இந்தியாவில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா.. டெல்டா என அழைக்கப்படும்.. உலக சுகாதார மையம் அறிவிப்பு
டெல்லி: உருமாறிய கொரோனா வகைகளுக்கு உலக சுகாதார அமைப்பு புதிய பெயர்களை அறிவித்துள்ள நிலையில், இந்தியாவில் முதலில் கண்டறியப்பட்ட B.1.617.2 கொரோனா வகை டெல்டா கொரோனா வகை என அழைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Recommended Video
உலகில் கொரோனா பரவலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பல்வேறு பகுதிகளிலும் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வகைகள் வைரஸ் பாதிப்பைப் பல மடங்கு அதிகரித்துள்ளது.
பல்வேறு நாடுகளிலும் கண்டறியப்படும் இந்த உருமாறிய கொரோனா வகைகளை B.1.1.7, B.1.617 போன்ற ஆங்கில எழுத்து மற்றும் எண் காம்பினேஷன்களில் பெயரிடப்படும்.

கொரோனா பெயர்கள்
இருப்பினும் இதைக் குறிப்பிடுவது கஷ்டம் என்பதால் பெரும்பாலும் எங்கு உருமாறிய கொரோனா கண்டறியப்பட்டதோ அதையே பெயராக வைத்து அழைக்கின்றனர். அதாவது பிரிட்டனில் முதலில் கண்டறியப்பட்ட B.1.1.7 வகை கொரோனாவை பிரிட்டன் வகை கொரோனா என்றும் B.1.351 கொரோனா வகையைத் தென் ஆப்பிரிக்கா கொரோனா வகை என்றும் மக்கள் அழைக்கின்றனர்.

உருமாறிய கொரோனா
இது போல நாடுகளை வைத்து கொரோனா வகைகளை அழைப்பது அந்த நாடுகளைக் களங்கப்படுத்தும் விதமாக அமைந்துவிடுகிறது. இம்மாத தொடக்கத்தில் B.1.617 வகையை இந்தியாவில் கண்டறியப்பட்ட கொரோனா என்று தான் அழைக்க வேண்டும் என மத்திய அரசு அறிவித்திருந்தது. உலக சுகாதார அமைப்பும் நாடுகளின் அடிப்படையில் வைரசின் பெயர்கள் இருக்கக் கூடாது என தெரிவித்தது.

டெல்டா வகை கொரோனா
இதைத் தொடர்ந்து உருமாறிய கொரோனா வகைகளுக்கு புதிய பெயர்கள் அறிவிக்கப்படும் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்திருந்தது. அதன்படி தற்போது உலக சுகாதார அமைப்பு உருமாறிய கொரோனா வகைகளுக்குப் பெயர்களை அறிவித்துள்ளன. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இந்தியாவில் முதலில் கண்டறியப்பட்ட B.1.617 வகை டெல்டா என்று அழைக்கப்படும் என உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. அதாவது இந்த வகை கொரோனாவை குறிப்பிடும்போது, இனி டெல்டா வகை கொரோனா என்றே குறிப்பிடப்படும்.

உருமாறிய கொரோனா பெயர்கள்
அதேபோல, பிரிட்டன் நாட்டில் கடந்த செப்டம்பர் மாதம் கண்டறியப்பட்ட கொரோனா 'Alpha' என்று அழைக்கப்படும். அதேபோல தென் ஆப்பிரிக்காவில் முதலில் கண்டறியப்பட்ட கொரோனா 'Beta' என அழைக்கப்படும். மேலும், பிரேசிலில் கண்டறியப்பட்ட வகை 'Gamma', அமெரிக்காவில் கண்டறியப்பட்ட கொரோனா 'Epsilon' என அழைக்கப்படும். இந்த ஆண்டு ஜனவரியில் பிலிப்பைன்ஸ் கண்டறியப்பட்ட கொரோனா 'தீட்டா' என்று பெயரிடப்பட்டுள்ளது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications