பரவும் கொரோனா.. மூக்கு வழி தடுப்பு மருந்தை யாரெல்லாம் பயன்படுத்தலாம்? என்டிஏஜிஐ தலைவர் விளக்கம்
டெல்லி: இந்தியாவில் மூக்கு வழியாக செலுத்தப்படும் இன்கோவேக் தடுப்பு மருந்து பூஸ்டராக செலுத்த மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. இந்நிலையில் தான் அந்த பூஸ்டர் டோஸ் யாருக்கு செலுத்தப்படும், எத்தனை சொட்டுகள் வழங்கப்படும் என்பது பற்றி தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழு தலைவர் அரோரா முழுமையாக விளக்கம் அளித்துள்ளார்.
Recommended Video
சீனாவை தொடர்ந்து இந்தியாவிலும் ஓமிக்ரான் உருமாறிய பிஎப் 7 கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த இந்தியாவில் மத்திய, மாநில அரசுகள் அதிரடியாக நடவடிக்கை எடுத்து வருகின்றன.
பொதுமக்கள் மாஸ்க் அணிய வேண்டும். தடுப்பூசி செலுத்தும் பணியை விரைவுப்படுத்த வேண்டும் என மத்திய அரசு அனைத்து மாநிலங்களுக்கும் அறிவுரை வழங்கி உள்ளது.

மூக்கு வழி மருந்துக்கு அனுமதி
இதற்கிடையே தான் பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்த நாசிவழி செலுத்தும் இன்கோவேக் (INCOVAAC) எனும் தடுப்பு மருந்துக்கு மத்திய அரசிடம் அனுமதி கோரியிருந்தது. அவசர கால பயன்பாட்டுக்காக மூக்கு வழியாக செலுத்தப்படும் தடுப்பு மருந்துக்கு இந்திய மருத்து கட்டுப்பாட்டு ஜெனரல் ஒப்புதல் வழங்கி உள்ளது. இதனை 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் செலுத்தி கொள்ளலாம். இது தற்போது பூஸ்டர் டோஸாக செலுத்தப்பட்டு வருகிறது.

கோவிட் இணையதளத்தில் தடுப்பூசி
அதாவது கோவிஷீல்ட், கோவேக்சின் 2 டோஸ்களை செலுத்தி கொண்டவர்கள் இன்கோவேக் தடுப்பூசியை பூஸ்டர் டோஸாக மூக்கு வழியாக எடுத்து கொள்ளலாம். இது தற்போது மத்திய அரசின் Cowin இணையதளத்தில் கிடைக்கிறது. இந்த தடுப்பூசி தனியார் மருத்துவமனைகளுக்கு ரூ.800 எனவும், அரசு மருத்துவமனைகளில் ரூ.325க்கும் விற்பனை செய்யப்பட்டுள்ளது. 2023 ஜனவரி இறுதியில் இன்கோவேக் அரசு மருத்துமனைகளில் தடுப்பூசி பயன்பாட்டுக்கு வர உள்ளது

நோய் தடுப்பு தேசிய குழு தலைவர்
இந்நிலையில் தான் மூக்கு வழியாக செலுத்தப்படும் இன்கோவேக் தடுப்பூசி பற்றி நோய்த்தடுப்புக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழு (National Technical Advisory Group on Immunisation or NTAGI)தலைவராக அரோரா பல்வேறு விஷயங்களை தெரிவித்துள்ளார். இவர் தலைமையிலான குழு தான் நோய் தடுப்புக்கான புதிய தடுப்பூசிகளை அறிமுகம் செய்வதிலும், நோய் தடுப்பு திட்டத்தை முன்னெடுப்பதிலும் முக்கிய பங்காற்றி வருகிறது. இந்நிலையில் தான் அரோரா இன்கோவோக் தடுப்பூசி பற்றி முக்கிய விஷயங்களை கூறியுள்ளார். அதுபற்றி அவர் கூறியதாவது:

4 சொட்டுக்கள் தான்
இந்தியாவில் மூக்கு வழியாக செலுத்தப்படும் தடுப்பு மருந்து அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. மூக்கு வழி செலுத்தும் மருந்து மொத்தம் நான்கு சொட்டுகளாக வழங்கப்படுகிறது. மொத்தம் 0.5 மில்லி மருந்து செலுத்தப்படும். இது மிகவும் பாதுகாப்பான தடுப்பு மருந்து. இந்த தடுப்பு மருந்து செலுத்தி கொண்டாலும் கூட மற்ற தடுப்பூசிகளை செலுத்திய பிறகு 15 முதல் 30 நிமிடங்கள் காத்திருப்பதை போல் நாம் காத்திருக்க வேண்டும். இதன்மூலம் அவர்களுக்கு ஏதாவது பிரச்சனை ஏற்படுகிறதா? என்பதை அறிந்து கொள்ள முடியும்.

சிறந்த முறை
மூக்கு வழியாக வழங்கப்படும் தடுப்பு மருந்து நல்ல நோய் தடுப்பு வழிமுறையை வழங்குகிறது. வைரஸின் தாக்கம் சுவாசத்தை பாதிக்கும் நிலையில் இது நல்ல பலனை கொடுக்கிறது. மேலும் வைரஸ் உடலுக்குள் நுழைய முடியாத நிலையை ஏற்படுத்துகிறது. இது வைரசுடன் போராட உதவும். கொரோனா மட்டுமின்றி சுவார பிரச்சனையை ஏற்படுத்தும் அனைத்து வைரஸ் மற்றும் தொற்றுநோய்களுக்கு இது ஒரு சிறந்த முறையாகும்.

பூஸ்டர் டோஸ் செலுத்தியவர்களுக்கு இல்லை
இந்தியாவில் ஏற்கனவே பூஸ்டர் டோஸ் தடுப்பூசிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இந்த வகை பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள் மூக்கு வழியாக வழங்கும் தடுப்பு மருந்தை எடுத்து கொள்ள முடியாது. அத்தகைய நபர்களுக்கு மூக்கு வழியாக செலுத்தப்படும் தடுப்பு மருந்து பரிந்துரைக்கப்படுவது இல்லை. இந்த மூக்கு வழியாக செலுத்தப்படும் தடுப்பு மருந்து என்பது தற்போது வரை பூஸ்டர் டோஸ் எடுத்து கொள்ளாதவர்களுக்கானது.

நான்காவது டோஸ் உண்டா?
மேலும் இந்தியாவில் நான்காவது டோஸை எடுத்து கொள்ள அனுமதி வழங்கப்படவில்லை. ஏனென்றால் ஆன்டிஜென் சிங்க் என்பது கவனிக்கத்தக்கது. அதன்மூலம் ஒரு குறிப்பிட்ட வகை ஆன்டிஜெனுடன் மீண்டும் மீண்டும் தடுப்பூசி போட்டு கொண்டால் அது பயனளிக்காது. இல்லாவிட்டால் உடல் நலக்குறைவை ஏற்படுத்தும். இதனை நாங்கள் கவனத்தில் கொண்டுள்ளோம். துவக்கத்தில் mRNA தடுப்பூசிகள் 6 மாத இடைவெளியில் செலுத்தப்பட்டது. பின்னர் 3 மாத இடைவெளியில் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டது.

4வது டோஸ் தேவையா?
தற்போது 4வது டோஸ் தடுப்பூசிகள் தேவையா? வேண்டாமா? என்பது தொடர்பான அதிகாரப்பூர்வ விஷயம் எதுவும் இல்லை. இருப்பினும் அமெரிக்கா, ஐரோப்பாவில் mRNA தடுப்பூசிகள் 4 டோஸ்கள் வரை மக்கள் செலுத்தி உள்ளனர். ஆனாலும் கூட அவர்கள் தொடர்ச்சியாக பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். எனவே, தற்போது நான்காவது டோஸ் எடுத்துக்கொள்வது பயனில்லை என தோன்றுகிறது'' என்றார்.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர் -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி












Click it and Unblock the Notifications