சீன எல்லையில் மாயமான விமானத்தில் விமானி.. கட்டுப்பாட்டு அறையில் மனைவி.. நெஞ்சை உலுக்கும் சம்பவம்
Recommended Video
டெல்லி: சீன எல்லை அருகே விமானம் மாயமானபோது விமான கட்டுப்பாட்டு அறையில் விமானியின் மனைவி பணியாற்றியது நெஞ்சை உருக்கும் விதமாக உள்ளது.
இந்திய விமானப் படைக்கு சொந்தமான ஏஎன் 32 ரக போர் விமானம் 5 பயணிகள் மற்றும் 8 விமான குழுவினர் என மொத்தம் 13 பேருடன் அசாமின் ஜோர்கத் தளம் பகுதியில் இருந்து கடந்த திங்கள்கிழமை மதியம் 12.25 மணிக்கு அருணாசலப் பிரதேசத்தில் உள்ள மெஞ்சுகா பகுதிக்கு சென்று கொண்டிருந்தது.
அப்போது மெஞ்சுகா பகுதியின் விமான ஓடுதளம் உள்ள சீன எல்லை அருகே தரையிறங்க இருந்த நிலையில் திங்கள்கிழமை அந்த விமானத்தின் ரேடார் சிக்னல் துண்டிக்கப்பட்டு விட்டது. 3 நாட்களாக அந்த விமானத்தை காணவில்லை. இந்த விமானத்தை தேடும் பணியில் சுகோய் 30, சி-130 ரக விமானங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

யார் பயணம்
காணாமல் போன விமானத்தில் யார் யார் பயணம் செய்தனர் என்பது குறித்த தகவல்கள் இதுவரை தெரியவில்லை. பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவை சேர்ந்த லெப்டினன்ட் மோகித் கார்க் (27) அந்த விமானத்தில் பயணம் செய்திருந்தது தெரியவந்துள்ளது. விமானம் மாயமான தகவல் அறிந்த மோகித்தின் தந்தை சுரீந்தர் கார்க் அசாமுக்கு விரைந்துள்ளார்.

விமானி
இந்த விமானத்தில் சென்று மாயமானவர்களில் ஹரியானாவை சேர்ந்த ஆசிஷ் தன்வார் (29) என்ற விமானியும் பயணித்துள்ளார். ஜோர்கத்திலிருந்து விமானம் புறப்பட்டபோது விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அறையில் அவர் மனைவி பணியாற்றிக் கொண்டிருந்தது தெரியவந்துள்ளது.

ஜோர்கத்
இதுகுறித்து அவரது குடும்பத்தினர் கூறுகையில் ஆசிஷ் தன்வாருக்கும் சந்தியாவுக்கும் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் திருமணம் நடைபெற்றது. சந்தியாவும் விமான படையில் பணியாற்றுகிறார். அந்த விமானம் ஜோர்கத்திலிருந்து புறப்பட்டு சிறிது நேரத்தில் மாயமானபோது கட்டுப்பாட்டு அறையில் சந்தியா இருந்தார்.

விமானம்
அவர்தான் எங்களுக்கு தகவல் சொன்னார். முதலில் சீன எல்லையில் எங்காவது அவசரமாக தரையிறங்கியிருக்கும் என நினைத்தோம். ஆனால் அது மலையில் எங்காவது மோதி விபத்தில் சிக்கியிருக்கும் என்ற தகவல் எங்களுக்கு பேரிடியை கொடுக்கிறது. இந்த தகவல் அறிந்த ஆசிஷின் தந்தை அசாம் சென்றுள்ளார். விமானம் காணாமல் போன போது மனைவியே கட்டுப்பாட்டு அறையில் இருந்த சம்பவம் கேட்போர் மனதை உலுக்குகிறது.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications