காப்பாற்ற களமிறங்கிய இந்திய கடற்படை.. உள்ளே இருப்பது 15 இந்தியர்கள் ஆச்சே.. அரபிக்கடலில் திக்திக்
டெல்லி: அரபிக்கடலில் பதற்றமான சம்பவம் அதிகரித்து வரும் நிலையில் அங்கே இந்தியர்கள் இருந்த கப்பல் கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செங்கடல் மற்றும் அரபிக் கடல் பகுதிகளில் வணிக கப்பல்கள் மீது சமீப காலங்களாக நடக்கும் தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. ஹவுதி படைகள் மீது சமீப காலங்களில் தாக்குதல்கள் அதிகரித்து வருகிறது.

இதற்கிடையே இப்போது அரபிக் கடலில் பகுதியில் மற்றொரு பகீர் சம்பவம் இப்போது நடந்துள்ளது. கப்பலுக்கு மிக அருகே அதாவது 20 மீட்டருக்குள் நான்கு சிறிய படகுகளில் வந்ததால் பதிலடி கொடுத்ததாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இதில் 4இல் மூன்று படகுகள் மூழ்கடிக்கப்பட்டதாக அமெரிக்கா தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அரபிக்கடலில் ஷாக் சம்பவம்: மற்றொரு ஷாக் சம்பவம் தான் இப்போது அரபிக்கடலில் நடந்துள்ளது. லைபீரியக் கொடியுடன் அரபிக்கடலில் சென்ற கப்பல் கடத்தப்பட்டது. அந்தக் கப்பலில் குறைந்தது 15 இந்தியர்கள் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்தக் கப்பலை நோக்கி இப்போது இந்தியக் கடற்படைக்குச் சொந்தமான கப்பல் நகர்ந்து வருகிறது. மேலும், கடற்படைக்குச் சொந்தமான விமானங்களும் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகக் கடற்படை தெரிவித்துள்ளது.
MV Lila Norfolk என்ற கப்பல் சோமாலியாவின் கடற்கரைக்கு அருகில் கடத்தப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த தகவல்கள் கடற்படைக்கு வியாழக்கிழமை மாலை தகவல் கிடைத்தது. இந்தியக் கடற்படையின் போர்க்கப்பலான ஐஎன்எஸ் சென்னை அங்கே திசை திருப்பப்பட்டுள்ளது. கடத்தப்பட்ட கப்பலுக்கு உதவியாக நிறுத்தப்பட்டது. கடற்படை விமானம் ஒன்று கடத்தப்பட்ட கப்பலைத் தொடர்பு கொண்டுள்ளது.
என்ன நடந்தது: கடந்த வியாழக்கிழமை மாலை ஐந்து முதல் ஆறு ஆயுதம் ஏந்திய நபர்கள் ஏறியதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அரேபியக் கடல் பகுதியில் சமீபகாலமாகத் தொடர் தாக்குதல்களுக்குப் பிறகு இந்தியக் கடற்படை தனது கண்காணிப்பை அதிகப்படுத்தியுள்ளது. இந்த வாரத் தொடக்கத்தில் வடக்கு மற்றும் மத்திய அரபிக்கடலில் அதிக அளவில் மீன்பிடி கப்பல்கள் மற்றும் கப்பல்களில் வந்ததாகவும் அதை இந்தியக் கடற்படை கண்காணித்ததாகவும் கடற்படை தெரிவித்துள்ளது.
முன்னதாக கடந்த வாரம் செங்கடல் பகுதியிலும் கடந்த சில கண்டெய்னர் கப்பலை ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி குழு தாக்கியுள்ளது. இதற்கு அமெரிக்கக் கடற்படை பதிலடி கொடுத்த நிலையில், அந்நாட்டின் ஹெலிகாப்டர்கள் ஹவுதியின் மூன்று படகுகளை மூழ்கடித்துள்ளது. முதலில் ஹவுதிகள் அமெரிக்க ஹெலிகாப்டர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய நிலையில், பதிலுக்குத் தற்காப்புக்காகத் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது..
கப்பலுக்கு மிக அருகே அதாவது 20 மீட்டருக்குள் நான்கு சிறிய படகுகளில் வந்ததால் பதிலடி கொடுத்ததாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இதில் 4இல் மூன்று படகுகள் மூழ்கடிக்கப்பட்டது. அதேநேரம் நான்காவது கப்பல் அங்கிருந்து தப்பிச் சென்றது குறிப்பிடத்தக்கது.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications