டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மெட்ராஸ் ஐஐடி மாணவர்.. புலனாய்வில் புலி.. சிபிஐ இடைக்கால இயக்குநர் நாகேஷ்வர் ராவ் யார் தெரியுமா?

Google Oneindia Tamil News

Recommended Video

    சென்னையில் படித்த சிபிஐ-ன் புதிய இடைக்கால இயக்குனர்- வீடியோ

    டெல்லி: சிபிஐ இயக்குனர் அலோக் வர்மா மற்றும் சிறப்பு இயக்குனர் ராஜேஷ் அஸ்தானா ஆகிய இருவரையும் கட்டாய விடுப்பில் அனுப்பியுள்ள மத்திய அரசு, அதற்கு பதிலாக இடைக்கால சிபிஐ இயக்குநராக நாகேஷ்வர் ராவ் என்ற மூத்த ஐபிஎஸ் அதிகாரியை நியமித்து உள்ளது.

    இவர் இதுவரை சிபிஐ கூடுதல் இயக்குனராக பதவி வகித்து வந்தார்.

    Who is M Nageshwar Rao, the new interim CBI chief

    நியமனங்களுக்கான மத்திய அமைச்சரவை குழு இதற்கான ஒப்புதல் அளித்த நிலையில் இன்று நாகேஷ்வர் ராவ் சிபிஐ இடைக்கால இயக்குனர் பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.

    மன்னேம் நாகேஷ்வர் ராவ் என்பது இவரது முழுப்பெயர். 1986ஆம் ஆண்டு ஒடிசா ஐபிஎஸ் பேட்ஜ்ஜை சேர்ந்தவர் இவராகும்.

    இதற்கு முன்பாக பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார் நாகேஷ்வர் ராவ். ரயில்வே காவல் துறையின் கூடுதல் இயக்குனராக பதவி வகித்த நாகேஷ்வர் ராவ், கடைசியாக சிபிஐ இணை இயக்குனராக பதவி வகித்தார்.

    தெலுங்கானா மாநிலம் வாரங்கல் மாவட்டத்தில் உள்ள பொரேநர்சாபூர் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் நாகேஷ்வர் ராவ். முதுகலை கல்லூரிப் படிப்பை உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் முடித்த இவர் ஐஐடி மெட்ராஸ் கல்வி நிறுவனத்தில் ஆய்வு படிப்பை முடித்துவிட்டு ஐபிஎஸ் அதிகாரியானவர்.

    கமகம கம்பங் கூழ், சுவையான ஊறுகாய்.. அடடே.. இப்படியும் கல்யாண சாப்பாடு போடலாமா! கமகம கம்பங் கூழ், சுவையான ஊறுகாய்.. அடடே.. இப்படியும் கல்யாண சாப்பாடு போடலாமா!

    ஒடிசா வரலாற்றில் முதல் முறையாக டிஎன்ஏ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பலாத்கார வழக்கு ஒன்றில் குற்றவாளிகளை கண்டுபிடித்தவர் நாகேஷ்வர் ராவ்தானாம். மணிப்பூரில் பணியாற்றியபோது, தீவிரவாதிகள் ஊடுருவலுக்கு எதிராக தீரத்தோடு பணியாற்றியவர். மிக கடுமையான அதிகாரி என்று பெயர் பெற்றவர் நாகேஷ்வர் ராவ்.

    English summary
    In a bid to put an end to the ugly public spat between the top two in the CBI, the government in a mid-night move appointed M Nageshwar Rao as the interim CBI chief.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X