கத்தாரில் இந்தியர்கள் தண்டனை குறைப்பு.. அடுத்து "அந்த" விஷயத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு! பரபர
டெல்லி: கத்தார் சிறையில் இருந்த இந்தியர்களின் மரண தண்டனை காலம் குறைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த வழக்கில் அடுத்து என்ன நடக்கும் என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான கத்தாரில், இந்தியக் கடற்படையின் முன்னாள் வீரர்கள் எட்டு பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இதற்கான பின்னணி குறித்த தகவல்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கத்தாரில் உள்ள தஹ்ரா குளோபல் டெக்னாலஜிஸ் மற்றும் கன்சல்டன்சி சர்வீசஸ் என்ற நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த எட்டு இந்தியர்கள், உளவு பார்த்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டனர். கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
கத்தார்: இந்த வழக்கு கத்தார் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. கடந்த மாதம் இறுதியில், அந்த எட்டு பேருக்கும் மரண தண்டனை வழங்கப்பட்டது. இந்த தீர்ப்பை இந்திய அரசு ஏற்கவில்லை. மேல்முறையீடு செய்யப்படும் என்று அறிவித்தது. இந்திய அரசு மேல்முறையீட்டு மனுவை ஆய்வு செய்து வருவதாகவும் அது விரைவில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்றும் கத்தார் நீதிமன்றம் சில மாதங்களுக்கு முன்பு தெரிவித்திருந்தது,
கைது செய்யப்பட்ட அனைவரும் இந்தியக் கடற்படையின் முன்னாள் வீரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்கள் கத்தாரில் உள்ள நீர்மூழ்கிக் கப்பல் தொடர்பான ரகசியத் தகவல்களை இஸ்ரேலுக்கு அனுப்பியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டதாகக் கூறப்பட்டது. இருப்பினும், கத்தார் தரப்பில் அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவுமே வெளியாகவில்லை.
வெளியுறவு அமைச்சகம்: இதற்கிடையே இந்தியா சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில், அதை ஏற்ற கத்தார் அரசு மரண தண்டனையைச் சிறைத் தண்டனையாகக் குறைத்தது. விரிவான தீர்ப்பு இன்னும் வெளியாகவில்லை என்ற போதிலும், அடுத்து தேவையான நடவடிக்கைகளை எடுக்கத் தயாராக உள்ளதாக வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த வழக்கின் விசாரணையின் ரகசியம் மற்றும் முக்கிய தன்மை காரணமாக, இந்த நேரத்தில் மேற்கொண்டு எந்த கருத்தையும் கூறுவது பொருத்தமாக இருக்காது என்றும் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. வெளியுறவுத் துறை அமைச்சகம் மேலும் கூறுகையில், "கத்தாருக்கான நமது தூதுவர் மற்றும் அதிகாரிகள் குடும்ப உறுப்பினர்களுடன் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர்.
இந்தியா நிலைப்பாடு: இந்த விஷயத்தின் தொடக்கத்தில் இருந்து நாங்கள் அவர்களுக்கு ஆதரவாக இருந்தோம், மேலும் அனைத்து தூதரக மற்றும் சட்ட உதவிகளையும் நாங்கள் தொடர்ந்து வழங்குவோம்" என்று அதில் கூறப்பட்டுள்ளது. இந்தியா கடந்த சில மாதங்களுக்கு முன்பு மேல்முறையீடு செய்த போதிலும், இப்போது தான் இந்த தீர்ப்பு வந்துள்ளது.
அதாவது கடந்த டிசம்பர் 1 ஆம் தேதி துபாயில் நடந்த உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் கத்தாரின் எமிர் ஷேக் தமீம் பின் ஹமத் அல்-தானி சந்தித்துப் பேசிய நிலையில், இந்த தீர்ப்பு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அடுத்து என்ன: அடுத்து கத்தாரில் இருக்கும் இந்தியர்களைத் தாய்நாட்டிற்கு அழைத்து வருவது தான் இந்தியாவின் திட்டம். இந்தியாவிற்கும் கத்தாருக்கும் இடையே குற்றவாளிகளை மாற்றிக் கொள்ளும் ஒப்பந்தம் இருக்கும் நிலையில், அதன் மூலம் அந்த 8 முன்னாள் கடற்படை அதிகாரிகளை இந்தியாவிற்கு அழைத்து வர இந்தியா திட்டமிட்டுள்ளது. அவர்கள் எஞ்சிய சிறை காலத்தை இந்தியச் சிறைகளில் அனுபவிப்பார்கள்.
இரு நாடுகளும் கடந்த 2014 ஒப்பந்தம் ஒன்றைக் கையெழுத்திட்டது. அதில் இரு நாடுகளைச் சேர்ந்த கைதிகளும் எஞ்சியிருக்கும் தண்டனையை தங்கள் சொந்த நாட்டில் அனுபவிக்கலாம்.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications