கிரெடிட் கார்டு மூலம் அக்டோபரில் உச்சபட்ச செலவு செய்த இந்தியர்கள்.. ஏன் என்னாச்சு.. எவ்வளவு?
டெல்லி: கடந்த அக்டோபர் மாதம் கிரெடிட் கார்டுகள் மூலம் பலர் செலவு செய்துள்ள தொகை அதிகரித்து புதிய உச்சத்தை பெற்றுள்ளது.
கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு என இரு வகையான கார்டுகள் மூலம் பணப்பரிவர்த்தனைகள் நடைபெறுகின்றன. கிரெடிட் கார்டு என்பது கடன் அட்டை, டெபிட் கார்டு என்பது வங்கிக் கணக்கில் உள்ள பணத்திலிருந்து செலவு செய்வது.

மாத சம்பளதாரர்கள், வியாபாரிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது கிரெடிட் கார்டுகள். அடுத்த மாதம் ஊதியம் வருவதற்குள் தேவையானதை செலவு செய்து பின்னர் அந்த பணத்தை அடுத்த மாதம் வட்டியுடன் செலுத்துவது. கிட்டத்தட்ட வட்டிக்கு கடன் வாங்குவதுதான்.
ஆனால் அந்த கெடு தேதியில் கடனை செலுத்தவில்லை என்றால் வட்டி, வட்டிக்கு வட்டி, அதற்கு வட்டி என அசலை விட வட்டியே அதிகமாக இருக்கும். எனவே இந்த கடன் அட்டைகளை பார்த்து செலவு செய்ய வேண்டும். நம் சக்திக்கு மீறி செலவு செய்யக் கூடாது என்பது பொருளாதார நிபுணர்களின் அறிவுரையாகும்.
நவம்பர் மாதம் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது. இதனால் பலர் முன்கூட்டியே அக்டோபர் மாதத்திலேயே துணிமணிகள், நகைகளை வாங்குவது வழக்கம். அது போல் பட்டாசுகளுக்கு முன் கூட்டியே சில்லரை விலையில் ஆர்டர் போடுதல் உள்ளிட்டவை அக்டோபர் மாதத்தில் நடந்தது. இதனால் அந்த மாதம் கடன் அட்டை அதிகரித்துள்ளது.
அதன்படி இந்தியர்களின் கிரெடிட் கார்டு செலவுகள் கடந்த செப்டம்பர் மாதம் 1.42 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. இந்த நிலையில் அக்டோபரில் 25.35 சதவீதம் உயர்ந்தது. இதனால் அந்த செலவு தொகை 1.78 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. கடந்த அக்டோபரில் பாயிண்ட் ஆப் சேல் மூலம் 57,744 கோடி ரூபாய்க்கு பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
கிரெடிட் கார்டு வாயிலான இ காமர்ஸ் எனப்படும் மின்னணு பரிவர்த்தனைகளின் மதிப்பு 1.21 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. அது போல் உள்நாட்டு வங்கிகளால் வழங்கப்பட்ட கிரெடிட் கார்டுகளின் எண்ணிக்கை கடந்த செப்டம்பரில் 9.30 கோடியாக இருந்தது. அக்டோபரில் 9.47 கோடியாக அதிகரித்துள்ளது. அதாவது 17 லட்சம் கார்டுகள் அக்டோபரில் கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது.
கிரெடிட் கார்டுகள் பயன்படுத்துவதில் அதிக வாடிக்கையாளர்களை கொண்ட வங்கிகளின் தரவரிசையில் எச்டிஎஃப்சி வங்கி முதலிடத்தில் உள்ளது. அக்டோபர் மாதம் இந்த வங்கியின் கிரெடிட் கார்டு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 1.91 கோடியாகும். இதைத் தொடர்ந்து அடுத்த இடத்தில் எஸ்பிஐ உள்ளது. இந்த வங்கியில் 1.81 கோடி, ஐசிஐசிஐ 1.60 கோடி, ஆக்ஸிஸ் 1.33 கோடி என வாடிக்கையாளர்களை பெற்றுள்ளன.
அக்டோபர் மாதம் எச்டிஎஃப்சி வங்கி மூலம் 45,173 கோடி ரூபாயும் ஐசிஐசிஐ வங்கி மூலம் 34,158 கோடி ரூபாயும், ஆக்சிஸ் வங்கி மூலம் 21,729 ரூபாயும், எஸ்பிஐ சார்பில் 35,406 ரூபாயாகவும் கிரெடிட் கார்டு செலவுகள் உள்ளன.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications