மம்தாவும் இல்லை.. கெஜ்ரிவாலும் இல்லை.. இந்தியா கூட்டணியை வழிநடத்த இவர் தான் சரியான ஆள்.. பரபர சர்வே
டெல்லி: இந்தியா கூட்டணியை வழிநடத்தச் சரியான ஆள் யார் என்பது தொடர்பாக இந்தியா டுட சர்வேயில் பொதுமக்கள் என்ன கூறியிருக்கிறார்கள் என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
நாட்டில் சில மாதங்களில் லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக அனைத்து அரசியல் கட்சிகளும் கூட்டணி, தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தைகளில் தீவிரமாக இறங்கியுள்ளது.

ஒரு பக்கம் மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜக தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியைத் தக்க வைக்க வேண்டும் என்ற முனைப்பில் களமிறங்குகிறது. இதற்கான பிரச்சாரத்தையும் அவர்கள் தொடங்கிவிட்டனர்.
இந்தியா கூட்டணி: மறுபுறம் மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாஜகவை வீழ்த்த வேண்டும் என்பதற்காக பல்வேறு எதிர்க்கட்சிகள் ஒரே அணியில் இணைந்து இந்தியா கூட்டணியை உருவாக்கியுள்ளன. இருப்பினும், இந்த இந்தியா கூட்டணிக்கு இப்போது சிக்கல் ஏற்பட்டுள்ளது. கூட்டணியைத் தலைமையேற்பது யார் என்பது தொடங்கி தொகுதிப் பங்கீடு வரை பல விவகாரங்களில் சிக்கல் தொடர்ந்தே வருகிறது.
இதற்கிடையே இந்தியா டுடே தனது மூட் ஆப் தி நேஷன் சர்வே முடிவுகளை சமீபத்தில் வெளியிட்டு இருந்தது. இதில் எதிர்க்கட்சிகள் குறித்தும் சில கேட்டிருந்தது. அதற்கான மக்கள் பதிலைப் பார்க்கலாம்.

சரியான தலைவர்: எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியைத் தலைமையேற்கச் சரியான நபர் யார் என்ற கேள்விக்கு ராகுல் காந்திக்குத் தான் அதிக ஆதரவு இருக்கிறது. சுமார் 21% பேர் ராகுல் காந்தி தான் எதிர்க்கட்சிகளை வழிநடத்தச் சரியான தலைவர் எனத் தெரிவித்துள்ளனர். கடந்த ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடுகையில் அவருக்கான ஆதரவு 3% குறைந்துள்ள போதிலும், அவர் இன்னும் முதலிடத்தில் தான் இருக்கிறார்.
அவருக்கு அடுத்தபடியாக டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் மற்றும் மேற்கு வங்க முதல்வர் மம்தா ஆகியோர் சரியாக 17% ஆதரவைப் பெற்று இரண்டாவது இடத்தில் இருக்கிறார்கள். கடந்த ஆக். மாதத்துடன் ஒப்பிடும் போது அவர்களுக்கான ஆதரவு 2% அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. அடுத்தபடியாக காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு 6% மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
ராகுல் செயல்பாடு: அதேபோல எதிர்க்கட்சி தலைவராக ராகுல் காந்தியின் செயல்பாடு எப்படி இருந்தது என்ற கேள்விக்கு 23% பேர் மிகச் சிறப்பாக இருந்ததாகக் கூறியுள்ளனர். தொடர்ந்து 16% பேர் சிறப்பாக இருந்ததாகவும் 16% பேர் சுமாராக இருந்ததாகவும் தெரிவித்துள்ளனர். அதிகபட்சமாக 35% மக்கள் எதிர்க்கட்சி தலைவராக ராகுல் காந்தி செயல்பாடுகள் மோசமாக இருந்ததாகத் தெரிவித்துள்ளனர். கடந்த ஆக். மாதம் நடத்தப்பட்ட சர்வேயில் 34% பேர் ராகுல் சிறப்பாகச் செயல்படுவதாகக் கூறியிருந்த நிலையில், இப்போது அவருக்கான ரேட்டிங் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
மணிப்பூர் முதல் மகாராஷ்டிரா வரை ராகுல் காந்தி பாரத் ஜோடோ நியாய யாத்திரையை நடத்தி வரும் நிலையில், அது தொடர்பாகவும் இதில் கேள்வி கேட்கப்பட்டு இருந்தது. அதில் 25% பேர் சிறந்த அரசியல் நகர்வு என்றும் 20 சதவீதம் பேர் காந்தி மக்கள் கவனத்தைப் பெறுவார் என்று கூறியுள்ளனர். அதேநேரம் 11 சதவீதம் பேர் இந்த யாத்திரை ராகுல் இமேஜ்ஜை தூக்கி நிறுத்த நடத்தப்படுவதாகவும் 32% பேர் இதனால் லோக்சபா தேர்தலில் எந்தத் தாக்கமும் ஏற்படாது என்றும் தெரிவித்துள்ளனர்.
-
அச்சத்தை கிளப்பிய வளைகுடா போர்! எரிபொருள் விநியோகம் குறித்து.. நாளை முதலமைச்சர்களுடன் மோடி ஆலோசனை! -
மாநில முதலமைச்சர்களுடன்.. பிரதமர் மோடி முக்கிய மீட்டிங்! மு.க.ஸ்டாலின் பங்கேற்காதது ஏன்? -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்!












Click it and Unblock the Notifications