வந்தே பாரத் டிக்கெட்டே எகிறுது.. அப்போ புல்லட் ரயில் டிக்கெட் எவ்வளவு? அஸ்வினி வைஷ்னவ் நறுக் பதில்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நமது நாட்டின் முதல் புல்லட் ரயில் திட்டம் மும்பை முதல் அகமதாபாத் வரை நடந்து வரும் நிலையில், அது எப்போது முடிவடையும் என்பது குறித்து ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

நமது நாட்டில் என்ன தான் விரிவான ரயில் நெட்வோர்க் இருந்தாலும் கூட ரயில்களின் வேகம் போதியளவில் இல்லை என்ற விமர்சனம் நீண்ட காலமாக இருந்தது. அதற்குப் பதிலடி தரும் வகையிலேயே வந்தே பாரத் ரயில்களை அறிமுகப்படுத்தப்பட்டது.

What will be the ticket fare of mumbai ahmedabad bullet train


அதற்கு மிகப் பெரிய வரவேற்பு கிடைத்த நிலையில், அடுத்த கட்டமாக புல்லட் ரயில்களும் இந்தியாவிற்கு வரவுள்ளது. அதற்கான கட்டுமானமும் படுவேகமாக நடந்து வருகிறது.

புல்லட் ரயில்: இதற்கிடையே நமது நாட்டின் முதல் புல்லட் ரயில் திட்டம் குறித்து ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்னாவ் சில முக்கிய கருத்துகளைப் பகிர்ந்துள்ளார். புல்லட் ரயில் திட்டம் எப்போது முடியும் என்ற கேள்விக்கு அவர், இந்தியாவின் முதல் புல்லட் ரயில் திட்டம் சிறப்பாக நடந்து வருகிறது என்றும் மும்பை முதல் அகமதாபாத் வரையிலான முதல் ரூட் நமது நாட்டின் இரு முக்கிய பொருளாதார நகரங்களை ஒருங்கிணைக்கும் என்று தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், "புல்லட் ரயில் திட்டம் என்பதைப் பொருளாதாரத்தை ஒருங்கிணைக்கும் திட்டமாக நாம் பார்க்க வேண்டும். இந்தியாவின் கட்டப்பட்டு வரும் புல்லட் ரயிலின் முதல் ரூட் மும்பை, தானே, வாபி, பரோடா, சூரத், ஆனந்த் மற்றும் அகமதாபாத் நகரங்களை இணைக்கிறது. இதன் மூலம் இந்த அனைத்து பொருளாதாரங்களும் ஒரே பொருளாதாரமாக மாறும்.

இந்த திட்டம் முடிந்தால் நீங்கள் சூரத்தில் உங்கள் வீட்டில் காலை உணவைச் சாப்பிட்டுவிட்டு, மும்பைக்குச் சென்று உங்கள் வேலையை முடித்துவிட்டு இரவில் மீண்டும் குடும்பத்துடன் சூரத்தில் டின்னர் சாப்பிடலாம்" என்றார்.

மும்பையில் அமையும் பிரம்மாண்டம்.. ஏர்போர்ட் எல்லாம் தோத்துடும்! நாட்டின் முதல் புல்லட் ரயில் நிலையம்


டிக்கெட் விலை: புல்லட் ரயில் கட்டணம் விமான டிக்கெட் விலையை விடக் குறைவாக இருக்குமா என்ற கேள்விக்கு அவர் நேரடியாகப் பதில் அளிக்கவில்லை. மாறாக, "புல்லட் ரயில் பாதை இருக்கும் எல்லா ரூட்களையும் எடுத்துப் பாருங்கள்.. அங்கே புல்லட் ரயில்களில் பயணிக்கவே சுமார் 90% மக்கள் பயன்படுத்துகிறார்கள்" என்று மட்டும் தெரிவித்தார்.

மும்பை- அகமதாபாத் இடையேயான புல்லட் ரயில் கட்டுமானம் சீராக நடந்து வருவதாகவும் அவர் தெரிவித்தார். கட்டுமானம் தொடங்கி ஆறு மாதங்களில் ஒரு கிலோமீட்டருக்கு ரயில் பாதையை அமைத்துள்ளனர். தொடர்ந்து கட்டுமானம் வேகமாக நடந்த வந்த நிலையில், ஏப்ரல் 2023இல் கட்டுமானம் 50% முடிந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த மும்பை-அகமதாபாத் வழித்தடத்தின் ஒரு பகுதியாக ஏற்கனவே 8 ஆறுகளின் மீது புல்லட் ரயில் செல்ல பாலங்கள் கட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

செலவு எவ்வளவு: இந்த புல்லட் ரயில் திட்டத்திற்கு மொத்தம் ரூ. 1.08 லட்சம் கோடி செலவாகும் என மதிப்பிடப்படுகிறது. அதில் ₹ மத்திய அரசு 10,000 கோடியை வழங்கும் நிலையில், குஜராத் மற்றும் மகாராஷ்டிரா தலா ₹ 5,000 கோடி வழங்குகிறது. மீதமுள்ள தொகையை ஜப்பானின் கடன் - குறைந்தபட்ச வட்டி அதாவது 0.1% வட்டியில் நமக்கு கடனாக வழங்குகிறது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள சபர்மதி மல்டிமோடல் டிரான்ஸ்போர்ட் ஹப்பில் உள்ள இந்தியாவின் முதல் புல்லட் ரயில் நிலையத்தின் படங்களை மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் பகிர்ந்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+