"சம்பளம் கம்மி தான்!" ஆனாலும் ரிசர்வ் வங்கி கவர்னருக்கு கிடைக்கும் முக்கிய சலுகை! ரூ.450 கோடியாம்
டெல்லி: ரிசர்வ் வங்கி கவர்னராக இருக்கும் ஒருவர் பெறும் சம்பளம் குறைவு தான் என்றால் நம்ப முடிகிறதா.. ஆனால், அவர்களுக்கு ஒரு மிக முக்கியச் சலுகை கிடைக்கிறதாம்.. இது தொடர்பாக நாம் விரிவாகப் பார்க்கலாம்.
நமது நாட்டில் வங்கிகளை எல்லாம் கண்காணிக்கும் வங்கி என்றால் அது ரிசர்வ் வங்கி. இதன் தலைவராக இருக்கும் ரிசர்வ் வங்கி கவர்னர் பெறும் சம்பளம் எவ்வளவு தெரியுமா..

ரிசர்வ் வங்கி கவர்னராக இருக்கும் ஒருவர் நாட்டில் இருக்கும் தனியார் வங்கி ஊழியர் பெறும் சம்பளத்தைக் காட்டிலும் பல மடங்கு குறைவாகவே பெறுகிறார் என்றால் நம்ப முடிகிறதா.. இது குறித்து நாம் பார்க்கலாம்.
ரிசர்வ் வங்கி கவர்னர்: பொதுவாக ரிசர்வ் வங்கி கவர்னராக இருக்கும் ஒருவருக்கு மாதம் ரூ. 2.87 லட்சம் சம்பளமாக வழங்கப்படுகிறது. பல ஐடி ஊழியர்களே இதை விட அதிகமாக ஊதியம் பெறுவார்கள். ஆனால், நாட்டின் கரன்சி புழக்கத்தையே முடிவு செய்யும் ரிசர்வ் வங்கி கவர்னருக்கு சம்பளம் ரூ. 2.87 லட்சம் தான். இது அடிப்படை ஊதியம் இல்லை. அனைத்து விதமான அலவன்ஸ்களை சேர்த்து கடைசியாக அவருக்குச் சம்பளமே அவ்வளவு தான்.
வேறுபாடு இல்லை: அதேநேரம் ரிசர்வ் வங்கியில் கவர்னருக்கும் துணை கவர்னருக்கும் அதிகாரத்தில் தான் பெரிய வேறுபாடுகள் உள்ளதே தவிர ஊதியத்தில் பெரியளவில் வேறுபாடு இல்லை.. கவர்னரை விடத் துணை கவர்னருக்கு மாதம் 31,500 ரூபாய் மட்டுமே சம்பவம் குறைவாகக் கிடைக்கும். ரிசரவ் வங்கிக்கு மொத்தம் நான்கு துணை கவர்னர்கள் இருக்கும் நிலையில், அவர்களுக்கு மாதம் ரூ.2.55 லட்சம் சம்பளம் வழங்கப்படுகிறது.
முன்பு உர்ஜித் படேல் ஆளுநராக இருந்த போது தான் கடைசியாக ஊதிய உயர்வு இருந்தது. அதன் பிறகு ஊதிய உயர்வு இல்லை. உர்ஜித் படேல் பெற்ற அதைச் சம்பளத்தைத் தான் கவர்னர் சக்திகாந்த தாஸும் பெறுகிறார்.
30 மடங்கு: நாட்டின் பொருளாதாரத்தையே கட்டுப்படுத்தும் அளவுக்கு வலிமையான பொறுப்பில் இருந்தாலும் ரிசர்வ் வங்கி கவர்னர் சம்பளம் என்பது ரொம்பவே குறைவு.. இதை மற்ற தனியார் வங்கிகளுடன் ஒப்பிடக் கூட முடியாது. உதாரணமாக, நாட்டின் முக்கிய தனியார் வங்கியின் சிஇஓ பொறுப்பில் இருப்பவருக்கு ரூ.90 லட்சம் சம்பளமாக வழங்கப்படும்.. இது தவிர போனஸ் தொகையும் தனியாக வழங்கப்படும். அதாவது ரிசர்வ் வங்கி கவர்னரை காட்டிலும் தனியார் வங்கி சிஇஓ சுமார் 30 மடங்கு அதிகம் சம்பளம் வாங்குவார்கள்.
ரகுராம் ராஜன்: முன்னதாக சில மாதங்களுக்கு முன்பு ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன், தான் பதவியில் இருந்தபோது பெற்ற சம்பளம் குறித்து எல்லாம் விளக்கி இருந்தார். அதில் அவர், "இப்போது இருப்பவர்கள் எந்தளவுக்குச் சம்பளம் பெறுகிறார்கள் என தெரியவில்லை. ஆனால், நான் ஆளுநராக இருந்த போது ஆண்டுக்கு ரூ.4 லட்சம் தான் சம்பளம் என்று கூறினார்.
உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் ரிசர்வ் வங்கி கவர்னருக்கு கிடைக்கும் மிகப் பெரிய சலுகை என்றால் அது வீடு தான். மும்பையில் உள்ள மலபார் ஹில்லில் மகி பெரிய வீடு உங்களுக்குக் கிடைக்கும்... அதுவும் திரிபாய் அம்பானியின் வீட்டிற்கு அருகிலேயே கிடைக்கும். இதுதான் ரிசர்வ் வங்கி கவர்னருக்கு கிடைக்கும் மிகப் பெரிய சலுகையாகும்.
மிகப் பெரிய சலுகை: நான் ஒரு முறை சும்மா யோசித்துப் பார்த்தேன்.. அதாவது அந்த வீட்டை விற்றால் அல்லது லீஸுக்கு விட்டால் சுமார் 450 கோடி ரூபாய் கிடைக்கும். அதைச் சரியாக முதலீடு செய்தாலே ரிசர்வ் வங்கியின் அனைத்து உயர் அதிகாரிகளுக்கும் சம்பளத்தைக் கொடுத்துவிடலாம். ஆனால், அது ஒரு அற்புதமான வீடு அதை விற்க மனசு வராது" என்றார்.
ரிசர்வ் வங்கி கவர்னர் செய்யும் பணிக்கு ஏற்ப அவருக்குச் சம்பளம் வழங்கப்படுகிறதா என்ற கேள்விக்கு அவர், "இது கிட்டதட்ட ஒரு கேபினட் செயலாளருக்குக் கிடைக்கும் ஊதியம்.. அரசு அதிகாரிகளுக்கு அவ்வளவு தான் கிடைக்கும். அதேநேரம் அரசு அதிகாரிகள் பெறும் மற்ற சலுகைகள், ஓய்வூதியம் கிடைக்காது.. ரிசர்வ் வங்கி ஆளுநராக இருந்ததற்கு எனக்கு ஓய்வூதியம் கிடைக்கவில்லை" என்றார்
-
திரும்ப திரும்ப சிக்கும் இண்டஸ்இண்ட் வங்கி.. மீண்டும் மெகா மோசடி.. மோடி, ஆர்பிஐ வரை பறந்த கடிதம்! -
UPI-யில் பெரிய மாற்றம்.. அமலுக்கு வந்த புதிய விதிமுறைகள்.. இனி பணம் அனுப்புறப்ப ரொம்ப கவனம்! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications