மொட்டை மாடியில் "ஆண் நண்பர்".. மோனிகா பண்ண அட்ராசிட்டிய பாருங்க.. அது யார் கூட? இருளில் அலறிய டெல்லி
டெல்லி: நகை, பணத்துக்காக கொலை நடந்ததை போல தெரியவேண்டும் என்பதற்காக, வீடு முழுக்க பொருட்களை சிதறடித்துள்ளனர்.. ஆனாலும் போலீசார் விடுவார்களா என்ன? குற்றவாளியை தட்டி தூக்கிவிட்டார்கள்.
வடக்கு டெல்லியில் உள்ள கோகல்புரியை சேர்ந்தவர் ராதே ஷியாம் வர்மா.. 72 வயதாகிறது.. இவர் கரோல்பார்க்கில் உள்ள அரசு பள்ளியில் துணை முதல்வராக பணிபுரிந்தவர்.. இப்போது ஓய்வு பெற்றுவிட்டார்.. மனைவி பெயர் வீணா.. 68 வயதாகிறது..
இவர்கள் தனியாக ஒரு பங்களாவில் வசித்து வருகிறார்கள்.. ராதே ஷியாம் வர்மாவும், வீணாவும் அந்த வீட்டின் கீழ் தளத்திலும், முதல் மாடியில் மகன் ரவி ரத்தன், மருமகள் மோனிகாவும் தங்கள் குழந்தைகளுடன் வசித்து வருகிறார்கள்..

கள்ளக்காதல்: இதில், மோனிகாவுக்கு அதே பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவருடன் கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது.. 2 பேருமே அடிக்கடி தனிமையில் சந்தித்து ஜாலியாக இருந்து வந்துள்ளனர்.. இந்த விஷயம், மாமனார், மாமியாருக்கு தெரிந்துவிட்டது.. அதனால், மகனிடம் விஷயத்தை சொல்லாமல், மருமகள் மோனிகாவை கண்டித்துள்ளனர்.. இதனால் மோனிகாவுக்கு மாமனார், மாமியார் மீது ஆத்திரம் ஏற்பட்டுள்ளது.. கள்ளக்காதலுக்கு இவர்கள் தடையாக இருப்பதால், மாமனார், மாமியாரை கொலை செய்ய வேண்டும் என்று முடிவு செய்தார்... இது பற்றி கள்ளக்காதலனிடம் சொல்லவும், அதன்படியே, கடந்த 9-ந்தேதி கொலை செய்ய நாள் குறிக்கப்பட்டது..
மொட்டை மாடி: சம்பவத்தன்று, கள்ளக்காதலன், தன்னுடைய நண்பரை அழைத்து கொண்டு, மோனிகா வீட்டிற்கு வந்தார்... அவர்கள் மோனிகா வீட்டின் மொட்டை மாடியில் பதுங்கி இருந்தனர்... தெருவில் ஆட்கள் நடமாட்டம் இல்லாத நேரம் பார்த்து, அவர்கள் மொட்டை மாடியில் இருந்து கீழே இறங்கி வந்தனர்.. மோனிகா + கள்ளக்காதலன் + நண்பன் என 3 பேருமே மாமனாரின் பெட்ரூமுக்குள் நுழைந்து அவரது கழுத்தை அறுத்தனர்.. அவரது அலறல் சத்தத்தை கேட்டு, மாமியார் வீணா ஓடிவந்தார்.. பிறகு அவரது கழுத்தையும் அறுத்தனர்.. மாமனார், மாமியார் 2 பேருமே ரத்த வெள்ளத்தில் அதே இடத்தில் மயங்கி சுருண்டு விழுந்து இறந்துவிட்டனர்..

போஸ்ட் மார்ட்டம்: பிறகு மோனிகா, கள்ளக்காதலனுடன் அங்கிருந்து தப்பி சென்று விட்டார்.. மறுநாள் காலையில் 2 பேரும் பிணமாக கிடப்பதை கண்ட அக்கம் பக்கத்தினர் இது பற்றி போலீசுக்கு தகவல் சொல்லவும், அவர்கள் விரைந்து வந்து சடலங்களை கைப்பற்றி போஸ்ட் மார்ட்டத்துக்கு அனுப்பி வைத்தனர்.. விசாரணையையும் துவங்கினர்.. இறுதியில் மோனிகா மட்டும் சிக்கினார்.. மற்ற 2 பேரும் தலைமறைவாகிவிட்டதால், அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.. ஷியாம் வர்மா அந்த வீட்டில்தான் சுமார் 33 வருடங்களாக வசித்து வருகிறாராம்.. மகன் ரவி ரத்தனுக்கு 38 வயதாகிறது.. மோனிகாவுக்கு 28 வயதாகிறது.. ரவிரத்தன் முதலில், முஸ்தபாபாத்தில் ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார்..
அதற்கு பிறகு, சொந்தமாக பிசினஸ் செய்ய துவங்கி உள்ளார்.. ஆடை மற்றும் அழகுசாதன கடை நடத்தி வருகிறாராம்.. கடைசியாக அன்றைய தினம் இரவு 10.30 மணியளவில் தன்னுடைய பெற்றோரை பார்த்ததாகவும், அதற்கு பிறகு என்ன நடந்தது என்று தனக்கு தெரியவில்லை என்றும் ரவிரத்தன் போலீஸாரிடம் சொல்லி உள்ளார்.. போலீசாரின முதற்கட்ட விசாரணையில், வர்மா வீட்டில் இருந்து 4.50 லட்ச ரூபாய் மற்றும் நகைகள் காணாமல் போனது தெரிய வந்தது... நகை, பணத்துக்காக, வீட்டின் பின்புற கேட் வழியாக மர்மநபர்கள் வந்து, இந்த கொலை, கொள்ளையை அரங்கேற்றியிருக்கலாம் என்று சந்தேகப்பட்டார்கள்.. ஆனால், மோனிகாவுக்கு இந்த இரட்டைக்கொலையில் தொடர்பு இருப்பது தெரியவந்ததால் போலீஸர் அதிர்ச்சி அடைந்தனர்..

மொட்டை மாடியில்: அதற்கு பிறகுதான் சோதனையை விரிவுபடுத்தினர்.. இறுதியில் இது ஒரு கள்ளக்காதல் விவகாரம் என்பது தெரியவந்தது.. கள்ளக்காதலனுடன் சேர்ந்து வாழ்வதற்காக மாமனார், மாமியாரைக் கொலை செய்து விட்டு அவர்களது பணம், நகைகளோடு தப்பிச்செல்லலாம் என மோனிகா பிளான் செய்திருந்தாராம்.. போலீசார் அந்த வீட்டுக்குள் நுழைந்தபோது, மாமனார், மாமியார் 2 பேருமே பெட்ரூமில் பிணமாக கிடந்துள்ளனர்.. வீடு முழுக்க பொருட்கள் சிதறி கிடந்துள்ளது.. 10.30 மணிக்கு ரவிதத்தன் பெற்றோரை பார்த்துவிட்டு, கடைக்கு சென்றுள்ளார்.. அன்றைய தினம் நள்ளிரவில் கள்ளக்காதலனை மொட்டை மாடிக்கு வரவழைத்து, இந்த கொலையை மோனிகா அரங்கேற்றி உள்ளது தெரியவந்துள்ளது..!!!












Click it and Unblock the Notifications