வயநாடு தொகுதியில் களமிறங்கும் பிரியங்கா காந்தி.. எடுத்தவுடன் முதலில் சொன்னது இதுதான்.. அடடே சூப்பர்
டெல்லி: லோக்சபா தேர்தலில் ரேபரேலி, வயநாடு என இரண்டு தொகுதிகளிலும் ராகுல் காந்தி வெற்றி பெற்ற நிலையில், இரண்டில் ஒரு தொகுதியை அவர் ராஜினாமா சூழல் ஏற்பட்டது. அவர் வயநாடு தொகுதியை ராஜினாமா செய்துள்ளதால் அங்கு விரைவில் இடைத்தேர்தல் நடக்கிறது. அதில் பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய அவர் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் இந்தியா கூட்டணி 232 இடங்களில் வென்றது. இதில் காங்கிரஸ் கட்சி 99 சீட்களில் வென்று அதிகாரப்பூர்வ எதிர்க்கட்சியாக உருவெடுத்துள்ளது.

காங்கிரஸின் ராகுல் காந்தி இந்த லோக்சபா தேர்தலில் கேரள மாநிலம் வயநாடு மற்றும் உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள ரேபரேலி என இரு தொகுதிகளிலும் போட்டியிட்டார்.
இரண்டு தொகுதிகள்: இரண்டு தொகுதிகளிலும் ராகுல் காந்தி அபார வெற்றி பெற்றார். இரண்டிலும் வெற்றி பெற்றதால் ராகுல் காந்தி ஒரு தொகுதியை ராஜினாமா செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டது. ஏனென்றால் நமது நாட்டில் உள்ள தேர்தல் விதிகளின்படி ஒருவர் இரண்டு தொகுதிகளில் போட்டியிடலாம். ஆனால், இரண்டிலும் வென்றால் அதில் ஒரு தொகுதியை ராஜினாமா செய்ய வேண்டும்.
அதுவும் தேர்தல் முடிவுகள் வெளியாகி 14 நாட்களில் எந்த தொகுதியை தக்க வைக்கலாம் என்பது குறித்த முடிவை எடுக்க வேண்டும். இந்த காலக்கெடு நாளை முடிகிறது. இதனால் ராகுல் காந்தி தீவிர ஆலோசனையில் ஈடுபட்டார். ஏற்கனவே, அவர் ரேபரேலி மற்றும் வயநாடு ஆகிய இரு தொகுதிகளுக்கும் நேரில் சென்று மக்களைச் சந்தித்தார்.
ராஜினாமா: மேலும், மூத்த தலைவர்கள் உடனும் ஆலோசனை நடத்தினார். இதையடுத்து அவர் வயநாடு தொகுதியை ராஜினாமா செய்ய முடிவு செய்தார்.. இது தொடர்பான அறிவிப்பை இன்று அவர் வெளியிட்டார். ரேபரேலி தொகுதியைத் தக்க வைக்கும் ராகுல் காந்தி, வயநாடு தொகுதியை ராஜினாமா செய்வார் என அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பைக் காங்கிரஸ் தலைவர் கார்கே, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி இணைந்து வெளியிட்டனர்.
இப்போது வயநாடு தொகுதி எம்பி பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்துள்ள நிலையில் அங்கு இடைத்தேர்தல் நடைபெறும். இதற்கிடையே இந்த இடைத்தேர்தலில் ராகுல் காந்தியின் சகோதரியும் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளருமான பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என்ற அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிரியங்கா காந்தி பல ஆண்டுகளாகக் காங்கிரஸ் கட்சியில் இருக்கும் போதிலும், அவர் நேரடியாகத் தேர்தலில் களமிறங்குவது இதுவே முதல்முறையாகும்.
பிரியங்கா காந்தி: வயநாடு காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட உடன் செய்தியாளர்களிடம் பேசிய பிரியங்கா காந்தி சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்தார். அவர் கூறுகையில், "வயநாடு தொகுதிக்கு எம்பியாக வாய்ப்பு கிடைப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.. ராகுல் காந்தி இல்லாமல் போய்விட்டாரே என்று வயநாடு மக்களை உணர விடமாட்டேன். வயநாடு தொகுதிக்காக ராகுல் காந்தி எப்போதும் இருப்பார். நான் வயநாடு மக்களுக்காக கடினமாக உழைப்பேன்.. அந்த தொகுதி மக்களுக்காகக் குரல் கொடுப்பேன்.
இருவரும் எம்பி தான்: ரேபரேலி மற்றும் அமேதி தொகுதிக்கும் எனக்கும் கூட நீண்ட உறவு இருக்கிறது. இதை நான் என்றும் மறக்கவே மாட்டேன். ரேபரேலி மற்றும் வயநாடு என இரண்டு தொகுதி மக்களுக்காகவும் நான் இருப்பேன். நானும் ராகுலும் ரேபரேலி, வயநாடு என இரண்டு தொகுதிகளையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறோம் என வைத்துக் கொள்ளுங்கள்" என்று அவர் தெரிவித்தார்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications