டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பிரதமர் மோடியின் ட்விட்டர் அக்கவுண்ட்டை திடீரென பாலோ செய்வதை நிறுத்திய யு.எஸ். அதிபர் மாளிகை

Google Oneindia Tamil News

டெல்லி: பிரதமர் மோடியின் ட்விட்டர் அக்கவுண்ட்டை திடீரென பாலோ செய்வதை அமெரிக்கா அதிபர் டிரம்ப்பின் வெள்ளை மாளிகை நிறுத்தியிருக்கிறது.

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி உள்ளிட்டோரின் ட்விட்டர் அக்கவுண்ட்டை கடந்த ஏப்ரல் 10-ந் தேதி அமெரிக்கா அதிபர் டிரம்ப்பின் வெள்ளை மாளிகை பாலோ அப் செய்திருந்தது. அதாவது ஹைட்ரோக்ஸிகுளோரோ குயின் மருந்து விவகாரத்தில் அமெரிக்கா- இந்தியா இடையே கருத்து வேறுபாடு எழுந்ததாக கூறப்பட்ட பின்னரும் பாலோ அப் செய்திருந்தது.

White House unfollows PM Modi on Twitter

ஆனால் தற்போது திடீரென ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகம் உள்ளிட்ட பலவற்றின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்குகளை பாலோ அப் செய்வதை திடீரென நிறுத்திவிட்டது வெள்ளை மாளிகை. அமெரிக்கா அதிபர் டிரம்ப்பின் வெள்ளை மாளிகை மொத்தம் 19 ட்விட்டர் அக்கவுண்ட்டுகளை பாலோ அப் செய்து வந்தது.

White House unfollows PM Modi on Twitter

அப்போது அதன் மொத்த பாலோயர்கள் எண்ணிக்கை 21.5 மில்லியனாக ஆக இருந்தது. தற்போது 13 ட்விட்டர் அக்கவுண்ட்டுகளை மட்டுமே வெள்ளை மாளிகை பாலோ அப் செய்கிறது. இதனால் பாலோயர்கள் எண்ணிக்கை மிக மோசமாக 0.5 மில்லியனாக குறைந்துள்ளது.

White House unfollows PM Modi on Twitter

Recommended Video

    சீன நிறுவனங்களிடம் இருந்து இனி எதுவும் வாங்க மாட்டோம் - ICMR அறிவிப்பு

    இத்தனைக்கும் டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகத்தைக் கூட பாலோ செய்வதை வெள்ளை மாளிகை நிறுத்திவிட்டது. பிரதமர் மோடிக்கும் அமெரிக்கா அதிபர் டிரம்ப்புக்கும் இடையே நல்ல நட்புறவு இருப்பதாக கருதப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

    English summary
    The White House has also unfollowed President Ram Nath Kovind and the Prime Minister's Office on Twitter.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X