"நான் தாங்க ஜனாதிபதி!" சுப்ரீம் கோர்டில் வழக்கு தொடர்ந்த நபர்.. கடுப்பான நீதிபதி! நடந்தது என்ன
டெல்லி: சுப்ரீம் கோட்டில் சுற்றுச்சூழல் ஆர்வலர் ஒருவர் தொடர்ந்த வழக்கு பலரது கவனத்தையும் ஈர்த்து உள்ளது.
இந்தியா மட்டுமின்றி உலகின் பல்வேறு நாடுகளிலும் சுற்றுச்சூழல் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டு வருகிறது. இதனால் பருவநிலை மாற்றம் தொடங்கி பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகிறது.
வெளுத்து வாங்கும் வெயில், ஊரையே நாசமாக்கும் அதி தீவிர கனமழை என அனைத்திற்கும் இது தான் காரணம். இதைத் தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

வழக்கு
இந்தச் சூழலில் தன்னை இந்தியக் குடியரசுத் தலைவராக நியமிக்க வேண்டும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர் ஒருவர் உச்ச நீதிமன்றத்தில் சமீபத்தில் மனுத் தாக்கல் செய்தார். கிஷோர் ஜெகநாத் சாவந்த் என்ற சுற்றுச்சூழல் ஆர்வலர் இந்த வழக்கைத் தாக்கல் செய்து இருந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், கிஷோர் ஜெகநாத் சாவந்த்திற்கு நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

அற்பமானது
"இது அற்பமானது" என்று குறிப்பிட்ட இந்த மனுவை நிராகரித்த நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட் மற்றும் ஹிமா கோஹ்லி அமர்வு, நீதிமன்றத்தின் செயல்முறையைச் சிலர் இப்படி தவறாகப் பயன்படுத்துவதாகவும் தெரிவித்தனர். வரும் காலத்தில் இது போல இவர் தொடரும் மனுக்களை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளக் கூடாது என்றும் பதிவுத்துறைக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.

வாதம்
இந்த வழக்கில் நீதிபதிகள், "இந்த மனு அற்பமானது.. எந்தவொரு பொறுப்புணர்வும் இல்லாமல் மிக உயர்ந்த அரசியலமைப்பு பதவிக்கு எதிராகக் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு உள்ளன" என்றார். மேலும், இது தொடர்பாக அவர் கூறியுள்ள மோசமான கருத்துக்களைப் பதிவில் இருந்து நீக்குமாறு பதிவுத்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விசாரணை போது தன்னை குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட அனுமதிக்கவில்லை என்று கூறி இருந்தார்.

கோபமடைந்த நீதிபதிகள்
இதைக் கேட்டவுடன் கோபமடைந்த நீதிபதிகள், "இந்தியக் குடியரசுத் தலைவர் மீது எப்படி இதுபோன்ற புகார்களைக் கூறலாம்" என்று கேட்டார். இருப்பினும், மனுதாரர், "இந்த வழக்கு நாட்டில் ஜனநாயக அரசியலமைப்பின் அடிப்படை நெறிமுறைகளை மறுவரையறை செய்யும் என்று நான் நினைக்கிறேன்.நாட்டின் குடிமகன் என்ற முறையில் எனக்கு இதில் முழு உரிமை உள்ளது" என்றும் அவர் தெரிவித்தார்.

நேரத்தை வீணடிக்கக் கூடாது
அதற்கு நீதிபதிகள், "ஆனால், இதுபோன்ற அற்பமான மனுக்களை தாக்கல் செய்ய உங்களுக்கு உரிமை இல்லை. நீங்கள் வெளியே என்ன வேண்டுமானாலும் பேசலாம், ஆனால் நீங்கள் நீதிமன்றத்திற்கு வந்து பொது நேரத்தை வீணடிப்பதை ஏற்க முடியாது. உங்களுக்கு இருக்கும் அரிவை விழிப்புணர்வை ஏற்படுத்தப் பயன்படுத்துங்கள்.. நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிக்க வேண்டாம்" என்றனர்.












Click it and Unblock the Notifications