வயசு 91.. மீண்டும் காதலில் விழுந்த பிரபல தொழிலதிபர்.. குவியும் வாழ்த்துகள்! அடடே.. பாருங்க

பிரபல தொழிலதிபர் இப்போது தனது 91 வயதில் மீண்டும் காதலில் விழுந்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பிரபல டிஎல்எஃப் குழுமத்தின் முன்னாள் தலைவரான குஷால் பால் சிங், இப்போது தனது 91 வயதில் மீண்டும் காதலில் விழுந்துள்ளார். யார் அவர், அவர் 91 வயதில் காதலிக்க என்ன காரணம் என்பது குறித்துப் பார்க்கலாம்.

முதுமை காலத்தில் குறைந்தது பேச்சுத் துணைக்காவது நமக்கு யாராவது வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். பாட்னர் இல்லாமல் இருந்தால்.. இதுபோன்ற காலங்களில் தனிமை படாதபாடு படுத்திவிடும்.

இதனால் அந்த வயதிலும் கூட முதியவர்களுக்கு மனஅழுத்தம் உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்படும் ஆபத்து உள்ளதாகவே மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் முதியவர்களுக்கு மேலும் சில மனநல பாதிப்புகள் ஏற்படும் அபாயமும் உள்ளதாக எச்சரிக்கப்படுகிறது.

 டிஎல்எஃப் குஷால் பால் சிங்

டிஎல்எஃப் குஷால் பால் சிங்

டிஎல்எஃப் குழுமத்தின் முன்னாள் தலைவர் குஷால் பால் சிங்.. 91 வயதான இவர் தான் இப்போது மீண்டும் காதலில் விழுந்துள்ளார்.. இவரது மனைவி இந்திராவுக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு கேன்சர் ஏற்பட்டது. அதைச் சரி செய்ய பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனில்லாமல் அவர் கடந்த 2018இல் உயிரிழந்தார். 65 ஆண்டுகளாக ஒன்றாக வாழ்ந்த மனைவியை இழந்ததால் கேபி சிங் மன ரீதியாகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டார். இதையடுத்து டிஎல்எஃப் குழுமத்தின் ஆக்டிவ் பணிகளில் இருந்தும் அவர் விலகினார்.

 காதலில் விழுந்தார்

காதலில் விழுந்தார்

சில மாதம் ஓய்வில் இருந்த அவர், இப்போது மீண்டும் காதலில் விழுந்துள்ளார். இது தொடர்பாகப் பிரபல ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், "எனக்கு இப்போது மீண்டும் ஒரு பாட்னர் கிடைத்துள்ளார். அவரின் பெயர் ஷீனா.. என் வாழ்க்கையில் சிறந்த மனிதர்களில் அவரும் ஒருவர்.. அவர் மிகவும் ஆற்றல் மிக்கவர்.. ஷீனா என் வாழ்க்கையில் முக்கியமான நபராக இருப்பார் என்பதில் எனக்கு எந்தவொரு சந்தேகமும் இல்லை.

 மனைவியின் மறைவு

மனைவியின் மறைவு

எனது மனைவியின் மறைவுக்குப் பிறகு முதல் சில நாட்களில் ரொம்பவே தனிமையை உணர்ந்தேன். எனக்கு இத்தனை ஆண்டுகள் ஒரு அற்புதமான திருமண வாழ்க்கை கிடைத்தது.. மறைந்த எனது மனைவி இந்திரா எனது துணை மட்டுமல்ல, சிறந்த நண்பரும் கூட.. 65 ஆண்டுகளுக்குப் பிறகு பாட்னரை இழப்பது ஒருவித மனச்சோர்வையே ஏற்படுத்துகிறது.. இதன் காரணமாகவே டிஎல்எப் நிறுவனத்தின் ஆக்டிவ் பணிகளில் இருந்து பின்வாங்க நான் முடிவு செய்தேன்.

 கடும் பாதிப்பு

கடும் பாதிப்பு

மனைவியின் இறப்பு என்னைக் கடுமையாகப் பாதித்தது. இது நிறுவனத்தின் செயல்பாடுகளையும் பாதிக்கக் கூடாது என்பதால் அதில் இருந்து விலகினேன்.. நிறுவனத்தை நடத்த பாசிட்டிவாகவும் சுறுசுறுப்பாகவும் இருக்க வேண்டும்.. நாம் வாழ்க்கையில் மிகவும் நேசிப்பவரை இழப்பது நம்மை மெதுவாக்குகிறது.. எனது மனைவி உயிரிழக்க ஆறு மாதங்களுக்கு முன்பு.. என்னை பார்த்து.. வாழ்க்கையை விட்டு விட வேண்டாம் என்றார்.. அதுவே உத்வேகம் அளித்தது.

 புதிய பாட்னர்

புதிய பாட்னர்

இருப்பினும், மனைவியின் இழப்பால் தனிமையில் தள்ளப்பட்டேன்.. முதல் சில நாட்களுக்கு என்னால் எதுவுமே செய்ய முடியவில்லை.. இப்போது எனக்கு புதிய பாட்னர் கிடைத்துள்ளார். அவர் தொடர்ந்து என்னை ஊக்குவிக்கிறார்.. நான் சோர்வாக இருக்கும் போதெல்லாம் அவர் என்னை ஊக்குவிக்கிறார். அவருக்கு உலகம் முழுவதும் பல அற்புதமான நண்பர்கள் உள்ளனர்.. அவர்களுடன் அவர் பயணம் செய்கிறார். நானும் இதுபோல பயணம் செய்ய விரும்புகிறேன்" என்று அவர் தெரிவித்தார்.

 குஷால் பால் சிங்

குஷால் பால் சிங்

அவருக்கு இப்போது 91 வயதில் வாழ்க்கைத் துணை கிடைத்துள்ளது. வெளிநாடுகளில் தனது கல்லூரி படிப்பை முடித்த அவர், தனது மாமனாரின் டிஎல்எஃப் நிறுவனத்தில் 1961ஆம் ஆண்டில் வேலைக்குச் சேர்ந்தார்.. சுமார் 50 ஆண்டுகள் தலைமை பொறுப்பில் இருந்த அவர், 2020இல் தனது பதவி விலகினார்.. இவரது காலத்தில் தான் டிஎல்எப் நிறுவனம் நில அதிர்வுகளைத் தாங்கும் வகையில் பல கட்டிடங்களை வெற்றிகரமாகக் கட்டினர். கடந்த 2008இல் அதிகபட்சமாக இவர், உலகின் 8ஆவது பெரிய பணக்காரர் என்ற இடத்திற்கு வந்தார். இப்போது அவரது சொத்து மதிப்பு 66,000 கோடியாக உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+