காதலர் தினத்தன்று உச்சம் தொட்ட ஓயோ புக்கிங்.. எந்த ஊருக்கு முதல் இடம் தெரியுமா.. ஆச்சரியப்படுவீங்க
காதலர் தினத்தன்று ஓயோவில் புக்கிங் அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
டெல்லி: இந்தாண்டு காதலர் தினம் கடந்த செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்ட நிலையில், ஓயோ புக்கிங் பல மடங்கு அதிகரித்துள்ளது. இதில் முதல் இடத்தில் இருக்கும் நகரம் நிச்சயம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தும்.
உலகெங்கும் கடந்த பிப். 14ஆம் தேதி காதலர் தினம் கோலாகமாலக கொண்டாடப்பட்டது. உலகின் மற்ற அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளைப் போல இந்தியாவில் காதலர் தினம் கொண்டாட்டம் பெரிதாக இருக்காது.
அதேநேரம் ஒவ்வொரு ஆண்டும் காதலர் தின கொண்டாட்டங்கள் இந்தியாவிலும் மெல்ல அதிகரித்தே வருகிறது. அதன்படி கடந்த செவ்வாய்க்கிழமை உலகெங்கும் காதலர் தினம் கொண்டாடப்பட்டது.

ஓயோ
இதற்கிடையே காதலர் தினத்தன்று பிரபல ஹோட்டல் புக்கிங் தளமான ஓயோ, தனது புக்கிங் 35% வரை அதிகரித்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. இந்தாண்டு காதலர் தினம் வார நாளில் வந்த போதும், கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில் புக்கிங் 35% அதிகரித்துள்ளதாக ஓயோ தெரிவித்துள்ளது.. முன்னதாக கடந்த வாரம் குடியரசு தினம் வார இறுதியில் வந்த நிலையில், அப்போதும் இதேபோல புக்கிங் அதிகரித்திருந்ததாக ஓயோ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்போது ஒட்டுமொத்த புக்கிங்கில் கோவா 75% உடன் முதல் இடத்தில் இருந்தது.

முதல் இடத்தில் எந்த நகரம்
ஆனால், இப்போது காதலர் தினத்தன்று கோவா முதல் இடத்தில் இல்லை.. மாறாக இந்தாண்டு காதலர் தினத்தன்று மக்கள் செல்ல அதிக ஆர்வம் காட்டிய இடங்களில் உத்தரப் பிரதேசத்தில் இருக்கும் பாரம்பரிய நகரான பிருந்தாவன் முதல் இடத்தை பிடித்துள்ளது. கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில் பிருந்தாவன் செல்வோர் 231% அதிகரித்துள்ளது. மேலும், பிருந்தாவன் நகரம் கோவா மற்றும் மணாலி போன்ற பிரபல சுற்றுலா இடங்களையும் ஓவர்டேக் செய்துள்ளது.

சென்னை, பெங்களூர்
அதைத் தொடர்ந்து பெங்களூர் (51 சதவீதம்), ஹைதராபாத் (47 சதவீதம்), புனே (45 சதவீதம்) ஆகியவை அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளன. மேலும், கொல்கத்தா (38 சதவீதம்), சென்னை (35 சதவீதம்), மும்பை (19 சதவீதம்) நகரங்களும் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. கடந்த ஆண்டை காட்டிலும் சுமார் 147 சதவீதம் பேர், இந்தாண்டு பீச் நகரங்களைக் காட்டிலும் ஹில் பிரதேசங்களுக்குச் செல்லவே ஆர்வம் காட்டியுள்ளனர்..

அதிகரிப்பு
மேலும், கடந்த 2022இல் கொரோனா அப்போது தான் முடிந்திருந்த நிலையில், பெரும்பாலான மக்கள் ஸ்டேகேஷன் முறையிலேயே விடுமுறையில் சென்றனர். அதாவது நல்ல ஹோட்டலுக்கு சென்று அங்கேயே விடுமுறையைக் கழிப்பது தான் ஸ்டேகேஷன்.. வெளியே செல்ல கட்டுப்பாடுகள் இருந்ததால், இந்த முறை பிரபலமாக இருந்தது. அப்போது சராசரியாக அனைத்து சுற்றுலாப் பயணிகளும் 2 நாட்கள் விடுமுறை சென்ற நிலையில், இப்போது அது 4 நாட்களாக அதிகரித்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

வார நாட்கள்
புக்கிங் அதிகரித்துள்ளது குறித்து ஓயோ செய்தித்தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், "நல்ல ஒரு டீல் கிடைத்தால் மக்கள் வார நாட்களிலும் கூட சுற்றுலா செல்ல தயாராகவே உள்ளனர்.. நாட்டின் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட நகரங்களில் இருக்கும் மக்கள், பெருநகரங்களில் சென்று விடுமுறையைக் கொண்டாட விரும்புகின்றனர். இதன் மூலம் வித்தியாசமான அனுபவம் தங்களுக்குக் கிடைக்கும் என்று அவர்கள் நம்புகிறார்கள்" என்று அவர் தெரிவித்தார்.

ஓயோ சிஇஓ
இதற்கிடையே புக்கிங் அதிகரித்துள்ள நிலையில், வாடிக்கையாளர்களுக்கு நன்றி தெரிவித்துள்ள ஓயோ சிஇஓ ரித்தேஷ் அகர்வால், வாடிக்கையாளர்கள் தங்கள் கருத்துகளைத் தெரிவிக்கலாம் என்று கூறியுள்ளார். ஓயோ எப்போதும் தங்கள் வாடிக்கையாளர்கள் கருத்துகளைக் காது கொடுத்துக் கேட்கும் என்று குறிப்பிட்ட அவர், இந்தாண்டு ஓயோ பயன்படுத்தியவர்கள் தங்கள் அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ளலாம் என்று குறிப்பிட்டுள்ளது.
-
ஈரானை அரவணைக்கும் இந்தியா.. மீண்டும் தொடங்கும் கச்சா எண்ணெய் வர்த்தகம்? மத்திய அரசு பிளான் -
ஈரானுடன் ரகசிய டீல்.. சைலன்ட்டாக அம்பானி சம்பவம்.. 2019க்கு பின் இந்தியா வரும் 50 லட்சம் பேரல் ஆயில் -
1 மணி நேரம் நின்றாலும் ஒரு சொட்டு பெட்ரோல் இல்லை! ஹைதராபாத்தில் நிலைமை இதுதான்.. கள நிலவரம் இதுதான்! -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
போருக்கு நடுவே துபாய் செய்த காரியம்.. நெகிழ்ந்து போன இந்தியர்கள்.. இதை யாரும் எதிர்பார்க்கல -
"இந்தியா எங்கள் நண்பன்! ஹார்முஸை தாராளமாக கடக்கலாம்.." அனுமதி தந்த ஈரான்! உற்று பார்க்கும் அமெரிக்கா -
இந்தியாவில் 'வேலைவாய்ப்பு நெருக்கடி'.. கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் அறிய வேண்டிய கசப்பான உண்மை -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு












Click it and Unblock the Notifications