யுபிஎஸ்இ தேர்வில் அகில இந்திய அளவில் முதலிடம் பிடித்த பெண்? யார் இந்த சக்தி துபே?
டெல்லி: மத்திய அரசு தேர்வாணையமான யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் இன்று வெளியான நிலையில் அகில இந்திய அளவில் முதலிடத்தை பெற்றுள்ளார் சக்தி துபே எனும் மாணவி. இவர் உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர்.

உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜை சேர்ந்த சக்தி துபே அலகாபாத் பல்கலைக்கழகத்தில் பிஎஸ்சி பயோ கெமிஸ்ட்ரி பட்டம் பெற்றார். அது போல் பனாரஸ் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டமும் பெற்றார். யுபிஎஸ்சி தேர்வு எழுத வேண்டும் என்ற உந்துதலின்படி இவர் கடந்த 2018ஆம் ஆண்டு முதல் தேர்வுக்கு தயாராகி கொண்டிருந்தார். அந்த வகையில் அரசியல் அறிவியலையும் சர்வதேச உறவுகளையும் விருப்பப் பாடமாக தேர்வு செய்திருந்தார்.
தனது சாதனை குறித்து சக்தி துபே கூறியிருப்பதாவது: எனது தந்தை காவல் துறையில் பணிபுரிந்து வருகிறார். அவர் பணி செய்வதை பார்த்து வளர்ந்திருக்கிறேன். ஆரம்பத்தில் இது ஏதோ வேலை என்றுதான் நினைத்தேன். ஆனால் பிறகுதான் இது கடமை என்பதை உணர்ந்தேன். போலீஸாரோ அல்லது அவர்களது வாகனமோ ஒருவரை பாதுகாப்பாக உணர வைக்கிறது என்பதை பிறகுதான் உணர்ந்தேன்.
சிறிய பதவி
சிறிய பதவியில் இருந்தாலும் யாருக்காவது நல்லதொரு மாற்றத்தை தரலாம் என நினைத்தேன். பொதுமக்களுக்கு அதிகம் சேவை செய்ய யுபிஎஸ்சி தேர்வை தேர்வு செய்தேன். அரசு வேலை மீது எவ்வளவு ஆர்வம் எனக்கு இருக்கிறது என்பது எனது சாதனையிலேயே தெரிகிறது. எனது பயணத்திற்கு எனது பெற்றோரும் ஊக்குவித்தனர். இவ்வாறு சக்தி துபே தெரிவித்துள்ளார்.
யுபிஎஸ்இ தேர்வில் 2வது இடம்
யுபிஎஸ்இ தேர்வில் இரண்டாவது இடம் பிடித்த ஹர்ஷிதா கோயல் பிகாம் பட்டதாரி. இவர் பரோடா பல்கலைக்கழகத்தில் படித்துள்ளார். இவரும் அரசியல் அறிவியல், சர்வதேச உறவுகளை விருப்பப் பாடமாக எடுத்துள்ளார்.
3ஆவது இடம்
அது போல் 3ஆவது இடம் பிடித்தவர் டோங்ரே ஆர்சித் பராக், இவர் வேலூர் விஐடியில் electrical and electronics engineering பிரிவில் பிடெக் படித்துள்ளார். தத்துவவியலை விருப்பப்பாடமாக எடுத்திருந்தார்.
என்னென்ன பணிகள்
ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் (வெளியுறவுத் துறை), ஐஆர்எஸ், ஐஎஃப்எஸ் (வனத் துறை) உள்ளிட்ட குடிமைப் பணிகளுக்கு மத்திய பணியாளர் தேர்வாணையம் யுபிஎஸ்சி தேர்வை நடத்தி வருகிறது. இந்த தேர்வு முதல் நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்முகத் தேர்வு என்ற மூன்று நிலைகளை கொண்டது.
ஆண்டுக்கு ஒரு முறை
ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே இந்தத் தேர்வு நடத்தப்படுகிறது. அந்த வகையில் 2024 ஆம் ஆண்டு ஜூன் 16ஆம் தேதி முதல் நிலைத் தேர்வும், செப்டம்பர் மாதம் முதன்மைத் தேர்வும், இந்த ஆண்டு ஜனவரி- ஏப்ரல் வரை நேர்காணலும் நடந்தது.
தேர்வு முடிவுகள்
அவ்வாறு நடந்த தேர்வின் முடிவுகள் இன்று வெளியாகியுள்ளன. https://upsc.gov.in/ என்ற இணையதளத்தில் தேர்வு முடிவுகளை பார்க்கலாம். இந்த தேர்வு எழுதியவர்களில் 1009 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அகில இந்திய அளவில் உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த சக்தி துபே என்பவர் முதலிடம் பெற்றுள்ளார். ஹர்ஷிதா கோயல் இரண்டாவது இடத்தையும் டோங்ரே அர்ச்சித் பராக் மூன்றாவது இடத்தையும் பெற்றுள்ளனர்.
எத்தனை பேர் தேர்வு எழுதினர்
இந்த சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்கு கடந்த ஆண்டு 9.92 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர். அவர்களில் 5.83 லட்சம் பேர் முதல்நிலைத் தேர்வு எழுதியிருந்தனர். அவர்களில் 14,627 பேர் முதன்மை தேர்வுக்கு தேர்ச்சி பெற்றனர். இந்த 14,627 பேரில் 2,845 பேர் நேர்முகத் தேர்வுக்கு தேர்வாகினர்.
எத்தனை பெண்கள்
முதல் 5 இடத்தில் 3 பெண்களும் இரு ஆண்களும் உள்ளனர். முதல் 25 இடங்களில் 11 பெண்களும் 14 ஆண்களும் இடம் பெற்றுள்ளனர். யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி அடைந்த 25 பேர் பொறியியல், மருத்துவம், கட்டடக் கலை, அறிவியல் , காமர்ஸ் உள்ளிட்ட படிப்புகளை ஐஐடி, என்ஐடி, விஐடி, ஜேஎன்யூ, டெல்லி பல்கலைக்கழகம், அலகாபாத் பல்கலைக்கழகம் உள்ளிட்டவைகளில் படித்தவர்கள்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications