Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பிப் 15ல் சம்பவம்.. 23ம் தேதி தான் கசிந்தது.. அதுவும் எப்படி? ஜாபர் சாதிக் குறித்து வெளியான தகவல்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: டெல்லி போலீசார் மேற்கு டெல்லியில் உள்ள கைலாஸ் பார்க் பகுதியில் கடந்த பிப்ரவரி 15ம் தேதி தமிழக போதைப்பொருள் கும்பலை கைது செய்தனர். அவர்களுக்கு பின்னணியில் ஜாபர் சாதிக் இருப்பதை அறிந்த போலீசார் கடந்த பிப்ரவரி 23ம் தேதி அவரது ஆபிஸில் நோட்டீஸ் ஒட்டினார்கள்.. அதன்பிறகே இந்த விவகாரம் வெளியே தெரியவந்துள்ளது.

போதைப்பொருள் தயாரிக்க பயன்படுத்தப்படும் முக்கிய வேதிப்பொருட்களை தேங்காய் பவுடர் மற்றும் சத்து மாவு பாக்கெட்களில் மறைத்து வைத்து நியூசிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கு இந்தியாவில் இருந்து கடத்தப்பட்டு வருவதை அந்த நாடுகளை சேர்ந்த சுங்கத்துறை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இந்த தகவலை மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசாருக்கு அமெரிக்கா மற்றும் நியூசிலாந்து புலனாய்வு அதிகாரிகள் கொடுத்தனர்.

Who is the Jaffer Sadiq and how Delhi police know about drug smuggling?

இதன்பேரில் டெல்லி போலீஸ் சிறப்பு பிரிவு மற்றும் போதைப் பொருள் தடுப்புபிரிவு அதிகாரிகள் அடங்கிய தனிப்படை போலீஸார் மேற்கு டெல்லி உள்ள கைலாஸ் பார்க் பகுதியில் உள்ள குடோன் ஒன்றில் கடந்த பிப்ரவரி 15ம் தேதி சோதனை நடத்தினர். இங்கிருந்து தான் அந்த கடத்தல் கும்பல் போதைப்பொருளை சத்து மாவு பாக்கெட்களில் மறைத்து வைத்து நியூசிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கு கடத்தியது தெரியவந்தது.

இதையடுத்து தனிப்படை போலீசார் கடந்த 15-ந்தேதி அன்றே சோதனையின் முடிவில் சென்னையை சேர்ந்த முகேஷ் (வயது 33), முஜீபூர் ரகுமான் (34), விழுப்புரத்தை சேர்ந்த அசோக் (34) ஆகிய 3 பேரை கைது செய்தார்கள். அவர்களிடம் நடத்திய விசாரணையில், இதன் பின்னணியில், தமிழகத்தை சேர்ந்த மேலும் சிலர் இருப்பதும், கடந்த 3 ஆண்டுகளில் 45 முறை சுமார் 3,500 கிலோ போதைப்பொருட்களை (வேதிப்பொருள்) வெளிநாடுகளுக்கு அவர்கள் அனுப்பியதாகவும், இதன் மூலம் கடத்தியதன் மூலம் சுமார் ரூ.2,000 கோடி வரை இவர்கள் சம்பாதித்திருக்கலாம் என்றும் விசாரணையில் தெரியவந்தது.

இதனிடையே கடத்தல் கும்பலுக்கு மூளையாக செயல்பட்டது தமிழ் சினிமா திரைப்பட தயாரிப்பாளர் ஜாபர் சாதிக் , நடிகர் மைதீன் என்பது தெரியவந்தது. இந்த விவகாரம் நேற்று விஸ்வரூபம் ஆன நிலையில் ஜாபர் சாதிக் தலைமறைவாக உள்ளதால், அவரை டெல்லி போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள் .

இந்நிலையில் டெல்லி போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீஸார் கடந்த 23-ம் தேதி மயிலாப்பூர், சாந்தோம் பகுதி அருணாச்சலம் தெருவில் உள்ள ஜாபர் சாதிக் வீட்டில் சம்மன் ஒன்றை ஒட்டினார்கள். இதேபோல் புரசைவாக்கம் டவுட்டன் பகுதியில் உள்ள ஜாபர் சாதிக்கின் தயாரிப்பு நிறுவன அலுவலகத்திலும் சம்மன் ஒட்டினார்கள். அந்த சம்மனில் டெல்லி போதைப்பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

இந்த சம்மன் பிப்ரவரி 23ம் தேதி ஒட்டப்பட்ட பின்னரே விவகாரம் வெளியே தெரிந்திருக்கிறது. அதன்பிறகே தமிழக அரசியல் கட்சிகள், ஊடகங்களுக்கு தெரியவந்திருக்கிறது.. திரைப்பட தயாரிப்பாளர் ஜாபர் சாதிக் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் அறிக்கை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே டெல்லி அலுவலகத்தில் 26-ம் தேதியான நேற்று ஜாபர் சாதிக் ஆஜராகாமல் தலைமறைவாக உள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து அடுத்தகட்டமாக டெல்லி போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீஸார் அவருக்கு லுக்அவுட் நோட்டீஸ் பிறப்பிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+