இந்தியாவில் இன்னும் 1 மாதத்திற்கான எல்பிஜிதான் இருக்கு.. அப்போ 1 மாசத்திற்கு பின்? என்ன நடக்கும்?
டெல்லி: ஈரான் போர் உலக நாடுகளை உலுக்கி உள்ளது. மேற்கு ஆசியாவில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், இந்தியாவில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படப்போவதாக கிளம்பிய வதந்திகளால் ஸ்ரீநகர் முதல் கன்னியாகுமரி வரை பெட்ரோல் பங்க்குகளில் மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. உண்மையில் நிலைமை என்ன? இதோ ஒரு நேரடி ரிப்போர்ட்!
"ஐயோ... நாளைக்கு வண்டி ஓடுமா? பெட்ரோல் கிடைக்குமா?" - கடந்த இரண்டு நாட்களாகவே சமூக வலைதளங்களில் பரவி வரும் ஒரு 'மெசேஜ்' இந்தியர்களைப் பதற்றத்தில் ஆழ்த்தியுள்ளது. குறிப்பாக ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் நேற்று மாலை மக்கள் கேன்களுடனும், வாகனங்களுடனும் நீண்ட வரிசையில் காத்திருந்த புகைப்படங்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தின.

ஆனால், அரசு தரப்பில் விசாரித்தால் படம் அப்படியே தலைகீழாக இருக்கிறது. "யாரும் பயப்பட வேண்டாம், நம்மிடம் போதுமான இருப்பு உள்ளது" என மத்திய பெட்ரோலிய அமைச்சகம் அதிரடி விளக்கம் அளித்துள்ளது.
60 நாட்களுக்கு கவலை இல்லை!
மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இந்தியாவின் கச்சா எண்ணெய் இருப்பு முன்பை விட பலமாக உள்ளது.
தற்போது நம்மிடம் 60 நாட்களுக்குத் தேவையான கச்சா எண்ணெய், பெட்ரோல் மற்றும் டீசல் கையிருப்பில் உள்ளது.
இது தவிர, அடுத்த 60 நாட்களுக்குத் தேவையான இறக்குமதிகளும் ஏற்கனவே உறுதி செய்யப்பட்டுள்ளன.
மொத்தமாகப் பார்த்தால், சர்வதேச அளவில் என்ன நடந்தாலும் சரி, அடுத்த 74 நாட்களுக்கு இந்தியர்களுக்கு எரிபொருள் தட்டுப்பாடு என்ற பேச்சுக்கே இடமில்லை.
மேற்கு ஆசியாவில் போர் தொடங்கிய போது 50 நாட்களுக்கு மட்டுமே இருந்த இருப்பு, இப்போது 74 நாட்களாக உயர்த்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
எல்.பி.ஜி (LPG) சிலிண்டர் தட்டுப்பாடா?
சமையல் எரிவாயுவைப் பொறுத்தவரை, நாம் இறக்குமதியை விட உள்நாட்டு உற்பத்தியையே அதிகம் நம்பியிருக்கிறோம். கடந்த சில காலங்களாக உள்நாட்டு சுத்திகரிப்பு நிலையங்களின் உற்பத்தி 40% அதிகரிக்கப்பட்டுள்ளது. இப்போது தினமும் 50 ஆயிரம் மெட்ரிக் டன் எல்.பி.ஜி உற்பத்தி செய்யப்படுகிறது. இது நமது நாட்டின் தேவையில் 60 சதவீதத்திற்கும் மேல்!
மீதமுள்ள தேவைக்காக அமெரிக்கா, ரஷ்யா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளிலிருந்து கப்பல்கள் ஏற்கனவே இந்தியா நோக்கி வந்து கொண்டிருக்கின்றன. எனவே, அடுப்பு எரியாது என்ற கவலை இல்லத்தரசிகளுக்குத் தேவையில்லை.
பங்க்குகள் காலி... ஆனால் தட்டுப்பாடில்லை!
"சில பெட்ரோல் பங்க்குகளில் 'நோ ஸ்டாக்' போர்டு தொங்குகிறதே?" என்ற கேள்வி, பெட்ரோல் பங்க்குகளின் சங்கத்தினர்.. "கடந்த இரண்டு நாட்களில் மட்டும் பெட்ரோல், டீசல் விற்பனை அகில இந்திய அளவில் 15% அதிகரித்துள்ளது. சில இடங்களில் 50% வரை தேவை கூடியுள்ளது. பலர் டேங்க் நிரப்ப வேண்டும் என்று நிரப்பி வைக்கிறார்கள். இது தட்டுப்பாட்டால் அல்ல, மக்கள் பீதியில் அளவுக்கு அதிகமாகப் பெட்ரோல் போடுவதால்தான். எங்கள் சப்ளை செயின் மிக வலுவாக உள்ளது," எனத் தெளிவுபடுத்தியுள்ளார்.
சமூக வலைதளங்களில் பரப்பப்படும் போலிச் செய்திகளை நம்பிப் பணத்தையும் நேரத்தையும் வீணாக்காதீர்கள். தேவையில்லாமல் பெட்ரோல் பங்க்குகளில் கூட்டமாகச் சேருவதே ஒரு செயற்கையான தட்டுப்பாட்டை உருவாக்கிவிடும். வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு எச்சரித்துள்ளது.












Click it and Unblock the Notifications