சிவப்பு மண்டலமாக இருந்தாலும் ஓகே.. ஐடி உள்ளிட்ட பல நிறுவனங்கள் இயங்கலாம்.. அரசு உத்தரவு முழு விவரம்
டெல்லி: நாடு முழுக்க மேலும் 2 வாரங்களுக்கு அதாவது மே 18ம் தேதிவரை லாக்டவுன் நீட்டிக்கப்பட்டுள்ளது என்று மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
Recommended Video
கொரோனா பாதிப்பு அளவை வைத்து, சிவப்பு மண்டலம், ஆரஞ்சு மற்றும் பசுமை மண்டலம் என பிரிக்கப்பட்டுள்ளது. இதில் சிவப்பு மண்டலம், அதிகம் பாதிக்கப்பட்ட பகுதி, பசுமை மண்டலம் சுத்தமாக பாதிப்பே இல்லாத பகுதியாகும்.
சென்னை, பெங்களூர், மும்பை, டெல்லி உட்பட அனைத்து மெட்ரோ நகரங்களும் சிவப்பு மண்டலத்தில் உள்ளன. சிவப்பு மண்டலத்திற்கு மே 4ம் தேதி முதல் சில சலுகைகள் கொடுக்கப்பட்டுள்ளன. கண்டெய்ண்மென்ட் பகுதிகளுக்கு மட்டும் இந்த தளர்வு பொருந்தாது. அதை தவிர்த்த பிற பகுதிகள் அது சிவப்பு மண்டலமாகவே இருந்தாலும் இந்த சலுகைகள் உண்டு. அது என்ன பார்க்கலாமா?

வாகன இயக்கம்
தனிநபர்கள் மற்றும் வாகனங்களின் இயக்கத்திற்கு அனுமதி பெற வேண்டும். அப்படி அனுமதி பெற்ற வாகனங்களுக்கும் கட்டுப்பாடு உண்டு. அதாவது, நான்கு சக்கர வாகனங்களில் அதிகபட்சம் 2 நபர்கள் (ஓட்டுநரைத் தவிர்த்து), மற்றும் இரு சக்கர வாகனங்களில் ஒருவர் மட்டும் பயணிக்க அனுமதி கொடுக்கப்படுகிறது. நகர்ப்புறங்களில் உள்ள தொழில்துறை நிறுவனங்கள், அதாவது, சிறப்பு பொருளாதார மண்டலங்கள் (SEZ கள்), ஏற்றுமதி சார்ந்த யூனிட்டுகள், தொழில்துறை எஸ்டேட்கள் மற்றும் கட்டுப்பாட்டுடன் கூடிய தொழில்துறை டவுன்ஷிப்களுக்கு அனுமதி கொடுக்கப்படும்.

ஹார்டுவேர்
மருந்துகள், மருத்துவ சாதனங்கள், அவற்றின் மூலப்பொருள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் உற்பத்தி யூனிட்டுகள் இயங்க அனுமதிக்கப்படும். ஹார்டுவேர் உற்பத்தி, சணல் தொழில், மற்றும், பேக்கேஜிங் பொருட்களின் உற்பத்தி யூனிட்டுகளுக்கு அனுமதி வழங்கப்படும். நகர்ப்புறங்களில் கட்டுமான நடவடிக்கைகள், (தொழிலாளர்கள் அங்கேயே இருக்க வேண்டும், எந்தவொரு தொழிலாளர்களையும் வெளியில் இருந்து அழைத்து வரக் கூடாது) அனுமதிக்கப்பட்டுள்ளது.

ஆன்லைன் விற்பனை
தனித்தனி கடைகளாக இருந்தால் நகர்ப்புறங்களில் கூட இயங்கலாம். அத்தியாவசியமற்ற பொருட்களை விற்பனை செய்யும் கடைகளுக்கும் இது பொருந்தும். இ-காமர்ஸ் நிறுவனங்கள் பொருட்களை விற்பனை செய்யலாம். ஆனால், சிவப்பு மண்டலங்களில், அத்தியாவசிய பொருட்களை வினியோகம் செய்ய மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன. தனியார் அலுவலகங்கள் தேவைக்கேற்ப 33% தொழிலாளர்களுடன் செயல்பட முடியும். மற்ற பணியாளர்கள் வீட்டிலிருந்து வேலை பார்க்கலாம்.

