மதுரை எய்ம்ஸ் கட்டுமானம் தாமதத்திற்கு இதுதான் காரணம்! அமைச்சர் ஜேபி நட்டா தந்த புதிய விளக்கம்
டெல்லி: நாடாளுமன்றத்தில் இப்போது பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வருகிறது. இதற்கிடையே இன்றைய தினம் லோக்சபாவில் நீலகிரி எம்பி ஆ ராசா, மதுரை எய்ம்ஸ் கட்டுமானம் குறித்து சில கேள்விகளை எழுப்பினார். அதற்குப் பதிலளித்த மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜேபி நட்டா, மதுரை எய்ம்ஸ் குறித்தும் அதன் கட்டுமானம் எப்போது முடியும் என்பது குறித்தும் முக்கிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.
நாடாளுமன்றத்தில் இப்போது பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வருகிறது. இதற்கிடையே இன்றைய தினம் மதுரை எய்ம்ஸ் கட்டுமானம் குறித்து ஆ ராசா சில முக்கிய கேள்விகளை எழுப்பினார்.

மதுரையில் 5 ஆண்டுகள் ஆகியும் எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட ஒரு செங்கல் கூட நிறுவப்படவில்லை என்று குறிப்பிட்ட அவர், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் மட்டுமே நாட்டப்பட்டது என்றும் அதன் பிறகு எந்தவொரு நீதியோ அல்லது கட்டுமான பணிகளோ மேற்கொள்ளப்படவில்லை என்ற அவர் தெரிவித்தார்.
மதுரை எய்ம்ஸ்: மதுரை எய்ம்ஸ் கட்டுமானம் விரைவில் முடிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்தது என்று குறிப்பிட்ட ஆ ராசா, ஆனாலும் இதுவரை கட்டுமானம் கட்டி முடிக்கப்படாமல் அப்படியே இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், மதுரை எய்ம்ஸ் கட்டுமானம் எப்போது கட்டி முடிக்கப்படும் என அவர் கேள்வி எழுப்பினார்.
ஜேபி நட்டா விளக்கம்: அதற்குப் பதிலளித்த மத்திய சுகாதாரம் & குடும்ப நலத்துறை அமைச்சர் ஜே பி நட்டா, மதுரை எய்ம்ஸ் கட்டுமானத்தில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது என்பதை ஒப்புக்கொள்வதாகத் தெரிவித்தார்.
தாமதத்திற்கு என்ன காரணம்: அதேநேரம் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்றும் சில தொழில்நுட்ப காரணங்களுக்காகவே கட்டுமானப் பணிகள் தாமதம் ஆகிறது என்றும் தெரிவித்தார். அதேநேரம் விரைவில் கட்டுமானம் தொடங்கப்பட்டு மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை சீக்கிரம் கட்டி முடிக்கப்படும் என உறுதி அளிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
மதுரை எய்ம்ஸ்.. மாணவர்கள் அதிருப்தியா.. நாளிதழ் செய்தி தவறானது: நிர்வாகம் விளக்கம்
மதுரை எய்ம்ஸ்: 1956 டெல்லியில் முதல் எய்ம்ஸ் அமைக்கப்பட்டது. அதன் பிறகு பல ஆண்டுகளுக்கு டெல்லியில் மட்டுமே எய்ம்ஸ் இருந்தது. இந்தச் சூழலில் தான் கடந்த 2003இல் நாட்டின் பல பகுதிகளில் எய்ம்ஸ் மருத்துவமனைகள் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து 2014இல் பாட்னா, போபால், என ஆறு இடங்களில் எய்ம்ஸ் மருத்துவமனைகள் தொடங்கப்பட்டன.
அதன் பிறகு மத்தியில் ஆட்சிக்கு வந்த மோடி அரசு எய்ம்ஸ் மருத்துவமனைகளை நாடு முழுக்க கொண்டு வரத் திட்டமிட்டது. அதன்படி கடந்த 2015இல் நாடு முழுக்க பல இடங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதில் தான் மதுரை எய்ம்ஸும் இடம் பெற்றது. மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட முடிவு செய்யப்பட்டது. 2015ம் ஆண்டிலேயே அறிவிக்கப்பட்டாலும் 2019இல் லோக்சபா தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பு தான் இந்த கட்டுமானத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. இதில் பிரதமர் மோடி, அப்போதைய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தாமதம்: சுமார் 224.24 ஏக்கரில் ரூ.1,264 கோடியில் இந்த மருத்துவமனை கட்டப்படும் என அறிவிக்கப்பட்டது. அடிக்கல் நாட்டப்பட்ட போதிலும் இதன் கட்டுமானம் தொடங்கப்படவில்லை.. வெறும் சுற்றுச்சுவர் மட்டுமே கட்டி முடிக்கப்பட்ட நிலையில், கட்டுமானம் நடக்கவில்லை. இது அடுத்தடுத்த வந்து தேர்தல்களில் பேசுபொருளும் ஆனது குறிப்பிடத்தக்கது. இந்தச் சூழலில் தான் சுகாதாரத்துறை அமைச்சர் ஜேபி நட்டா இதற்கு விளக்கமளித்துள்ளார்.












Click it and Unblock the Notifications