையீடு செய்பவர் சமூகத்தில் முக்கிய இடத்தில் இருப்பவர்.. அவர் தப்பியோடிவிடுவார் என்ற அச்சம் இல்லை என்றும் கூறியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+