எகிறும் வீட்டு வாடகை.. நாட்டிலேயே டெல்லி புறநகரில் தான் ரொம்ப அதிகம்.. அப்போ சென்னை, பெங்களூர் எங்கே

Subscribe to Oneindia Tamil

டெல்லி: கடந்த ஓராண்டில் இந்தியாவின் முக்கிய நகரங்களில் வாடகை எந்தளவுக்கு உயர்ந்துள்ளது என்பது குறித்த முக்கிய தகவல்கள் இப்போது வெளியாகியுள்ளது.

நமது நாட்டில் சொந்த வீடு வாங்க வேண்டும் என்பதே பலரது கனவாக இருக்கும். ஆனால், அனைவராலும் சொந்த வீடு வாங்க முடிவதில்லை. இதனால் இங்கே பெரும்பகுதி மக்கள் வாடகை வீடுகளிலேயே வசிக்கிறார்கள்.

Which city saw the most rental hike across inda and where Chennai ranks

இதற்கிடையே ரியல் எஸ்டேட் தளமான மேஜிக்பிரிக்ஸ் நாட்டின் முக்கிய நகரங்களில் வாடகை எந்தளவுக்கு உயர்ந்துள்ளது என்பது குறித்த டேட்டாவை பகிர்ந்துள்ளது. நாடு முழுக்க உள்ள 13 முக்கிய நகரங்களில் கடந்த ஓராண்டில் எந்தளவுக்கு உயர்ந்துள்ளது என்பது குறித்த தகவல்களை மேஜிக்பிரிக்ஸ் தளம் பகிர்ந்துள்ளது.

எங்கே அதிகம்: அதன்படி பார்த்தால் அதிகபட்சமாகத் தேசிய தலைநகரான டெல்லி புறநகர்ப் பகுதியாகக் கருதப்படும் குருகிராமில் வாடகை ஒரே ஆண்டில் 31.3 சதவிகிதம் உயர்ந்துள்ளது. அதேபோல கிரேட்டர் நொய்டாவில் கடந்த ஓராண்டில் வாடகை 30.4 சதவிகிதமும் பெங்களூருவில் 23.1 சதவிகிதமும் உயர்ந்துள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது. தொடர்ந்து நொய்டாவில் 30.4% வாடகை அதிகரித்துள்ள நிலையில், ஹைதராபாத்தில் 20.7 சதவிகிதமும் தானேவில் 17.8 சதவிகிதமும் வாடகை அதிகரித்துள்ளது.

ஒட்டுமொத்தமாகப் பார்க்கும் போது சராசரியாக இந்தியாவில் ஓராண்டில் மட்டும் 17.4% வாடகை அதிகரித்துள்ளது. அதேநேரம் சென்னையைப் பொறுத்தவரைத் தேசிய சராசரியைக் காட்டிலும் வாடகை குறைவாகவே அதிகரித்துள்ளது. சென்னையில் ஓராண்டில் 14.7% மட்டுமே வாடகை அதிகரித்துள்ளது இதில் தெரிய வருகிறது.

தேவை எப்படி: பொதுவாக எந்தவொரு பொருளாக இருந்தாலும் தேவைக்கு ஏற்பவே அதன் விலை இருக்கும். அப்படி demandஐ பொறுத்தவரைக் கடந்த ஓராண்டில் இந்த அத்தனை நகரங்களிலும் தேவை குறைந்தே இருக்கிறது. அதிகபட்சமாக நொய்டா மற்றும் கிரேட்டர் நொய்டாவில் 38% வரை வாடகைக்கு வீடுகள் தேவை குறைந்துள்ளது. டெல்லி, குருகிராம், கொல்கத்தா ஆகிய நகரங்களிலும் வீடுகளின் தேவை குறைந்துள்ளது. ஒட்டுமொத்தமாக நாட்டில் வாடகைக்கு வீடுகள் தேவை 23.4% குறைந்துள்ளது.

அதேநேரம் சென்னையைப் பொறுத்தவரைப் பெரியளவில் தேவை குறையவே இல்லை. ஓராண்டில் சென்னையில் வெறும் 14.8% மட்டுமே தேவை குறைந்துள்ளது. நாட்டில் உள்ள அனைத்து முக்கிய நகரங்களுடன் ஒப்பிடும் போது சென்னையில் தான் வீடுகள் தேவை பெரியளவில் குறையவில்லை.

சப்ளை: அதேபோல வீடுகள் சப்ளைவை பொறுத்தவரையும் கூட அவை பெரியளவில் அதிகரிக்கவில்லை. நாட்டில் ஒட்டுமொத்தமாக வீடுகள் சப்ளை ஓராண்டில் 16.9% குறைந்துள்ளது. அதிகபட்சமாக நவி மும்பையில் 38% குறைந்துள்ளது.. தொடர்ந்து தானேவில் 33.6% சப்ளை குறைந்துள்ள நிலையில், இந்த லிஸ்டில் மூன்றாவது இடத்தில் சென்னை இருக்கிறது. ஓரே ஆண்டில் சென்னையில் வீடுகள் சப்ளை 33.3% குறைந்துள்ளது.

இது தொடர்பாக வல்லுநர்கள் கூறுகையில், "2023 ஆம் ஆண்டில், பொருளாதார வளர்ச்சி, வேலைவாய்ப்பு எனப் பல காரணங்களால் வீட்டுச் சந்தை இப்படி இருக்கிறது.. இப்போது டையர் 1 நகரங்களில் வாடகை வீடுகள் சந்தை நல்ல நிலையிலேயே இருக்கிறது. பல முக்கிய நகரங்களில் எதிர்பார்த்த அளவுக்கு வாடகை அதிகரிக்கவில்லை.. வாடகை வீடுகளுக்கான தேவை இப்போது குறைந்துள்ளது. வாடகை எதிர்பார்த்த அளவுக்கு உயராமல் இருக்கத் தேவை குறைவாக இருந்ததே காரணமாகும். ஆனால், சில மாதங்களில் நிலை மாறும் என நினைக்கிறோம்" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+