ரத்தன் டாடா வாங்கிய சம்பளம்.. ஒரு நிமிடத்திற்கு எவ்வளவு வாங்கியிருக்கார் பாருங்க.. ஆச்சர்யமா இருக்கே
டெல்லி: நாடறிந்த தொழில் அதிபர் ரத்தன் டாடா நேற்று முன் தினம் இரவு காலமானார். டாடா குழு தலைவராக கவுரவ பொறுப்பு வகித்த போது அவர் ஆண்டுக்கு எவ்வளவு வருமானம் பெற்றார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. பிற கார்ப்பரேட் தலைவர்களுடன் ஒப்பிடும் போது இவர் பெற்ற ஊதியம் மிகவும் வியக்க வைக்கும் படியாக அமைந்துள்ளது.
உலகின் மிகப்பெரிய தொழில் குழுமங்களில் ஒன்றாக டாடா குழுமம் உள்ளது. சுமார் 100 நாடுகளில் 30 க்கும் மேற்பட்ட கம்பெனிகளை டாடா குழுமம் நடத்தி வருகிறது. டாடா குழுமத்தின் மதிப்பு மட்டும் 403 பில்லியன் டாலர் ஆகும். டாடா குழுமத்தின் தலைவராக ரத்தன் டாடா 1991-2012 ஆம் ஆண்டு வரை பதவி வகித்தார்.

இடைக்கால தலைவராக டிசம்பர் 2016 ஆம் ஆண்டு முதல் ஜனவரி 2017 வரை இரண்டு மாதங்கள் இருந்தார். டாடா குழுமத்தின் கவுரவ தலைவராக இருந்த போது ரத்தன் டாடா ஆண்டுக்கு ரூ.2.5 கோடி சம்பளமாக பெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்படி பார்த்தால் மாதம் ஒன்றிற்கு 28.83 லட்ச ரூபாய் சம்பாதித்துள்ளார். ஒரு மணி நேரத்திற்கு என எடுத்துக்கொண்டால் ரூ.2,900-ம், ஒரு நிமிடம் என பார்த்தால் ரூ. 48-49 வரை சம்பாதித்து இருக்கிறார்.
பிற கார்பரேட் நிறுவனங்களுடன் ஒப்பிடும் போது ரத்தன் டாடா பெற்ற சம்பளம் பலருக்கும் வியப்பையே கொடுத்துள்ளது. ஏனெனில் மிக குறைவான தொகையையே பெற்று இருக்கிறார். பல ஐடி நிறுவனங்களில் உயர் பொறுப்பில் இருப்பவர்கள் கூட இதை விட அதிகமாக சம்பாதித்து வருகிறார்கள்.
ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானியை எடுத்துக்கொண்டால் ஒரு நிமிடத்திற்கு ரூ.3.09 லட்சம் சம்பாதிக்கிறார். இதை ஒரு நொடிக்கு என மாற்றினால் ரூ.51,120 அம்பானி பெறுகிறார். முகேஷ் அம்பானி ஒரு நொடிக்கு பெற்ற வருமானத்தை ஒரு நாளைக்குதான் ரத்தன் டாடா வாங்கியிருக்கிறார்.
ரத்தன் டாடாவின் மறைவை தொடர்ந்து டாடா குழும பொறுப்பின் சேர்மன் பொறுப்பு யார் வசம் செல்லும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ரத்தன் டாடாவின் ஒன்றுவிட்ட சகோதரர் நோயல் டாடா, தலைமைக்கான போட்டியில் முக்கிய நபராக உள்ளார். நோயலுக்கு மாயா, நெவில் மற்றும் லியா டாடா ஆகிய மூன்று வாரிசுகள் உள்ளனர்.
86 வயதான ரத்தன் டாடா நேற்று முன் தினம் இரவு உயிரிழந்தார். இவரது மறைவு நாடு முழுவதும் தலைவர்கள், தொழில் அதிபர்கள் மற்றும் மக்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தியது. ரத்தன் டாடாவுக்கு கோடிக்கணக்கான மக்கள் சமூகவலைதளங்களில் இரங்கல் பதிவிட்டனர். மும்பையில் வைக்கப்பட்டு இருந்த ரத்தன் டாடா உடலுக்கு நேற்று ஆயிரக்கணக்கானோர் திரண்டு அஞ்சலி செலுத்தினர்.
அவரது உடல் அரசு மரியாதையுடன் அஞ்சலி செலுத்தப்பட்டது. நேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்பட அரசியல் கட்சி தலைவர்களும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்கள். பிரபல தொழில் அதிபர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர். மும்பையில் உள்ள என்சிபிஏ அரங்கில் வைக்கப்பட்ட ரத்தன் டாடா உடல் நேற்று அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டடது.












Click it and Unblock the Notifications