"கோதுமை மாவு" விலை திடீரென உயர்வு.. நாட்டு மக்கள் தலையில் விழுந்த இடி.. இதுதான் காரணமா?..!
கோதுமை விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது
டெல்லி: ஒருபக்கம் உக்ரைன் போர்.. மற்றொரு பக்கம் உற்பத்தி இல்லை.. இதற்கு நடுவில் கையிருப்பு குறைந்துவிட்ட காரணத்தினால் நாட்டில் கோதுமை விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்துள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வருகிறது.. உக்ரைனும் எதிர் தாக்குதலை தொடர்ந்து நடத்தி கொண்டிருக்கிறது
பல்வேறு நாடுகள் ரஷ்யாவை அறிவுறுத்தியும் கேளாமல், உக்ரைன் மீது கொலைவெறி தாக்குதலை நடத்தி வருகிறது.

வீரர்கள்
இப்படி இரு தரப்பிலும் போர் நடந்து வரும் நிலையில், ஏராளமான வீரர்களும், அப்பாவி மக்களும் பலியாகியுள்ளனர்... லட்சக்கணக்கான மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர்... ரஷ்யா - உக்ரைன் போர் காரணமாக, உலக நாடுகளில் விலைவாசியும் உயர்ந்து வருகிறது.. அந்த வகையில், பெட்ரோல் டீசல் விலை உயர்ந்தது.. இதற்கு உக்ரைன் போர்தான் காரணமாக சொல்லப்பட்டு வருகிறது. இப்போது, உற்பத்தி மற்றும் கையிருப்பு குறைந்ததால் நாட்டில் கோதுமை விலையும் உயர்ந்து வருகிறது.

கோதுமை
உக்ரைன் - ரஷ்யா போர் மற்றும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய வேண்டியதன் காரணமாக நாட்டில் கோதுமை விலை 5.81 சதவீதம் அதிகரித்துள்ளது... கடந்த மார்ச் மாதத்தில் கோதுமையின் சில்லறை பணவீக்கம் 7.77 சதவீதத்தை எட்டியுள்ளது... கோதுமையின் இந்த விலையேற்றத்தால் பேக்கரி ரொட்டி, மற்றும் கோதுமை சார்ந்த உணவுப் பண்டங்களின் விலையும் கடுமையாக உயர்ந்திருக்கிறது.

கோதுமை மாவு
இந்தியாவின் 4 பெருநகரங்களில் கோதுமை மாவு விலை தற்போது அதிகரித்துள்ளதாம்.. சென்னையில் கோதுமை சில்லறை விலை ரூ.34, மும்பையில் ரூ.49, கொல்கத்தாவில் ரூ.29, டெல்லியில் ரூ.27 ஆக உள்ளது. கோதுமையின் விலை உயர்ந்துள்ளதால் பேக்கரி பொருட்களின் விலையும் அதிகரிக்க துவங்கவிட்டது.. குறிப்பாக, பேக்கரி ரொட்டி, மற்றும் கோதுமை சார்ந்த உணவுப்ப் பண்டங்களின் விலையும் கடுமையாக உயர்ந்திருக்கிறது. அதிகரித்திருக்கிறது...

பேக்கரி பொருட்கள்
இப்படித்தான், கடந்த 2010 ஜனவரியிலும் கோதுமை விலை உயர்ந்திருந்தது.. அதற்கு பிறகு, இந்த மாதத்திற்கு தற்போது மீண்டும் விலை உயர்வை சந்தித்திருப்பதாக சொல்லப்படுகிறது. உக்ரைன் -ரஷ்யா போர், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி, போன்ற காரணங்களினால் நாட்டில் கோதுமை விலை அதிகரித்துள்ளது அதிர்ச்சியை கூட்டி வருகிறது.. நடப்பாண்டு அதிக வெப்பத்தின் காரணமாக கோதுமை பயிர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.. இதனால் உற்பத்தியும் பாதிக்கப்பட்டுவிட்டது, கையிருப்பும் குறைந்துவிட்டது.

இலவச கோதுமை
இதனிடையே, இன்னொரு தகவலும் வெளியாகி உள்ளது.. பிரதம அமைச்சர் கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாதமும், சுமார் 81 கோடி பேருக்கு இலவச 5 கிலோ உணவு தானியம் வழங்கப்பட்டு வருகிறது.. உள்நாட்டில் கோதுமை பயன்பாடு, பற்றாக்குறையை சமாளிக்கும் வகையில் பயனாளிகளுக்கு கோதுமையை குறைத்து வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாம்.. அதன்படி, பீகார், கேரளா, உத்தரபிரதேசம் ஆகிய 3 மாநிலங்களும் கோதுமையை பெறுவதில்லை..
Recommended Video

கோதுமை விநியோகம்
மற்றபடி டெல்லி, குஜராத், ஜார்க்கண்ட், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரகாண்ட் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய 8 மாநிலங்களுக்கும் குறைவாக கோதுமை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது... மீதமுள்ள 25 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு எந்த மாற்றமுமின்றி கோதுமை ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் உறுதிபட தெரிவிக்கப்பட்டுள்ளது.. எனினும், அத்தியாவசிய தேவையான கோதுமை விலை தற்போது உயர்ந்துள்ளது, குடிமக்களுக்கு அதிர்ச்சியையே ஏற்படுத்தி வருகிறது.


Click it and Unblock the Notifications
