மத்திய அரசு வழங்கும் 15 ஆயிரம் ரூபாய்.. யாருக்கெல்லாம் கிடைக்க போகிறது.. முழு விவரம்
டெல்லி: முதல் முறையாக வேலைக்கு செல்பவர்களுக்கு ஒரு மாதம் ரூ.15 ஆயிரம் வழங்கும் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்த உள்ளது.இந்த திட்டம் ரூ.1 லட்சம் கோடி செலவில் அமல்படுத்தப்பட இருக்கிறது. இந்தியாவில் வேலைவாய்ப்பு அற்ற இளைஞர்கள் வேலை பெற வேண்டும் என்ற நோக்கத்தில் உருவாக்கப்பட்டுள்ள இந்த திட்டத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த திட்டப்படி, கூடுதல் வேலைவாய்ப்பை உருவாக்கும் உரிமையாளர்களுக்கு 2 ஆண்டுகளுக்கு ஊக்கத்தொகையும் வழங்கப்பட இருக்கிறது.
உற்பத்தி துறையில் சிறப்பு கவனம் செலுத்தி, அனைத்து துறைகளிலும் வேலைவாய்ப்பை உருவாக்குவதற்காக வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை திட்டம் கடந்த 2024-25 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த திட்டப்படி அடுத்த 2 ஆண்டுகளில் நாட்டில் 3½ கோடிக்கும் அதிகமான வேலைவாய்ப்புகளை உருவாக்குவதை ஊக்குவிக்க மத்திய அரசு விரும்புகிறது.

முதலாளிகளுக்கு ஊக்கத்தொகை
எனவே வேலைவாய்ப்பு உருவாக்கத்தை அதிகரிக்க ஊழியர்களுக்கும் முதலாளிகளுக்கும் ஊக்கத்தொகைகளை வழங்க போகிறது. முதல் முறையாகப் பணியமர்த்தப்படுபவர்களுக்கு ஒரு மாத ஊதியம் ரூ.15,000 வரை கிடைக்கும். அதேபோல், கூடுதல் வேலைவாய்ப்பை உருவாக்கும் உரிமையாளர்களுக்கு 2 ஆண்டுகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட இருக்கிறது. உற்பத்தித் துறைக்கு மேலும் 2 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்ட சலுகைகளும் வழங்கப்படஉள்ளது. 4.1 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, திறன் மேம்பாடு மற்றும் பிற வாய்ப்புகளை எளிதாக்கும் 5 திட்டங்களின் தொகுப்பின் ஒரு பகுதியாக இந்த திட்டம் அறிவிக்கப்பட்டது. இதன் மொத்த பட்ஜெட் ரூ.2 லட்சம் கோடி ஆகும்.
அமைச்சரவை ஒப்புதல்
இவற்றில், 1.92 கோடி பேர் முதன்முறையாகப் பணி அமர்த்தப்படுபவர்களாக, பணியிடத்தில் நுழைபவர்களாக இருப்பார்கள் என்றும் இந்தத் திட்டத்தின் பயன்கள் வருகிற ஆகஸ்ட் 1-ந்தேதி முதல் 2027-ம் ஆண்டு ஜூலை 31-ந்தேதி வரை உருவாக்கப்படும் வேலைகளுக்கு பொருந்தும் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த திட்டத்துக்கு பிரதமர் மோடி தலைமையில் நேற்று நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு விளக்கம்
இதுபற்றி மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறுகையில், "பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை, உற்பத்தித் துறையில் சிறப்பு கவனம் செலுத்தி, அனைத்து துறைகளிலும் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்துவதை ஆதரிப்பதற்கும், வேலைவாய்ப்பு கிடைப்பதற்கான திறன்கள் மற்றும் சமூக பாதுகாப்பை மேம்படுத்துவதற்கும் வேலைவாய்ப்புடன் கூடிய ஊக்கத்தொகை திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ், முதல் முறையாகப் பணியமர்த்தப்படுபவர்களுக்கு ஒரு மாத ஊதியம் (ரூ.15,000/- வரை) கிடைக்கும்.
2 லட்சம் கோடி
அதே வேளையில், கூடுதல் வேலைவாய்ப்பை உருவாக்குவதற்காக உரிமையாளர்களுக்கு ஓராண்டு முதல் இரண்டு ஆண்டுகள் வரை ஊக்கத்தொகை வழங்கப்படும். உற்பத்தித் துறைக்கு மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்ட சலுகைகளும் வழங்கப்படும். 4.1 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, திறன் மேம்பாடு மற்றும் பிற வாய்ப்புகளை எளிதாக்கும் பிரதமரின் ஐந்து திட்டங்களின் தொகுப்பின் ஒரு பகுதியாக 2024-25 மத்திய பட்ஜெட்டில் வேலைவாய்ப்புடன் கூடிய ஊக்கத்தொகைத் திட்டம் அறிவிக்கப்பட்டது, இதன் மொத்த பட்ஜெட் ஒதுக்கீடு ரூ.2 லட்சம் கோடி ஆகும்.
யாருக்கு பொருந்தும்
வேலைவாய்ப்பு ஊக்கத்தொகைத் திட்டம் நாட்டில் 3.5 கோடிக்கும் அதிகமான வேலைவாய்ப்புகளை ரூ.99,446 கோடி செலவினத்துடன், 2 ஆண்டுகளில் உருவாக்கப்படுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இவற்றில், 1.92 கோடி பயனாளிகள் முதன்முறையாகப் பணியில் இணைபவர்களாக இருப்பார்கள். இந்தத் திட்டத்தின் நன்மைகள் 2025 ஆகஸ்ட் 01 முதல் 2027 ஜூலை 31 வரை உருவாக்கப்படும் வேலைகளுக்குப் பொருந்தும்.
இந்தத் திட்டம் இரண்டு பகுதிகளைக் கொண்டுள்ளது. இதில் பகுதி அ என்பது முதல் முறையாக வேலை செய்பவர்களை மையமாகக் கொண்டது மற்றும் பகுதி ஆ உரிமையாளர்களை மையமாகக் கொண்டது:
பகுதி அ: முதல் முறை பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை:
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் பதிவுசெய்த முதல் முறை ஊழியர்களை இலக்காகக் கொண்டு, இந்தப் பகுதி இரண்டு தவணைகளில் ரூ.15,000 வரை ஒரு மாத தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ஊதியத்தை வழங்கும். ரூ.1 லட்சம் வரை ஊதியம் பெறும் பணியாளர்கள் இதற்கு தகுதி உடையவர்கள்.
பகுதி ஆ: உரிமையாளர்களுக்கு ஆதரவு:
இந்தப் பகுதி அனைத்துத் துறைகளிலும் கூடுதல் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதை உள்ளடக்கும், உற்பத்தித் துறையில் சிறப்பு கவனம் செலுத்தும். ரூ.1 லட்சம் வரை ஊதியம் பெறும் பணியாளர்களுக்கு உரிமையாளர்கள் ஊக்கத்தொகை பெறுவார்கள். குறைந்தபட்சம் ஆறு மாதங்களுக்கு நிலையான வேலைவாய்ப்புடன் கூடுதலாக பணிபுரியும் ஒவ்வொரு ஊழியருக்கும், இரண்டு ஆண்டுகளுக்கு, மாதத்திற்கு ரூ.3000 வரை, உரிமையாளர்களுக்கு அரசு ஊக்கத்தொகை வழங்கும். உற்பத்தித் துறையைப் பொறுத்தவரை, ஊக்கத்தொகை 3-வது மற்றும் 4வது ஆண்டுகளுக்கும் நீட்டிக்கப்படும்." இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
-
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications