பீனிக்ஸ்.. விழுந்து விழுந்து விஸ்வரூபமாக எழுந்த "சிம்ரான்".. ஐபிஎல்லை கலக்கிய புது இளம் வீரர்! யார்?
டெல்லி: ஐபிஎல் 2023 தொடரில் பஞ்சாப் அணிக்காக ஆடும் பிரப்சிம்ரான் சிங் பெரிய அளவில் கவனம் ஈர்த்து உள்ளார். இந்த சீசனில் அதிகம் கவனிக்கப்படும் வீரராக இவர் உருவெடுக்க வாய்ப்புகள் உள்ளன.
2018 ஐபிஎல் தொடர் ஏலம் நடந்து கொண்டு இருந்த சமயம் அது. அப்போது கிங்ஸ் லெவன் பஞ்சாப் என்ற பெயரில் செயல்பட்டுக்கொண்டு இருந்தது பஞ்சாப் கிங்ஸ் அணி. ப்ரீத்தி ஜிந்தா ஏலத்தில் திடீரென பஞ்சாப்பை சேர்ந்த இளம் வீரர் பிரப்சிம்ரான் சிங் என்ற வீரரை ஏலம் எடுத்தார். 4.8 கோடி ரூபாய் கொடுத்து போட்டி போட்டு இவரை அணியில் எடுத்தார்.
அப்போது வெறும் 18 வயதே ஆகி இருந்த பிரப்சிம்ரான் சிங்கிற்கு எதற்கு நான்கரை கோடி ரூபாய் என்ற கேள்வி ஐபிஎல் உலகில் எழுந்தது. அப்போது பஞ்சாப் அணியில் ராகுல், மயங்க் அகர்வால், க்றிஸ் கெயில் உள்ளிட்ட டாப் ஆர்டர் இருந்தது. அதனால் அணியில் பிரப்சிம்ரான் சிங்கிற்கு வாய்ப்பு கிடைக்கவே இல்லை. ஒரே ஒரு போட்டியில் மட்டுமே அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. அதிலும் ஓப்பனிங் வீரரான இவருக்கு மிடில் ஆர்டரில் மட்டுமே வாய்ப்பு கிடைத்தது.

வாய்ப்பே இல்லை
அந்த மேட்சில் இவர் அடித்த ரன்கள் வெறும் 16. அதன்பின் அந்த சீசனில் இவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. அதன்பின் ஐபிஎல்லில் இரண்டு சீசன்கள் இவர் வெட்டியாக இருந்தார். இவரை எந்த அணியும் கண்டுகொள்ளவே இல்லை. அதன்பின் 2020ல் இவரை மீண்டும் 55 லட்சம் ரூபாய்க்கு பஞ்சாப் அணி ஏலம் எடுத்தது. இந்த முறையும் அணியில் முக்கிய வீரர்கள் இருந்ததால் பிரப்சிம்ரான் சிங்கிற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. எனக்கு தொடர் வாய்ப்பு கிடைத்தால் நானும் நிரூபிப்பேன் என்று நம்பிக்கையாக இருந்தார்.
அவருக்கு இரண்டு போட்டிகள் மட்டுமே அந்த வருடம் வாய்ப்பு கிடைத்தது. அதுவும் மிடில் ஆர்டரில். அந்த தொடரில் அவர் 15 ரன்கள் மட்டுமே எடுத்தார். பொதுவாக தொடர்ச்சியாக 4 - 5 வாய்ப்புகள் கிடைத்தால் இது போன்ற இளம் வீரர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்த முடியும். ஆனால் இவர் முழுமையாக செட்டாகும் முன்பே, அவரை பெஞ்சில் உட்கார வைத்து இவரின் பார்மை காலி செய்தனர். பாவம் வாய்ப்பு கிடைக்காமலே.. அப்படியே இவர் அந்த சீசனை தொலைத்தார். அதன்பின் 2022 வரை வெட்டியாக இருந்தவரை 2022ல் மீண்டும் 60 லட்சத்திற்கு பஞ்சாப் அணி எடுத்தது.
இந்த முறை அவருக்கு ஒரே ஒரு வாய்ப்புதான் கிடைத்தது. அணியில் அவருக்கு தொடர்ந்து பேட்டிங் செய்ய சான்ஸ் கிடைக்கவில்லை.
2023 அணி
2023ல் மீண்டும் பஞ்சாப் அணியால் ரீ டெயின் செய்யப்பட்ட பிரப்சிம்ரான் சிங்.. அணியில் ஆடுவது சந்தேகமாகவே இருந்தது. மயங்க அகர்வால் உடன் பிரைஸ்டோ ஆடுவதாகவே இருந்தது. ஆனால் அவரும் காயம் காரணமாக ஆடாமல் போக 22 வயதான பிரப்சிம்ரான் சிங்கிற்கு அணியில் தொடக்க வீரராக இறங்கும் வாய்ப்பு கிடைத்தது. கொல்கத்தாவிற்கு எதிரான முதல் போட்டியில் 12 பந்தில் 23 ரன்கள் எடுத்து அணிக்கு நல்ல தொடக்கம் கொடுத்து நம்பிக்கை கொடுத்தார். ஆனால் அந்த போட்டி வெறும் டீசர்தான்.
அதிலும் நேற்றைய போட்டியில் போட்டியில் போல்ட் பந்தில் அவர் அடித்த சிக்ஸ்.. இவர் மீதான நம்பிக்கையை கூட்டியது. நேற்றைய போட்டியில் ராஜஸ்தானுக்கு எதிராக இவர் ஆடியது ருத்ர தாண்டவம் என்றுதான் கூற வேண்டும். நேற்று இங்கே முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 197-4 ரன்கள் எடுத்தது. பஞ்சாப் அணியின் தொடக்க வீரர் பிரப்சிம்ரான் 34 பந்தில் 60 ரன்கள் எடுத்தார். ஆஹா பஞ்சாப் அணியில் இப்படி ஒரு வீரரா.. யாருங்க இது என்று உற்று பார்க்கும் அளவிற்கு இவரின் பேட்டிங் தாறுமாறாக இருந்தது.
இவர் 7 பவுண்டரி, 3 சிக்ஸ் என்று அசத்தினார். அதன்பின் தவான் இன்னொரு பக்கம் 56 பந்தில் 86 ரன்களை எடுத்தார். இவரும் 9 பவுண்டரி, 3 சிக்ஸ் அடித்தார். இதன் பின் இறங்கிய ராஜஸ்தான் அணி கடைசிவரை போராடி 192-7 ரன்கள் மட்டுமே எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. ராஜஸ்தான் அணியில் சஞ்சு சாம்சன் மட்டுமே 25 பந்தில் 42 ரன்கள் எடுத்தார். 5 பவுண்டரி, 1 சிக்ஸ் அவர் அடித்தார். நேற்று பஞ்சாப் அணி வெற்றிபெற பிரப்சிம்ரான் பேட்டிங் முக்கிய காரணமாக இருந்தது.

வாசிம் ஜாப்பரின் நேரடி கண்காணிப்பில் பயிற்சி பெற்று வரும் இவர் ஐபிஎல் உலகில் புதிய நம்பிக்கை தரும் ஓப்பனிங் வீரராக உருவெடுத்து உள்ளார். இந்த முறை அவருக்கு தொடர் வாய்ப்புகள் வழங்கப்படும். இந்த தொடரில் டாப் ரன் ஸ்கோர் வீரர்களில் இவரும் ஒருவராக இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது .
நேற்று போட்டியில் கடைசியில் இறங்கிய இம்பாக்ட் வீரர் துருவ் ஜாரில் 15 பந்தில் 32 ரன்கள் எடுத்தார். 3 பவுண்டரி, 2 சிக்ஸ் என்று அடித்தார். நேற்று போட்டி நடந்த இந்த பிட்ச் ஒரு ஹை வே தார் ரோடு போன்ற பிட்ச். பேட்டிங்கிற்கு இது சாதகமாக இருந்தாலும் மற்ற வீரர்கள் சொதப்பிய போதும் சிம்ரான் சிறப்பாக ஆடியது பெரிய அளவில் கவனிக்கப்பட்டது.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங்












Click it and Unblock the Notifications