மோடிக்கு 3ம் இடம்.. இந்தியாவின் நீண்ட கால பிரதமர் யார் தெரியுமா? ‛டாப்’ 2ல் யாரு? தந்தை-மகள் ‛மாஸ்’
டெல்லி: நம் நாட்டின் பிரதமராக இன்று தொடர்ந்து 3வது முறையாக பாஜகவின் நரேந்திர மோடி பதவியேற்க உள்ளார். இந்நிலையில் தான் இந்தியாவில் அதிக காலம் பிரதமராக பொறுப்பு வகித்தவர்களின் பட்டியலில் நரேந்திர மோடி 3வது இடத்தில் உள்ளார். இதில் ‛டாப்’ 2 பட்டியலில் தந்தை - மகள் அடுத்தடுத்து உள்ளனர். அவர்கள் யார்? எவ்வளவு ஆண்டு பிரதமராக இருந்தனர்? என்பது பற்றி இங்கு பார்க்கலாம்.
நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் பாஜக 240 இடங்களில் வெற்றி பெற்றது. மத்தியில் ஆட்சியை பிடிக்க 272 எம்பிக்களின் ஆதரவு தேவை. இதனால் கூட்டணி கட்சிகளிடம் உள்ள 52 எம்பிக்களின் ஆதரவுடன் பிரதமர் மோடி இன்று இரவு 7.15 மணிக்கு பிரதமராக பொறுப்பேற்க உள்ளார்.

அவருடன் பாஜக எம்பிக்கள், கூட்டணி கட்சிகளை சேர்ந்த எம்பிக்கள் என மொத்தம் 30 பேர் வரை மத்திய அமைச்சர்களாக பதவியேற்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தான் மத்திய அமைச்சர்களாக பொறுப்பேற்க உள்ள எம்பிக்களுக்கு நரேந்திர மோடி இன்று தேநீர் விருந்து அளித்தார்.
இந்நிலையில் தான் மீண்டும் பிரதமராக பொறுப்பேற்கும் நரேந்திர மோடி மறைந்த முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் சாதனையை சமன் செய்ய உள்ளார். அதாவது இந்தியா சுதந்திரம் அடைந்தபோது முதல் பிரதமராக ஜவஹர்லால் நேரு பொறுப்பேற்று செயல்பட்டார். அவர் தொடர்ந்து 3 முறை பிரதமராக இருந்தார். அவரது மறைவுக்கு பிறகு இந்தியாவில் யாரும் தொடர்ந்து 3 முறை பிரதமராக பொறுப்பேற்றது இல்லை.
மத்திய அமைச்சர்கள் யார் யார்? சஸ்பென்ஸ் உடைத்த பிரதமர் மோடியின் இல்ல ‛‛டீ பார்ட்டி’’
ஆனால் பிரதமர் நரேந்திர மோடி 2014, 2019 ஆகிய ஆண்டுகளை தொடர்ந்து இன்று 3வது முறையாக மீண்டும் பிரதமராக பொறுப்பேற்கிறார். இதன்மூலம் நரேந்திர மோடி, நேருவின் சாதனையை சமன் செய்ய உள்ளார். இந்நிலையில் தான் இந்தியாவில் நீண்ட காலம் பிரதமராக பதவி வகித்தவர்கள் தலைவர்கள் யார்? இன்று 3வது முறையாக பிரதமராகும் நரேந்திர மோடி இந்த பட்டியலில் எத்தனையாவது இடத்தில் உள்ளார்? என்று இங்கு பார்ப்போம்.
ஜவஹர்லால் நேரு: இந்த பட்டியலில் முதலிடத்தில் ஜவஹர்லால் நேரு உள்ளார். சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு. காங்கிரஸ் கட்சியின் முன்னாள் பிரதமரான இவர் சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமராவார். 1947 முதல் 1964 வரை மொத்தம் 16 ஆண்டுகள் 286 நாட்கள் பிரதமராக பதவி வகித்துள்ளார். குறிப்பாக தொடர்ந்து 3 முறை அவர் பிரதமராக பொறுப்பு வகித்தார். மாரடைப்பால் அவர் காலமானார்.
அண்ணாமலை இல்லை.. மீண்டும் மத்திய அமைச்சராகும் எல் முருகன்? மோடியின் தேநீர் விருந்தில் ட்விஸ்ட்
இந்திரா காந்தி: இதற்கு அடுத்ததாக 2வது இடத்தில் உள்ளவர் இந்திரா காந்தி. மறைந்த முன்னாள் பிரதமர் நேருவின் மகள் இவர். தந்தை நேருவின் மறைவுக்கு பிறகு லால் பகதூர் சாஸ்திரியின் அமைச்சரைவையில் தகவல் மற்றும் தொலை தொடர்பு துறை அமைச்சராக முதலில் செயல்பட்டார். அதன்பிறகு காங்கிரஸ் கட்சியை வழிநடத்தினார்.
‛இந்தியாவின் இரும்பு பெண்’ என்ற புனைப்பெயருடன் அழைக்கப்பட்டார். இவர் 3 முறை பிரதமராக பதவி வகித்துள்ளார். 1966 முதல் 1977 வரை 3 முறை அவர் பிரதமராக பதவி வகித்தார். அதன்பிறகு 1980 முதல் 1984 ல் படுகொலை செய்யப்படும் வரை பிரதமர் பதவியில் இருந்தார். இந்திரா காந்தி மொத்தம் 15 ஆண்டு 350 நாட்கள் பிரதமர் பதவி வகித்தார்.
நரேந்திர மோடி: நேரு, இந்திரா காந்தி ஆகியோருக்கு அடுத்த இடத்தில் பாஜகவின் நரேந்திர மோடி உள்ளார். இவர் 2014ல் முதல் முறையாக பிரதமர் ஆனார். தற்போது வரை அவர் பிரதமராக தொடர்ந்து வருகிறார். 10 ஆண்டு 19 நாட்கள் அவர் பிரதமராகி உள்ளார். இன்று மீண்டும் அவர் பிரதமராக பொறுப்பேற்க உள்ளார். இதன்மூலம் இந்தியாவின் நீண்டகால பிரதமர் பட்டியலில் மோடி 3வது இடத்தில் உள்ளார். இன்று மீண்டும் அவர் பிரதமராக பொறுப்பேற்று 5 ஆண்டு பதவிக்காலத்தை முடிக்கும் பட்சத்தில் கூட நேரு மற்றும் இந்திரா காந்திக்கு அடுத்த இடத்தில் தான் மோடி நீடிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
மன்மோகன் சிங்: அதேபோல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மன்மோகன் சிங் தொடர்ந்து 2 முறை பிரதமராக பதவி வகித்தவர். இவர் கடந்த 2004, 2009 ஆகிய ஆண்டுகளில் பிரதமராக பொறுப்பேற்று முழுமையாக 10 ஆண்டு ஆட்சியை நிறைவு செய்தார். மன்மோகன் சிங் மொத்தம் 10 ஆண்டுகள் 4 நாட்கள் முதல்வராக பொறுப்பு வகித்துள்ளார். இதன்மூலம் இந்தியாவில் அதிக ஆண்டு பிரதமர் பொறுப்பு வகித்த தலைவர்களில் மன்மோகன் சிங் 4வது இடத்தில் உள்ளார்.
-
பேசியது 15 நிமிடம்.. காத்திருந்தது 2 மணி நேரம்! அமித்ஷாவை சந்திக்க ஹோட்டலில் காத்துக்கிடந்த எடப்பாடி -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
திண்டுக்கல் கொடை ரோடு விஏஓ சத்யா கனவிலும் நினைக்காதது.. அரசு ஊழியர்கள் அறிய வேண்டிய பாடம்












Click it and Unblock the Notifications