ஹிட் அடித்த வந்தே பாரத்.. அடுத்து ரெடியாகும் "வந்தே பாரத் மெட்ரோ.." என்ன வித்தியாசம்! என்ன ஸ்பெஷல்
டெல்லி: வந்தே பாரத் ரயில்களுக்கு மிகப் பெரியளவில் வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், மிக விரைவில் வந்தே பாரத் மெட்ரோவை இந்தியன் ரயில்வே அறிமுகம் செய்ய உள்ளது.
உலகெங்கும் மிகவும் விரிவான ரயில் நெட்வொர்க்குகளை கொண்ட நாடுகளில் ஒன்றாக இந்தியன் ரயில்வே உள்ளது. மேலும், சர்வதேச அளவில் அதிகப்படியான ஊழியர்களைக் கொண்ட அமைப்பாகவும் இந்தியன் ரயில்வே இருக்கிறது.

உட்கார பெரிய இடம், கொஞ்ச நேரம் நடக்கலாம், கழிப்பறை என்று பல்வேறு வசதிகள் இருக்கும் நிலையில், ரயில் பயணங்களையே பலரும் விரும்புகிறார்கள். இதன் காரணமாகவே பல மாதங்களுக்கு முன்பே ரயில் டிக்கெட்கள் விற்றுத் தீர்ந்து விடுகிறது.
வந்தே பாரத்: நாட்டின் ஒரு பகுதியில் இருந்து எந்தவொரு பகுதிக்கும் எளிதாகச் சென்று சேரும் வகையில் மிகவும் விரிவான ரயில் நெட்வொர்க்கை கொண்ட நாடாக இந்தியா இருக்கிறது. நமது நாட்டில் கிட்டத்தட்ட அனைத்து முக்கிய நகரங்களுக்கு இடையேயும் ரயில் சேவை இருக்கவே செய்கிறது. இருப்பினும், தொழில்நுட்ப ரீதியாகவும் வசதிகள் ரீதியாகவும் இந்தியன் ரயில்வே பின்தங்கி இருப்பதாகப் புகார்கள் இருந்து கொண்டே இருந்தது. இதனால் நடுத்தட்டு வர்க்கத்தினரும் விமானங்கள் பக்கம் போவதாகச் சொல்லப்படுகிறது.
இதற்குப் பதிலளிக்கும் வகையில் முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட வந்தே பாரத் ரயிலை இந்தியன் ரயில்வே அறிமுகப்படுத்தியது. முற்றிலும் குளிர்சாதன வசதி, தானியங்கி கதவுகள், அதிவேக வைபை வசதிகளைக் கொண்ட ரயிலாக இந்த வந்தே பாரத் ரயில்கள் இருக்கிறது. இப்போது நாட்டில் சுமார் 15 வழித்தடங்களில் வந்தே பாரத் இயக்கப்படும் நிலையில், நாடு முழுக்க 150 வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்களை இயக்க முடிவு செய்துள்ளனர்.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரைச் சென்னை- பெங்களூர்- மைசூர், சென்னை கோவை என இரு வழித்தடங்களில் வந்தே பாரத் இயக்கப்படுகிறது. இந்த இரண்டிற்கும் அட்டகாசமான வரவேற்பு கிடைத்துள்ளது. இதனிடையே வந்தே பாரத் குறித்து அட்டகாசமான ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதாவது இந்தாண்டு இறுதிக்குள் வந்தே பாரத் மெட்ரோவை அறிமுகப்படுத்த உள்ளதாக ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் அறிவித்துள்ளார்.

வந்தே பாரத் மெட்ரோ: இந்த வந்தே பாரத் மெட்ரோ குறைந்த விலையில் முக்கிய நகரங்களை இணைக்கும் மெட்ரோவாக இருக்கும். 100 கிமீ குறைவான தூரத்தில் இருக்கும் முக்கிய நகரங்களை இணைக்கும் குறுகிய தூர மெட்ரோ ரயில் நெட்வொர்க்காக வந்தே பாரத் மெட்ரோ இருக்கும்.
உள்ளூர் ரயில்களில் நெரிசலைக் குறைக்க வந்தே பாரத் மெட்ரோ உதவும்.. வரும் டிசம்பர் மாதத்திற்குள் இந்த வந்தே பாரத் மெட்ரோ தயாராகிவிடும் என்றும் அவர் தெரிவித்தார். வந்தே பாரத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்தே இந்த வந்தே பாரத் மெட்ரோவுக்கான ஐடியா வந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்தாண்டு இறுதியில் வந்தே பாரத் மெட்ரோ பயன்பாட்டிற்கு வர உள்ளது.
வந்தே மெட்ரோ 100 கிலோமீட்டருக்கும் குறைவாக இருக்கும் நகரங்களுக்கு இடையே இயங்கும். அதாவது இது வந்தே பாரத் எக்ஸ்பிரஸின் குறுகிய தூர வெர்ஷனாக இருக்கும். ஒரு நாளைக்கு நான்கு, ஐந்து முறை இயக்கப்படுவது போல இதன் ரூட்கள் தேர்வு செய்யப்படும். இதன் மூலம் விரைவாக ஒரு நகரத்தில் இருந்து மற்றொரு நகரத்திற்குச் செல்ல முடியும்.
இதில் மெட்ரோ ரயிலைப் போன்று எட்டு பெட்டிகள் இருக்கும். சாதாரண வந்தே பாரத் ரயில்கள் 16 பெட்டிகள் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. வேலை தேடும் இளைஞர்கள், மாணவர்கள் நேரத்தை இந்த வந்தே பாரத் மெட்ரோ கணிசமாக மிச்சப்படுத்தும்.
இதற்காக எட்டு பெட்டிகள் கொண்ட வந்தே பாரத் ரயில்களுக்கான ரேக்குகளின் உற்பத்தியை விரைவில் தொடங்குமாறு ஐசிஎஃப் தொழிற்சாலையிடம் இந்தியன் ரயில்வே கேட்டுக் கொண்டுள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications