ஜம்முனு வண்டி ஓட்டும் ஜப்பான்.. இந்தியாவின் நிலை ரொம்பவே மோசம்.. எந்த ரேங்க்.. ஏன் ஆபத்து
சிறந்த டிரைவிங் பண்புகளை கொண்ட நாடுகள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
டெல்லி: பல்வேறு நாடுகளில் வாகனம் ஓட்டும் பழக்கம் எப்படியிருக்கிறது என்பதை ஒப்பிட்டு நடத்தப்பட்ட ஆய்வு ஒன்று சமீபத்தில் வெளியானது. அதில் ஜப்பான் முதலிடத்தில் இருக்கிறது. அடுத்தடுத்து எந்த நாடுகள் உள்ளன. இந்தியாவுக்கு என்ன இடம் என்பதைப் பார்க்கலாம்.
மத்திய அரசு எக்ஸ்பிரஸ் வே, நெடுஞ்சாலை என்று பல்வேறு சாலைகளைக் கொண்டு வருவது ஒரு பக்கம் இருந்தாலும், இந்தியாவில் சாலைப் பயணம் இன்னும் பாதுகாப்பான ஒன்றாக மாறவில்லை.
இந்தியாவில் கடந்த 2021இல் மட்டும் 4.12 சாலை விபத்துகள் நடந்துள்ளன. அதில்1.53 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர், மேலும், 3.8 லட்சம் பேர் காயமடைந்துள்ளனர். அந்தளவுக்குத் தான் நமது சாலைகள் பாதுகாப்பாக உள்ளது.

விபத்துகள்
நமது நாட்டில் மட்டுமின்றி பெரும்பாலான நாடுகளில் சாலைப் பயணங்களில் அதிக விபத்துகள் ஏற்படவே செய்கிறது. இதைத் தடுக்க உலகின் பல்வேறு நாடுகளும் பல விதங்களில் முயன்று வருகிறது. அதிவேகத்தில் இயங்கப்படும் வாகனங்களே உயிரிழப்புகளை ஏற்படுத்தும் விபத்துகளை ஏற்படுத்துகிறது. இதனால் வாகனங்கள் அதிவேகத்தில் இயங்குவதைத் தடுக்கவே ஐரோப்பிய நாடுகள் பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அதில் ஐரோப்பிய நாடுகளுக்கு ஓரளவுக்குப் பலன் கிடைத்துள்ளது என்றே சொல்லலாம்.

ஜப்பான்
உலகெங்கும் உள்ள பல்வேறு நாடுகளில் வாகனம் ஓட்டும் பழக்கம் எப்படியிருக்கிறது என்பதை ஒப்பிட்டு நடத்தப்பட்ட ஆய்வு ஒன்று சமீபத்தில் வெளியானது. அதில் உலகில் தலைசிறந்த டிரைவிங் பண்புகளைக் கொண்ட நாடுகள் பட்டியலில் ஜப்பான் முதலிடத்தில் இருக்கிறது. அதைத் தொடர்ந்து டென்மார்க், ஸ்வீடன் நாடுகளைக் கொண்ட நார்டிக் நாடுகள் அடுத்த இடத்தில் உள்ளன. அதேநேரம் தென்கிழக்கு ஆசியாவில் உள்ள நாடுகள் இந்த பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது

இந்தியா
கம்பேர் தி மார்கெட் என்ற இந்த நிறுவனம் நடத்திய ஆய்வில், மோசமான ஓட்டுநர்களைக் கொண்ட நாடுகள் பட்டியலில் இந்தியா நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது. இந்த ஆய்வில் மொத்தம் 50 நாடுகளில் ஓட்டுநர்களை ஆய்வு செய்து.. போக்குகள், போக்குவரத்து விழிப்புணர்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்களின் அடிப்படையில் இந்த சிறந்த ஓட்டுநர் பட்டியல் உருவாக்கப்பட்டுள்ளது. வேகக் கட்டுப்பாடு, சாலை நிலை, அனுமதிக்கப்பட்ட உள்ள ஆல்கஹால் அளவு உள்ளிட்டவையும் இதில் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டது.

மார்க் எவ்வளவு
இந்த ஆய்வின்படி, மோசமான ஓட்டுநர்களைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் தாய்லாந்து முதலிடத்திலும், பெரு மற்றும் லெபனான் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. உலகின் சிறந்த ஓட்டுநர்கள் கொண்ட நாடாக ஜப்பான் உள்ளது. ஜப்பான் நாட்டிற்கு 4.57 மார்க் கிடைத்துள்ள நிலையில், இந்தியாவுக்கு 2.34 மார்க் மட்டுமே கிடைத்துள்ளது. ஜப்பானுக்கு அடுத்து நெதர்லாந்து இரண்டாவது இடத்திலும், நார்வே, எஸ்டோனியா மற்றும் ஸ்வீடன் ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளன.

காரணம்
இந்தியாவில் சில ஆண்டுகளாகவே சாலைப் பாதுகாப்பு குறித்த கவலை அதிகரித்து வருகிறது. இதனால் சாலை விபத்து சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. போக்குவரத்து சட்டங்களைக் கடுமையாக்குவது, அபராத தொகையை அதிகப்படுத்துவது உள்ளிட்ட நடவடிக்கை மூலம் பிரச்சினைக்குத் தீர்வு காணும் முயற்சியில் மத்திய அரசு இறங்கியுள்ளது. அதேநேரம் டிரைவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது, பயிற்சி, சாலை உள்கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்பத்தை மேம்படுத்துவது ஆகியவையும் சாலைப் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கும் முக்கியமான காரணங்கள் என்று வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர்.

நடவடிக்கை
இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் மக்கள்தொகை.. அதிகரிக்கும் வாகன எண்ணிக்கை ஆகியவை விபத்துகள் அதிகரிக்க முக்கிய காரணமாக இருக்கிறது. சாலை விபத்துகளால் உயிரிழப்பு ஏற்படும் அபாயம் அதிகம் என்பதால் இதை தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சாலைப் பாதுகாப்பை மேம்படுத்துவதில் தொடர்ச்சியான நடவடிக்கை தேவை என்றும் வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர்.
-
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
ஒரு சுறா கோபப்பட்டால் உங்களுக்கு இன்டர்நெட் கிடைக்காது.. ஹாட்ஸ்பாட் சென்னை தான் தெரியுமா -
இனி சீனாவுக்கு தெரியாமல் அணுவும் அசையாது.. எதிர்காலத்தை கணிக்கும் AI சாப்ட்வேர்.. திக்திக் ஆய்வு -
95% கொசுக்கள் காலி.. கூகுள் உருவாக்கிய புது வகை கொசுக்கள்! உலகை வியக்க வைக்கும் சீக்ரெட் திட்டம் -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய்












Click it and Unblock the Notifications