Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அதானியை குறிவைக்கும் சீனா.. பின்னணியில் உள்ள துறைமுகம் அரசியல் இதுதான்.. முழு விபரம் இதோ

Subscribe to Oneindia Tamil

டெல்லி: அதானி நிறுவனம் மீது பரபரப்பான குற்றச்சாட்டுகளை முன்வைத்த ஹிண்டன்பர்க் நிறுவனம் மூடப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்தின் பின்னணியில் சீனா உள்ளதாக கூறப்படும் சூழலில் அதானி குழுமம் குறிவைக்கப்பட்டது ஏன்? அதன் பின்னணியில் உள்ள அரசியல் என்ன? அதானி குழுமத்துக்கு அமெரிக்காவின் சப்போர்ட் இருக்கிறதா? என்பது பற்றிய விபரங்களை இங்கே பார்ப்போம்.

நம் நாட்டில் உள்ள பிரபலமான தொழிலதிபர்களில் ஒருவர் கவுதம் அதானி. குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர். 2024ம் ஆண்டு நிலவரப்படி நம் நாட்டின் பெரும் பணக்காரர்களின் பட்டியலில் 2வது இடத்தை கவுதம் அதானி பிடித்தார். அவரது சொத்து மதிப்பு என்பது 116 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது. இந்த பட்டியலில் முதலிடத்தில் 119.5 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்து மதிப்புடன் முகேஷ் அம்பானி முதலிடத்தை பிடித்தார்.

gautam adani adan group

அதானி குழுமம் என்பது துறைமுகம், விமான நிலையம், நிலக்கரி, புதுப்பிக்கத்தக்க எனர்ஜி உள்பட பல்வேறு துறை சார்ந்த தொழில்களை மேற்கொண்டு வருகிறது. கவுதம் அதானி மீது கடந்த 2023ம் ஆண்டு ஹிண்டன்பர்க் நிறுவனம் பரபரப்பான குற்றச்சாட்டுகளை முன்வைத்தது.

இந்த நிறுவனத்தின் பின்னணியில் சீனா முதலீட்டாளர்கள்/சீன உளவு தம்பதிகள் இருப்பதாக கூறப்பட்டது. இதையடுத்து அதானி குழுமத்தின் பங்குகள் சரிந்தன. தற்போது அந்த ஹிண்டன்பர்க் நிறுவனம் மூடப்பட்டுள்ளது. தங்களின் பணி முடிவடைந்துவிட்டதால் நிறுவனம் மூடப்படுவதாக ஹிண்டன்பர்க் அறிவித்துள்ளது. அமெரிக்காவில் இயங்கி வந்த ஹிண்டன்பர்க் நிறுவனம் அதானி குழுமம் மீது குற்றசாட்டுகளை முன்வைத்தது. இதனால் அதானி குழுமம் சரிவை சந்தித்த நிலையில் தற்போது அந்த நிறுவனம் மூடப்பட்டுள்ளது. இதையடுத்து மீண்டும் அதானி குழுமத்தின் பங்குகளின் மதிப்பு என்பது கிடுகிடுவென உயர தொடங்கி உள்ளது. இது அதானி குழுமத்துக்கு குட்நியூஸாக அமைந்துள்ளது. முதலீட்டாளர்கள் அதானி குழு பங்குகள் மீது முதலீடுகளை அதிகரிக்க தொடங்கி உள்ளனர்.