ஊழியர்கள் எண்ணிக்கை
அனைத்து அரசு அலுவலகங்களும், துணைச் செயலாளர் மற்றும் அதற்கு மேற்பட்ட மூத்த அதிகாரிகளுடன் செயல்படும், மீதமுள்ள ஊழியர்கள் தேவைக்கேற்ப 33% வரை அலுவலகம் வரலாம். பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு சேவைகள், சுகாதாரம் மற்றும் குடும்ப நலன், காவல்துறை, சிறைச்சாலைகள், வீட்டுக் காவலர்கள், சிவில் பாதுகாப்பு, தீயணைப்பு மற்றும் அவசர சேவைகள், பேரிடர் மேலாண்மை மற்றும் தொடர்புடைய சேவைகள், தேசிய தகவல் மையம் (என்ஐசி), சுங்க, இந்திய உணவுக் கழகம் (எஃப்சிஐ), தேசிய கேடட் கார்ப்ஸ் (என்.சி.சி), நேரு யுவக் கேந்திரா (என்.ஒய்.கே) மற்றும் நகராட்சி சேவைகளுக்கான பணியாளர்கள் முழு அளவில் வரலாம். எந்த தடையும் இன்றி செயல்படும்.

கிராமங்கள்
சிவப்பு மண்டலங்களில் ஏராளமான இன்னும் பிற நடவடிக்கைகளும் அனுமதிக்கப்படுகின்றன. சிவப்பு மண்டல மாவட்டங்களில் உள்ள கிராமங்களில் என்றால் மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் பணிகள், உணவு பதப்படுத்தும் யூனிட்டுகள் மற்றும் செங்கல் சூளைகள் உள்ளிட்டை செயல்படலாம். கிராமப்புறங்களில், வேறுபாடு இல்லாமல், வணிக வளாகங்களைத் தவிர அனைத்து வகை கடைகளும் இயங்க அனுமதிக்கப்படுகின்றன. விவசாய விநியோகச் சங்கிலியில் பாதிப்பு ஏற்படக் கூடாது. அனைத்து விவசாய நடவடிக்கைகளும், அதாவது விதைப்பு நடவடிக்கை, அறுவடை, கொள்முதல் மற்றும் சந்தைப்படுத்தல் நடவடிக்கைகள் அனுமதிக்கப்படுகின்றன.

மீன்பிடி, கூரியர் சேவை
உள்நாட்டு மற்றும் கடல் மீன்பிடி உள்ளிட்ட கால்நடை வளர்ப்பு நடவடிக்கைகள் முழுமையாக அனுமதிக்கப்படுகின்றன. அவற்றின் சந்தைப்படுத்தல் உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளும் அனுமதிக்கப்படுகின்றன. அனைத்து சுகாதார சேவைகளும் (ஆயுஷ் உட்பட) செயல்பட வேண்டும். மருத்துவ பணியாளர்கள் மற்றும் நோயாளிகளை விமான ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்வது உட்பட. நிதித் துறையின் பெரும்பகுதி செயல்பட்டு வருகிறது. வங்கிகள், வங்கி சாரா நிதி நிறுவனங்கள் (என்.பி.எஃப்.சி), காப்பீடு மற்றும் மூலதன சந்தை நடவடிக்கைகள் மற்றும் கடன் கூட்டுறவு சங்கங்கள் ஆகியவை அடங்கும். அங்கன்வாடிகள் செயல்பாடும் அனுமதிக்கப்பட்டுள்ளது. மின்சாரம், நீர், சுகாதாரம், கழிவு மேலாண்மை, தொலைத்தொடர்பு மற்றும் இணையம் ஆகிய பயன்பாடுகள் செயல்படும். மேலும் கூரியர் மற்றும் அஞ்சல் சேவைகள் செயல்பட அனுமதிக்கப்படும்.

ஐடி கம்பெனிகள்
பெரும்பாலான வணிக மற்றும் தனியார் நிறுவனங்கள் சிவப்பு மண்டல பகுதிகளில் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளன. அச்சு மற்றும் மின்னணு ஊடகங்கள், தகவல் தொழில்நுட்பம் (ஐடி) மற்றும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவைகள், டேட்டா மற்றும் கால் சென்டர்கள், குளிர் பதனம் மற்றும் கிடங்கு சேவைகள், தனியார் பாதுகாப்பு மற்றும் வசதி மேலாண்மை சேவைகள் ஆகியவை செயல்படலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications