டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மைக்கேல் "மாமா" உண்மையை சொல்லிட்டார்.. அகமது படேல் எந்த குடும்பத்துக்கு நெருக்கமானவர்?.. மோடி பொளேர்

Google Oneindia Tamil News

டெல்லி: முக்கிய பிரமுகர்களுக்கான ஹெலிகாப்டர் கொள்முதல் ஊழல் வழக்கில் குற்றப்பத்திரிகையில் குற்றம்சாட்டப்பட்ட காங்கிரஸ் எம்பி அகமது பட்டேல், காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியின் குடும்பத்திற்கு நெருக்கமானவர் என பிரதமர் நரேந்திர மோடி குற்றம்சாட்டினார்.

முக்கிய பிரமுகர்கள் பயணம் செய்யும் வகையில் அகஸ்டா வெஸ்ட்லேண்ட் சொகுசு ஹெலிகாப்டர் கொள்முதல் விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி மோசடி செய்ததாக குற்றச்சாட்டப்பட்டுள்ளது.

இதுகுறித்து டேராடூனில் பிரதமர் மோடி கூறுகையில் நீங்கள் நன்றாக நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். விவிஐபிகளுக்கான ஹெலிகாப்டர் ஒப்பந்த விவகாரத்தில் துபாயிலிருந்த இடைத்தரகரை உங்கள் சவுக்கிதார்தான் இந்தியாவுக்கு கொண்டு வந்தார் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

இனிமே பார்த்துப் பேசுங்க சார்.. யோகி ஆதித்யநாத்துக்கு தேர்தல் ஆணையம் கொடுத்த வலிக்காத வார்னிங்!! இனிமே பார்த்துப் பேசுங்க சார்.. யோகி ஆதித்யநாத்துக்கு தேர்தல் ஆணையம் கொடுத்த வலிக்காத வார்னிங்!!

சூசக சொற்கள்

சூசக சொற்கள்

பல வாரங்களாக இடைத்தரகர் மைக்கேல் "மாமா" மற்றும் சிலரிடம் புலனாய்வு அமைப்புகள் விசாரணை நடத்தினர். அதன் விசாரணை அறிக்கையை நான் பார்த்தேன். அதில் இடைத்தரகர்கள் AP என்றும் FAM என்றும் சூசக சொற்களை குறிப்பிட்டுள்ளனர்.

கேள்வி

கேள்வி

அந்த குற்றப்பத்திரிகையில் AP என்றால் அகமது பட்டேல் என்றும் FAM என்றால் குடும்பம் என்றும் அர்த்தம். இப்போது சொல்லுங்கள். அகமது பட்டேல் எந்த குடும்பத்துடன் நெருக்கமானவர்? அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஊழல் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியவுடன் ராகுல் காந்தி ஓட்டம்பிடித்தார்.

காங்கிரஸ்

காங்கிரஸ்

ஊழலையும் காங்கிரஸையும் பிரிக்க முடியாது. காங்கிரஸுக்கு ஊழல் வேண்டும். ஊழலுக்கு காங்கிரஸ் வேண்டும். இரண்டும் சேர்ந்து புதிய சாதனையை உருவாக்கிவிட்டது. காங்கிரஸ் ஆட்சியில் ஊழல் என்பது ஆக்சிலரேட்டர் போல வேகமாக இருந்தது. வளர்ச்சி என்பது வென்டிலேட்டர் போல் ஒன்றுமில்லாமல் இருந்தது.

ராணுவம்

ராணுவம்

காங்கிரஸ் ஆட்சியில் யார் அதிக ஊழல்களை செய்தவர் என்ற போட்டியே இருந்தது என்றால் பார்த்து கொள்ளுங்கள். காஷ்மீரில் காங்கிரஸ் கட்சி பயங்கரவாதிகள், கல் வீசுபவர்கள், பிரிவினைவாதிகளுக்கு ஆதரவாக இருக்கிறது. இப்போது சொல்லுங்கள், நமது ராணுவம் யாரை எதிர்த்து போராடுகிறது?

மோசடி தேர்தல் அறிக்கை

மோசடி தேர்தல் அறிக்கை

காங்கிரஸ் வெளியிட்ட தேர்தல் அறிக்கை மோசடியானது. ஆயுத படைக்கான சிறப்பு அதிகார சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவதாக காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் ரத்து செய்வதாக அறிவித்துள்ளது. ராணுவத்துக்கு உரிய பாதுகாப்பு கொடுக்காவிட்டால் எந்த தாய்தான் தன் மகனை ராணுவத்தில் சேர்க்க முற்படுவார்? இவற்றையெல்லாம் காங்கிரஸ் கட்சி வாக்குக்காக செய்து வருகிறது என்றார் மோடி.

English summary
Prime Minister Narendra Modi on Friday criticised the Gandhi family over a chargesheet filed by the Enforcement Directorate in the VVIP chopper scam.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X