வந்தே பாரத் ரயிலின் அதிகபட்ச ஸ்பீடு 180 கிமீ..ஆனால் ஏன் இந்த வேகத்தில் இயக்கப்படுவது இல்லை தெரியுமா?
டெல்லி: வந்தே பாரத் ரயில் அதிகபட்சமாக 180 கி.மீட்டர் வேகத்தில் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டாலும் அதன் அதிகபட்ச வேகம் 130 கி.மீட்டராக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. ஏன் வந்தே பாரத் ரயில் இவ்வளவு வேகம் குறைவாக இயக்கப்படுகிறது என்பது குறித்து அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
இந்தியாவில் ரயில்வே துறையை நவீனமயமாக்க பல்வேறு நடவடிக்கைகளை ரயில்வேதுறை மேற்கொண்டு வருகிறது. எக்ஸ்பிரஸ் ரயில்களை போல சதாப்தி, ராஜ்தானி போன்ற சொகுசு ரயில்கள் சில வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், விமானத்திற்கு நிகரான சொகுசு வசதிகளுடன் அதிவேக ரயிலாக வந்தே பாரத் ரயிலை ரயில்வே தற்போது நாடு முழுவதும் இயக்க தொடங்கியுள்ளது.
தமிழகத்திலும் சென்னை- மைசூரு இடையேயும் சென்னை - கோவை வழித்தடத்திலும் இரு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. வந்தே பாரத் ரயிலில் பல நவீன வசதிகள் இருந்தாலும் வந்தே பாரத் அதிவேகத்தில் இயக்கப்படும் என்ற அறிவிப்புதான் பயணிகள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

அதாவது மணிக்கு 180 கி.மீட்டர் வேகத்தில் வந்தே பாரத் ரயிலை இயக்க முடியும் என்று சொல்லப்பட்டதால் வந்தே பாரத் ரயில் மீதான எதிர்பார்ப்பு பயணிகள் மத்தியில் எகிறியது. ஆனால், நாட்டில் 14 வந்தே பாரத் ரயில்கள் ஓடுகின்றன. எந்த ஒரு ரயிலும் இந்த வேகத்தை எட்டவில்லை. இன்னும் சொல்லப்போனால் இதற்கு பாதிவேகத்தில் தான் ரயில்கள் இயக்கப்படுகின்றன என்பது தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கொடுக்கப்பட்ட விளக்கத்தில் தெரிவியவந்துள்ளது.
மத்திய பிரதேசத்தை சேர்ந்த சந்திர சேகர் கவுர் என்பவர், வந்தே பாரத் ரயில் இயக்கப்படும் வேகம் குறித்து ஆர்.டி.ஐ எனப்படும் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் விவரங்களை கேட்டு இருந்தார். இதற்கு ரயில்வே அளித்த பதிலில், வந்தே பாரத் ரயில் சராசரியாக 84.8 கி.மீட்டர் வேகத்தில்தான் இயக்கப்படுவது தெரியவந்துள்ளது. 2021-22 ஆம் ஆண்டில் வந்தே பாரத் ரயிலின் சராசரி வேகம் 84.8 கி.மீட்டராக இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2022-23 ஆம் ஆண்டில் அதன் வேகம் இன்னும் குறைந்துள்ளது. அதாவது சராசரியாக 81.38 வேகத்தில் தான் இந்த ரயில் இயக்கப்பட்டு வருகிறது. வந்தே பாரத் ரயில் அதிகபட்சமாக 180 கி.மீட்டர் வேகத்தில் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டாலும் அதன் அதிகபட்ச வேகம் 130 கி.மீட்டராக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இந்தியாவில் உள்ள ரயில்வே தண்டவாளங்களின் அடிப்படையில் அதிகபட்ச வேகம் 130 கி.மீட்டராக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

இருந்தாலும் இந்த வேகத்தை கூட ரயில்கள் தொடவில்லை. வந்தே பாரத் ரயில் இவ்வளவு வேகம் குறைவாக இயக்கப்படுவது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:- வந்தே பாரத் ரயிலின் வேகம் மாறுபாடாக இருப்பதற்கு ரயில்வே தண்டவாளங்களின் நிலையே காரணம். மும்பை CSMT- சாய்நகர் ஷிரடி வந்தே பாரத் ரயில்தான் மிகவும் குறைந்தபட்ச வேகத்தில் இயக்கப்படுகிறது.
இந்த ரயிலின் வேகம் மணிக்கு 64 கி.மீட்டர் தான். இந்தியாவில் சராசரியாக அதிவேகமாக செல்லும் வந்தே பாரத் ரயில் எதுவென்றால் புதுடெல்லி- வாரணாசி இடையே ஓடும் ரயில் தான். நாட்டிலேயே முதல் வந்தே பாரத் ரயில் இதுதான். 2019 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த வந்தே பாரத் ரயிலின் சராசரி வேகம் 95 கி.மீட்டர் ஆகும்.

வந்தே பாரத் ரயிலின் சராசரி வேகம், ராஜ்தானி, சதாப்தி ரயிலின் வேகத்தை விட அதிகம். இந்த ரயிலோடு ஒப்பிடுகையில், வந்தே பாரத் ரயில் விரைவாக வேகத்தை எட்டும். அதேபோல், வேகத்தை சீக்கிரமாக குறைக்க முடியும். எந்த ஒரு போக்குவரத்து முறையும் அதன் அதிகபட்ச வேகத்தை எட்டாது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். வந்தே பாரத் ரயிலின் வேகம் அதே வழித்தடத்தில் செல்லும் பிற ரயில்களை விட அதிகம் தான்.
வந்தே பாரத் ரயில்கள் அதிவேக இயக்கத்திற்காக கட்டமைக்கப்படுகிறது. எனவே ரயில்வே வழித்தடங்களும் மேம்படுத்தப்பட்டால் வந்தே பாரத் போன்ற ரயில்கள் வரும் காலத்தில் அதிகபட்ச வேகத்தை எட்ட முடியும். வந்தே பாரத் ரயிலின் மேம்படுத்தப்பட்ட வெர்ஷன்கள் அதிகபட்சமாக 200 கி.மீட்டர் எட்டும் வகையில் இருக்கும்" என்றனர்.
-
ஈரானில் விழுந்த குண்டுகளால்.. இந்தியாவில் உயர்ந்த குடிநீர் விலை.. இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ! -
மாஸ் காட்டும் இந்தியா.. கடற்படையின் பலம் டபுளாகுது! உள்ளே வந்த ஐஎன்எஸ் தாராகிரி! -
2 மாத வாடகை தான் அட்வான்ஸ்.. ஒழுங்கா கட்டலைனா வெளியேற்றலாம்! புதிய வாடகை விதிகள் சொல்வது என்ன -
ரெடியா இருங்க மக்களே! சட்டுன்னு ஏறப்போகும் பெட்ரோல், டீசல் விலை! தேதி குறிச்சாச்சு! -
வந்தாச்சு LPG ATM.. இனி காத்திருக்கவே வேண்டாம்! வெறும் 2 நிமிடத்தில் புதிய சிலிண்டர் ஈஸியா வாங்கலாம் -
"பணத்தை கொடுத்துட்டு.. அழுது புலம்புங்க.. நான் கேட்கிறேன்.." வினோத பிஸ்னஸை ஆரம்பித்த இளைஞர் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2!












Click it and Unblock the Notifications