இப்போது சில முக்கிய கேள்விகள் உள்ளன. அது என்னவென்றால் ஹிண்டன்பர்க் கூறிய தகவலை தொடர்ந்து மூத்த வழக்கறிஞர் மகேஷ் ஜெத்மலானி சில கேள்விகளை எழுப்பினார். அதோடு அதானி மீதான குற்றச்சாட்டுக்கு பின்னணியில் சீனாவின் சதி இருப்பதாக அவர் கூறினார். இதுதொடர்பாக மகேஷ் ஜெத்மலானி, ‛‛உலகில் சக்திவாய்ந்த நாடுகள் அதானியை குறிவைப்பது ஏன்? சீனர்களுக்கு எதிராக அதானிக்கு அமெரிக்காவின் ஆதரவு இருப்பது ஏன்? இந்தியாவுக்கான அமெரிக்காவின் தூதர் எதற்காக அதானியின் குஜராத் மாநில முந்த்ரா மற்றுமு் காவ்டா சைட்டுக்கு சென்று பார்வையிட்டார்? அதோடு அதுதொடர்பான போட்டோக்களை ஏன் சமூக வலைதளங்களில் பதிவிட்டார்?. இவை அனைத்துக்கும் ஒரு பதில் தான் உள்ளது. அமெரிக்கா அதானியை நம்புகிறது. அதோடு அதானிக்கு பின்னால் அமெரிக்கா இருக்கிறது என்ற மறைமுக மெசேஜை உலக நாடுகளுக்கு தெரிவித்துள்ளது. இதற்கு இன்னொரு சாட்சியை கூற வேண்டும் என்றால் கடந்த 2023ம் ஆண்டில் அதானியின் கொழும்பு துறைமுக திட்டத்துக்கு அமெரிக்காவின் அரசு நிறுவனமான டிஎப்சி தான் நிதியளித்தது. அப்போது அந்த நிறுவனம் ஹிண்டன்பர்க்கின் குற்றச்சாட்டை புறம்தள்ளி அதானியை அரவணைத்தது என்பதை நாம் மறந்து விடக்கூடாது. இது அதானியின் பங்குகள் மதிப்பை உயர்த்த வழிவகுத்தது'' என்றார்.

அதேவேளையில் கடந்த 2017 ம் ஆண்டில் ராகுல் காந்தி சீன தூதரகத்துக்கு சென்று அமைச்சர்களை சந்தித்தார். இதனை முதலில் மறுத்த ராகுல், அதன்பிறகு போட்டோக்கள் வெளியான பிறகு ஏன் ஒப்புக்கொண்டார்?. 2018 ல் சீனாவின்திபெத்தில் உள்ள கைலாஷ் மானசரோவர் பயணத்தின்போது ராகுல் காந்தி மீண்டும் சீன அமைச்சர்களை சந்தித்து ஏன்? காங்கிரஸ் கட்சி ஏன் அதானியை குறிவைக்கிறது? பிரதமர் நரேந்திர மோடி ஏன் லட்சத்தீவில் ஸ்நோர்கெலிங் செய்தார்? பிரதமர் மோடியின் இந்த செயல் மாலத்தீவை குறிவைத்ததா? இல்லை சீனாவை குறிவைத்ததா? இதன் பின்னணியில் உள்ள திட்டம் பற்றி அறிய வேண்டும் என்றால் நமக்கு புவிசார் அரசியல் மற்றும் வர்த்தகம் சார்ந்த விவகாரங்கள் பற்றிய அறிவு என்பது வேண்டும்.

புரியும்படி கூற வேண்டும் என்றால் உலக வரலாறு முழுவதுமே துறைமுகம் மற்றும் காரிடார்களை கைப்பற்றுவதன் மூலமாகவே உலகளாவிய அதிகாரத்தை பெறுவது என்பது இருந்துள்ளது. கிபி 1453ம் ஆண்டில் ஒட்டோமான் பேரரசு (இப்போது துருக்கி) அந்த காலத்தில் பெரிய சகாப்தமாக திகழ முக்கிய காரணம் கான்ஸ்டான்டினோப்பிளை கைப்பற்றியது தான். அதன்பிறகு ஐரோப்பியர்கள் ஆப்பிரிக்காவின் மேற்கு கடற்கரையில் கடல் வழிகளை கண்டுபிடித்த பிறகு தான் ஒட்டோமான் பேரரசு சரிவை சந்தித்தது. அதோடு போர்த்துகீசியம், பிரிட்டடிஷ், டச்சு, பிரெஞ்சு பேரரசுகளின் எழுச்சிக்கு வழிவகுத்தது. இதை நாம் உதாரணமாக வைத்து கொள்வோம்.

இப்போது உலக சக்திகள் அனைத்தும் கிழக்கு நோக்கி வேகமாக நகர்ந்து செல்கின்றன. 21ம் நூற்றாண்டான இப்போது புவிசார் அரசியல் என்பது துறைமுகங்களை கைப்பற்றுவதை சார்ந்து பலமாக மாறி வருகிறது. இதில் இப்போது வெற்றியாளராக இருப்பது சீனா தான். இதனை வெளிப்படையாக ஒப்புக்கொள்ள வேண்டும். சீனா 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள ‛ஒன் பெல்ட் அண்ட் ஒன் ரோடு' என்ற திட்டத்தை பயன்படுத்தி வருகிறது. இதற்காக சீனா - பாகிஸ்தான் இடையே வழித்தடம், இந்திய பெருங்கடலில் String of Pearls உள்ளிட்டவையும் அடங்கும். இது நம் நாட்டின் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. நம் நாட்டை சுற்றிய நாடு, கடல்களை சீனா ஆக்கிரமிக்கும்போது அது நம் நாட்டின் பாதுகாப்பை நிச்சயம் கேள்விக்குறியாக்கும்.

இப்படியான சூழலில் தான் நம் நாட்டில் இருந்து ஒருவர் அதிவேகமாக வளர தொடங்கினார். அதோடு உலகளவில் வர்த்தக பாதைகளை ஏற்படுத்துவதில் முன்னணயில் உள்ள சீனாவின் ஆதிக்கத்துக்கு சவால் விடுக்க தொடங்கினார். குஜராத்தின் முந்தராவில் துறைமுகத்தை உருவாக்குவதில் வெற்றியும் பெற்றார். இவரை தான் பலரும் ‛மோடியின் கூட்டாளி' என்று சொல்கின்றனர். இப்போது உங்களுக்கு தெரிந்திருக்கும் அது கவுதம் அதானி என்று. பிரிட்டிஷ்காரர்களுக்கு பிறகு பெரிய உள்கட்டமைப்பு திட்டங்களுடன் மிகப்ரெபயி துறைமுகைமத்தை உருவாக்கும் பணியை தான் கவுதம் அதானியின் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. மத்திய அரசால் செய்ய துணியாததை முதலீடுகள் மூலம் அதானி மேற்கொண்டு வருகிறார். அதோடு வெளிநாடுகளிலும் இந்தியாவின் ஆதிக்கத்தை அதானி குழுமம் முன்னெடுத்து வருகிறது. இது சீனாவுக்கு நேரடி சவாலாக உள்ளது.
இதனால் தான் சீனாவை பொறுத்தவரை அதானியை வீழ்த்துவது என்பது முக்கியம். ஏனென்றால் அதானியை வீழ்த்தினால் இந்தியாவுக்கு எதிரான போரில் பாதி வெற்றியை பெற்றது போல் சீனாவுக்கு இருக்கும். இதனால் சீனா, தொடர்ந்து அதானிக்கு எதிராக சதிகளை அரங்கேற்றி வருகிறார்.

ஆஸ்திரேலியாவில் போட்டி

இன்னும் சில உதாரணங்களை சொன்னால் நன்றாக புரியும். அதாவது பெரும் வளங்களை கொண்ட நாடுகளில் சீனாவுக்கு பிறகு நுழைந்த ஒரு நிறுவனம் என்றால் அது நம் நாட்டின் அதானி நிறுவனம் தான். பல சவால்கள் இருந்தாலும் கூட அதானி நிறுவனம் ஆஸ்திரேலியாவில் நிலக்கரி சுரங்கள் உள்ளிட்ட வளங்களுக்காக 9 பில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்துள்ளது. ஆஸ்திரேலியாவில் சீனா தான் முதலீடு செய்து ஆதிக்கம் செலுத்தி வந்தது. தற்போது அதனை உடைத்து அதானி முன்னேறி வருகிறார். இது சீனாவின் செல்வாக்கிற்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளது.

2010 ஆகஸ்ட்: அதானி நிறுவனம் ஆஸ்திரேலியாவில் கார்மைக்கேல் சுரங்கங்களை வாங்கியது. இதன்மூலம் தான் நிலக்கரி சுரங்கங்கங்களை ஆஸ்திரேலியாவில் வாங்கிய முதல் நிறுவனமாக அதானி குழுமம் பெருமை பெற்றது. அதுவரை அங்கு சீனா மற்றும் பிற கிழக்காசிய நாடுகளின் ஆதிக்கம் தான் இருந்தது.

2011 மே: நம் நாட்டுக்கு நிலக்கரி ஏற்றுமதி செய்வதற்காக ஆஸ்திரேலியாவின் வடக்கு குயின்ஸ்லாந்தில் அபாட் பாயிண்ட் நிலக்கரி முனையத்தை அதானி குழுமம் தட்டித்தூக்கியது.

2012 ஸ்டாப் அதானி: 2012ம் ஆண்டில் STOADANI என்றபிரசாரம் முன்னெடுக்கப்பட்டது. அதானி குழுமத்துக்கு எதிராக பல அமைப்புகள் போராட்டத்தை தொடங்கினர். 2 சதவீத அளவுக்கு நிலக்கரி எடுத்தபோதிலும் அதானி குழுமத்துக்கு சமூக ஆர்வலர்கள் என்ற பெயரில் 1000க்கும் அதிகமானவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதானி குழுமத்தை தவிர வேறு எந்த நிறுவனமும் இத்தகைய எதிர்ப்பை சந்திக்கவில்லை.

2014 ஏப்ரல்: 2014ல் நியூ சவுத் வேல்ஸ் பகுதியின் Premier ஆக இருந்த மைக் பெய்ர்த் உலகின் பெரிய நிலக்கரி துறைமகமாக உள்ள நியூகேஸ்டின் துறைமுகத்தை 98 ஆண்டுக்கு 1.75 பில்லியன் அமெரிக்க டாலருக்கு சீனா நிறுவனத்துக்கு வழங்கியது. அதன்பிறகு 2015ம் ஆண்டில் மைக் பெயர்த் பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளானார்.

2015: ஆஸ்திரேலியாவின் வடக்கு டெரிட்டரியாக உள்ள டார்பின் துறைமுகத்தை சீனா 99 ஆண்டுகளுக்கு 506 மில்லியன் அமெரிக்க டாலருக்கு ஒப்பந்தம் எடுத்தது.

2017: 2017 ல் மணிலாவில் ஆசியான் உச்சி மாநாடு நடந்தது. இதில் பிரதமர் நரேந்திர மோடி, ஜ்பபான் பிரதமர் ஷின்சோ அபே, ஆஸ்திரேலிய பிரதமர் மால்கம் டர்ன்புல், அமெரிக்க அதிபர் டிரம்ப் பங்கேற்றனர். அவர்கள் இந்தோ பசிபிக் பிராந்திய பாதுகாப்பு மற்றும் தென் சீன கடல் சீனாவுக்கு ராணுவ ரீதியாகவும் எதிர்க்க திட்டமிட்டனர். அதோடு குவாட் அமைப்பை புதுப்பிக்க ஒப்புக்கொண்டனர். இது குவாட் அமைப்பினருக்கும், சீனாவுக்கும் இடையே பெரிய பிரச்சனைகளை இருக்கும் என்று அப்போது செய்திகள் வெளியாகின.

2018: ஆஸ்திரேலியா - சீனா இடையேயான உறவு என்பது பிரச்சனையாக மாற தொடங்கியது. இருநாடுகள் இடையேயான அரசு, ஊடகங்கள் இடையே பிரச்சனையால் உறவு கசக்க தொடங்கியது.

2020: ஆஸ்திரேலியாவின் நிலக்கரிக்கு அறிவிக்கப்படாத தடையை சீனா விதித்தது. கனடாவில் இருந்து சீனா நிலக்கரியை வாங்க தொடங்கியது. அதன்பிறகு ஆஸ்திரேலியாவின் நிலக்கரிக்கு விதிக்கப்பட்ட அறிவிக்கப்படாத தடை நீக்கப்பட்டாலும் கூட இருநாடுகள் இடையேயான பிரச்சனை என்பது இன்னும் முடிவுக்கு வரவில்லை.

இலங்கை விவகாரம்

2011 ம் ஆண்டு: சீனாவின் மெர்சன்ட் துறைமுகங்கள்(சிஎம் துறைமகங்கள்) 2011ல் சலுகை விலையில் 35 ஆண்டுக்கு இலங்கயைின் துறைமுக ஆணையத்திடம் இருந்து தெற்கு முனையத்தை கையாள்வதற்கான ஒப்பந்தத்தை பெற்றது. இது இந்திய பெருங்கடலில் மிக முக்கியமான இடமாகும். சீனாவின் இந்த முதலீடு மட்டுமின்றி கொழும்பு துறைமுகத்தின் விரிவாக்கம் என்பது அந்த நாட்டுக்கு துறைமுக தொழிலுக்கு ஊக்கமாக அமைந்ததோடு, நம் நாட்டுக்கு அச்சுறுத்தலாக மாறியது. இந்த துறைமுகம் இப்போது நம்நாட்டின் டிரான்ஷிப்மென்ட் சரக்குகளில் 50 சதவீதத்துக்கு அதிகமானவற்றை கையாள்கிறது.

2015 ஆகஸ்ட்: இலங்கையில் சீனாவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்த அதானி குழுமம் கேரளா அரசுடன் சலுகை விலையில் ஒரு ஒப்பந்தம் செய்கிறது. இந்த ஒப்பந்தம் என்பது டிரான்ஷிப்மென்ட் சரக்குகளை மட்டுமே மையப்படுத்தி போடப்பட்டது. கடல் அரிப்பை காரணம் காட்டி தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் உள்ளூர் கிறிஸ்தவ மிஷனரி மற்றும் மீனவர்கள் எதிர்ப்பு தெரிவத்தனர். இருப்பினும் தேசிய பசுமை தீர்ப்பாயம் பச்சைக்கொடி காட்டியது. அதோடு எதிர்ப்பு தெரிவித்த லத்தீன் சர்ச் வாரிய உறுப்பினர் வெளிநாடுகளிடம் இருந்து நிதி பெறுகின்றனர் என்பது 2022ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் கண்டறியப்பட்டது. இது வன்முறைக்கு வழிவகுத்தது. இப்போது இந்த திட்டம் வெற்றி பெற்றுள்ளது.

2017 செப்டம்பர்: சீனாவின் சிஎம் துறைமுக நிறுவனம் தீவின் தெற்கு கடற்கைரயில் உள்ள ஹம்பந்தோட்டா துறைமுகத்தை 99 ஆண்டு குத்தகை எடுத்தது. இது சர்ச்யைானது. இந்திய பெருங்கடலில் சீனாவின் கடற்படை சார்ந்த நடவடிக்கைகளை உறுதிப்படுத்த சீனா முடிவு செய்தது. அதோடு இந்தியாவுக்கு சிக்கலை ஏற்படுத்த இலங்கைக்கு தேவையான உதவிகளை சீனா செய்ய தொடங்கியது.

2021 செப்டம்பர்: கொழும்பு துறைமுக முனையத்தில் அதானி நிறுவனம் இதுவரை இல்லாத அளவுக்கு அதானி நிறுவனம் 700 மில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்தது. இது சீனாவை எதிர்த்து இந்தியா இலங்கை பிராந்தியத்தில் நுழைவதை உறுதி செய்தது. வேறு எந்த நிறுவனமும் இலங்கையில் முதலீடு செய்ய தயாராக இல்லாத சூழலில் அதானி நிறுவனம் இந்த முடிவை எடுத்தது.

2023 பிப்ரவரி: இலங்கையில் அதானியின் காற்றாலை நிறுவனம் 450 மில்லியன் அமெரிக்க டாலரை முதலீடு செய்ய முடிவு செய்தது

2023 நவம்பர்: அமெரிக்க அரசால் ஆதரிக்கப்படும் டிஎப்சி நிறுவனம் அதானியின் கொழும்பு முனையத்தில் 553 மில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்தது. அதுமட்டுமின்ற 2023ம் ஆண்டின் தொடக்கத்தில் ஹிண்டன்பர்க் வெளியிட்ட அதானி குழும முறைகேடுகளை புறம்தள்ளி இந்த முடிவை அந்த நிறுவனம் எடுத்தது.

2024 பிப்ரவரி: அதானி நிறுவனத்துக்கு இலங்கையில் சுற்றுச்சூழல் ஆர்வலர்களிடம் இருந்து பெரும் எதிர்ப்புகள் வர தொடங்கியது.

2024 ஜுன்: அதானியின் மின் திட்டத்தில் கொள்முதல் செயல்முறை மற்றும் கட்டுமானத்துக்கு எதிராகவும், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்துவதாகவும் இலங்கை உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதோடு அதானி நிறுவனத்துக்கு வழங்கப்படும் அனுமதி குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டது.

இஸ்ரேலில் என்ன நடந்தது?

2023 ஜனவரி: இஸ்ரேலில் ஹைஃபா துறைமுகம் உள்ளது. இந்த துறைமுகத்தை கைப்பற்றி சீனா மற்றும் அதானி இடையே கடும் போட்டி நிலவியது. இது இந்தியா மற்றும் அதானிக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாக அமைந்தத. சூயஸ் கால்வாய்க்கு அருகே அமைந்துள்ள இந்த துறைமுகம் என்பது முக்கிய இடமாகும். அதோடு கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளை இணைக்கும் குறுகிய பகுதி இதுவாகும். இஸ்ரேலி்ல சீனா ஏற்கனவே 2 துறைமுகங்களை கைப்பற்றி உள்ளது. ஆனாலும் அதானி கைப்பற்றிய ஹைஃபா துறைமுகம் சீனாவின் ஷாங்காய் இன்டர்நேஷனல் துறைமுக குழுமம் 25 ஆண்டு கால ஒப்பந்தத்தில் கைப்பற்றிய ஹைஃபா விரிகுடா தனியார் துறைமுகத்துடன் சேர்ந்து செயல்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதேபோல் சீனா நிறுவனம் ஒன்று அஷ்டோட் துறைமுகத்தில் சரக்கு முனையத்தை கையாண்டது. இப்போது இது நடைமுறையில் இல்லை.

2023 ஜனவரி: ஹிண்டர்பர்க் குற்றச்சாட்டின் பின்னணியில் சீனா உள்ளதாக வழக்கறிஞர் மகேஷ் ஜெத்மலானி குற்றம்சாட்டி உள்ளது. சீன உளவாளி அன்லா செங் மற்றும் அவரது கணவர் மார்க் கிங்டன் ஆகியோர் அதானி பற்றி அவதூறுகளை பரப்ப ஹிண்டர்பர்க்கை உருவாக்கியதாக அவர் தெரிவித்தார். இந்த நிறுவனம் சீனாவுக்கு ஆதரவாகவும், அதானிக்கு எதிராகவும் செயல்பட்டது என்று மகேஷ் ஜெத்மலானி தெரிவித்துள்ளார். இதற்காக கோடக் மஹிந்திரா இனவெ்ட்மென்ட்ஸ் லிமிடெட் (கேஎம்ஐஎல்) நிறுவனத்தை பயன்படுத்தி உள்ளனர். முன்னதாக கடந்த 2016ம் ஆண்டில் அன்லா செங் சப்சீனா என்ற டிஜிட்டல் நியூஸ் மற்றும் ஈவென்ட் பிளாட்பார்மை தொடங்கினார். இது சீனாவின் மேற்குலக நாடுகளில் உள்ளவர்களை கவரும் வகையில் தொடங்கப்பட்டது. அதன்பிறக 2022ல் சீனா ப்ராஜெக்ட் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டத. அமெரிக்கா, சீனா இடையே விரிசல் ஏற்பட்டது. அதோடு இந்த நிறுவனம் சீனாவின் கம்யூனிச அரசில் உள்ள முக்கிய தலைவர்களுடன் தொடர்பில் உள்ளதாக குற்றச்சாட்டுக்கு உள்ளானது.

தான்சானியா/ஆப்பிரிக்கா

2024 மே மாதம்: சீனாவின் ஹட்சின்சன் போர்ட் ஹோல்டிங் எனும் சீன நிறுவனத்திடம் இருந்து டார் எஸ் சலாம் துறைமுகத்தை அதானி நிறுவனம் கைப்பற்றியது. இதன்மூலம் ஆப்பிரிக்க நாடான தான்சானியாவில் அதானி குழுமம் கால்பதித்தது. தான்சானியாவில் சீனாவின் ஆதிக்கம் அதிகமாவதை அந்த நாடு விரும்பவில்லை. இதுவே அந்த துறைமுகம் அதானி நிறுவனத்துக்கு கிடைக்க முக்கிய காரணமாகும். ஆப்பிரிக்காவின் கிழக்கு கடற்கரை பகுதிகளில் சீனாவின் ஆதிக்கம் அதிகரிக்க தொடங்கியது. இப்படியான சூழலில் இது நம் நாட்டுக்கு பிளஸ் பாயிண்ட்டாக பார்க்கப்படுகிறது. அதேபோல் செங்கடலின் நுழைவு வாயிலாக கருதப்படும் ஜிபூட்டியில் சீனா வெளிநாட்டு கடற்படை தளத்தை முதல் முறையாக அமைத்தது.

அதோடு 20 பில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகம மதிப்பிலான திட்டங்களுக்கு சீன வங்கிகள் நிதி வழங்குகின்றன. ரயில், சாலை, துறைமுக மேம்பாட்டுக்கு சீனா வழங்கிய நிதி என்பது தான்சானியா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் உள்பட பிறநாடுகளுக்கு செலுத்த வேண்டிய கடனை விட அதிகமாக உள்ளது. இதற்கு பதிலடியாக இந்தியா - மத்திய கிழக்கு - இ ஐரோப்பா பொருளாதார வழித்தடம் என்பது திட்டமிடப்பட்டுள்ளது. 2023 செப்டம்பர் 10ம் தேதி டெல்லியில் ஜி20 உச்சி மாநாட்டில் இதுபற்றி அமெரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சவுதி அரேபியா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜோர்டான், ஐரோப்பிய ஒன்றிய அரசுகள் இணைந்து வழித்தடத்தை உருவாக்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்தன. இது இந்தியாவில் இருந்து ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சவூதி அரேபியா, இஸ்ரேல், கிரீஸ் வழியாக ஐரோப்பாவுக்கு முன்மொழியப்பட்ட காரிடாராகும். ஆப்பிரிக்காவை பொறுத்தவரை தான்சானியா மட்டுமின்றி கென்யா, சூடான், எகிப்து உள்ளிட்ட நாடுகளிலும் சீனா துறைமுகங்களை வசப்படுத்தி உள்ளது.

மியான்மர் விவகாரம்

2019 மே மாதம்: யாங்கோன் பிராந்தியத்தில் புதிய கன்டெய்னர் டெர்மினலை 290 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பீட்டில் அமைக்க அதானி குழும் அறிவித்தது. ராணுவத்துக்கு சொந்தமான நிலத்தில் இது அமைய இருந்தது. ஆனால் நாட்டில் நிலவும் ராணுவ ஆட்சியால் இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. அதன்பிறகு அந்த நாட்டு அரசு மனித உரிமை மீறல் தொடர்பான குற்றச்சாட்டில் இந்த துறைமுகத்தை 2023 மே மாதம் விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டது.

2023 டிசம்பர் மாதம்: கியூக்ஃபியூ துறைமுகம் அமைக்க சீனாவுக்கு மியான்மர் அனுமதி வழங்கி இருந்தது. இந்த திட்டம் 2010ம் ஆண்டில் இருந்து தொடங்கப்பட்டது.இதன்மூலம் நம் நாட்டை விட சீனா அதிக லாபம் பெற உள்ளது. ரோஹிங்கியாக்களை வெளியேற்றவும், மியான்மரின் ராணுவத்துக்கும் இந்த துறைமுகம் என்பது முக்கியமானதாகும். ரோஹிங்கியாக்கள் மியான்மர் நாட்டு மக்கள் ஆவார்கள். அவர்களுக்கு எதிராக மனித உரிமை மீறல்கள் நடந்தாலும் கூட சீனா எந்த வகையிலும் பாதிப்பை சந்திக்கவில்லை.

வங்கதேச நிலவரம்

2010 மார்ச்: சிட்டகாங்க் நகரில் ஆழ்டகல் துறைமுகத்தை உருவாக்க சப்போர்ட் செய்வதாகஅறிவித்தது.

2015 ஆகஸ்ட்: சீனாவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்த அதானி குழுமம் 1500 மெகாவடா் கோடா மின் உற்பத்தி நிலையத்தை தொடங்க தேவையான நடவடிக்கையை எடுத்தது. இந்த திட்டம் நம் நாட்டில் மட்டுமின்றி வங்கதேசத்திலும் பெரும் எதிர்ப்பை சந்தித்தது. ஆனால் இறுதியாக சவால்களை தாண்டி 2023ல் செயல்பாட்டுக்கு வந்தது.

2016 அக்டோபர்: வங்கதேசத்துடன் சீனா மொத்தம் 26 புரிந்துணர்வு ஒப்பந்தங்களை செய்தது. சீனாவின் பிஆர்ஐ திட்டத்தின் ஒரு பகுதியாக வங்கதேசத்தை, சீனா மாற்றியது.

2020 டிசம்பர் மற்றும் 2021 மே: சீனாவின் 2640 மெகாவாட் பயாரா மின் உற்பத்தி நிலையம் என்பது வங்கதேசத்தில் மிகவும் பெரியது. இங்கிருந்து மின்சாரம் என்பது ஒரு யூனிட்டுக்கு ரூ.18.37 என்ற விலைக்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால் அதானியின் கோடா மின் உற்பத்தி நிலையத்தில் இருந்து சீனா நிர்ணயித்த விலையை விட பாதி விலைக்கு மின்சாரம் வழங்கப்பட்டது. அதாவது அதானி நிறுவனம் வங்கதேசத்துக்கு ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.9.09 க்கு விற்பனை செய்தது.

ஈரான் - பாகிஸ்தான்

2015மே மாதம்: ஈரானில் சபாஹர் துறைமுகம் உள்ளது. இந்த துறைமுகத்தை மேம்படுத்துவது தொடர்பாக இந்தியா சார்பில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்ட்டது. 2016 மே 23ம் தேதி பிரதமர் மோடி ஈரான் சென்றபோது இந்த ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டது. இது சீனா - பாகிஸ்தான் கூட்டணி மற்றும் சீானவின் மிகவும் பிரலமான பிஆர்ஐக்கு இந்தியா கெ் வைத்தது. மேலும் யூரேசியாவுடன் நெருக்கமாகவும், பாகிஸ்தானை புறம்தள்ளவும் இந்தியாவுக்கு இந்த திட்டம் உதவி செய்கிறது. சபாஹரியில் இருந்து சில நூறு கிலோமீட்டர் தொலைவில் பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மகாணத்தில் குவாடர் துறைமுகம் உள்ளது. இங்கு சீனா பெருமளவில் முதலீடு செய்துள்ளது.

தெற்காசியாவை பொறுத்தவரை சீனா சார்பில் வங்கதேசத்தில் சிட்டகாங், இலங்கையில் ஹம்பந்தோட்டா, பாகிஸ்தானின் குவாடர் துறைமுகங்கள் கையாளப்பட்டு வருகின்றன. இது இந்தியாவை சுற்றிய மரண முக்கோனம் என்று அழைக்கப்படுகிறது. மேலும் இந்திய பெருங்கடல் பிராந்தியத்தில் 2021 ஆகஸ்ட் 19 ம் தேதியின் நிலவரப்படி சீன துறைமுக முதலீட்டை பொறுத்து டார் எஸ் சலாம் துறைமுகத்தை அதானி குழுமம் கைப்பற்றி இருப்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+