பெட்ரூமில் "துணியில் சுற்றி" வைத்து.. எக்குத்தப்பா சிக்கிய 68 வயசு அப்பா.. குறுக்கே வந்த மகன்: கொடுமை
டெல்லி: பெட்ரூமில் கேமராவை ஒளித்து வைத்துவிடவும், வசமாக சிக்கிவிட்டார் 68 வயது நபர்.. அவரை சிக்க வைத்தது யார் தெரியுமா?
சமீபத்தில் கர்நாடகாவில் ஒரு சம்பவம் நடந்தது.. தாவணகெரேவை சேர்ந்த சிவசங்கர்.. 58 வயதாகிறது.. இவரது மகன் சச்சின் 28 வயதாகிறது.. இவர்கள் 2 பேரும் சேர்ந்து, 14 வயது சிறுமியை பலாத்காரம் செய்துள்ளனர்..
14 வயது சிறுமி தன்னுடைய அம்மாவுடன் வசித்து வந்திருக்கிறார்.. அதே வீட்டில், இன்னொரு போர்ஷனில், அவரது அம்மாவின் நண்பரான சிவசங்கரும் வசித்து வந்திருக்கிறார்.. அந்தம்மா காலை 5 மணிக்கெல்லாம் வேலைக்கு கிளம்பி சென்றுவிடுவாராம்.. இந்த நேரத்தில், சிறுமியை சீரழித்திருக்கிறார் சிவசங்கர்..

16 வயது: கடந்த 2020 முதல் தொடர்ந்து சிறுமியை பலாத்காரம் செய்துள்ளார்.. சிவசங்கரின் மகன் சச்சினும், சிறுமி வீட்டில் தனியாக இருந்தபோதெல்லாம் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.. ஒருகட்டத்தில் இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுமி, தன்னுடைய அம்மாவிடம் இதை பற்றி சொல்ல பயந்துகொண்டு, பக்கத்து வீட்டுப்பெண்ணிடம் சொல்லி உள்ளார். அவர் உடனே குழந்தை உதவி மையத்திற்கு தகவல் கொடுக்கவும்தான், விஷயம் வெளியே தெரிந்தது.
போலீசார் வழக்கு பதிவு விசாரணை நடத்தி கோர்ட் வரை விஷயத்தை கொண்டுபோனார்கள்.. 10 நாட்களுக்கு முன்புதான், இதில் தீர்ப்பு தரப்பட்டது. அப்பா - மகன் இருவருக்கும் 10 வருட ஜெயில் தண்டனையும், போக்சோ சட்டத்தின் கீழ் தலா 20 வருடங்கள் ஜெயில் தண்டனையும் விதிக்கப்பட்டது.. இதைத்தவிர 10000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.
நாகர்கோவில் காசி: பெண் குழந்தைகளின் மீது கையை வைத்தால் என்ன நிலைமை ஏற்படும் என்பதற்கு உதாரணமாகத்தான் இத்தகையை தண்டனைகள் தரப்படுகின்றன.. அதன்அடிப்படையில்தான், நாகர்கோவில் காசிக்கும் சாகும்வரை ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது. ஆனாலும், சில காமவெறிப்பிடித்த மிருகங்கள் அடங்குவதில்லை.. இதோ டெல்லியில் நேற்று ஒரு சம்பவம் நடந்துள்ளது.
அந்த நபருக்கு 68 வயதாகிறது.. இவரது பக்கத்து வீட்டில் வசித்து வரும் 16 வயது சிறுமியை மிரட்டி மிரட்டியே பலாத்காரம் செய்துள்ளார்.. இந்த விஷயத்தை வெட்டவெளிச்சமாக்கியது அவரது 40 வயது மகன்தான்...!
சமீபகாலமாகவே, தன்னுடைய தந்தையின் நடவடிக்கைகளில் இவருக்கு சந்தேகம் எழுந்துள்ளது.. அடிக்கடி பெட்ரூமுக்குள் அப்பா சென்றுவிடவும், அவரை கண்காணித்துள்ளார்.. அப்போதுதான், 16 வயது சிறுமியை, அப்பா பலாத்காரம் செய்த விவகாரம் தெரியவந்துள்ளது.. இதை வீடியோவாக எடுத்து வைத்து கொண்டார்..
வீடியோ: அந்த வீடியோவை, பாதிக்கப்பட்ட சிறுமியின் அப்பாவுக்கு அனுப்பி வைத்துள்ளார்.. இதனால் ஆத்திரமடைந்த பெண்ணின் தந்தை, போலீசாரிடம் புகார் தரப்போக போவதாக சொல்லவும், போலீசுக்கு போகக்கூடாது என்றும் மீறினால், இந்த வீடியோவை சோஷியல் மீடியாவில் வெளியிட்டுவிடுவேன் என்றும் மகன் மிரட்டி உள்ளார்.. இதுகுறித்து போலீஸ் தரப்பில் சொல்லப்படுவதாவது:
இந்த பாலியல் சம்பவம் ஏப்ரல் 20 முதல் 30 வரை நடந்துள்ளது.. 68 வயது நபரும், பக்கத்து வீட்டு குடும்பத்தினரும் நெருக்கமாக பழகி வந்திருக்கறார்கள்.. இதுதான் அந்த நபருக்கு வசதியாக போய்விட்டது.. அடிக்கடி 16 வயது சிறுமியை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கி உள்ளார்.. சூனியம் வைத்துவிடுவதாக சொல்லி சிறுமியை, பயமுறுத்தியே பணிய வைத்துள்ளார். மிரட்டலுக்கு பயந்து சிறுமியும், தன்னுடைய வீட்டில் இதை பற்றி சொல்லாமல் இருந்துள்ளார்..
சிறுமிக்கு மிரட்டல்: சம்பவத்தன்றும், சிறுமியை தன்னுடைய வீட்டிற்கு வரவழைத்து, பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார். இந்த விஷயம், பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினருக்கு முதலில் தெரியவில்லை... திடீரென பெண்ணின் அப்பாவுக்கு செல்போனில் ஆபாச வீடியோ வந்துவிழுந்துள்ளது.. அதைப்பார்த்துதான் பதறிப்போயுள்ளார்.. வீடியோவை அனுப்பி வைத்தது, குற்றவாளியின் 40 வயது மகன்.
தன் அப்பாவின் நடவடிக்கையில் சந்தேகம் இருநததால், வீட்டின் பெட்ரூமுக்குள்ளேயே ஒரு மூலையில் செல்போனை மறைத்து வைத்து, தந்தையின் பலாத்காரத்தை ரகசியமாக வீடியோ எடுத்திருக்கிறார்.. அந்த செல்போனை, அப்பா கண்டுபிடிக்க முடியாதபடி, ஒரு துணியால் கவனமாக மறைத்தும் வைத்திருக்கிறார்.. அதன்பிறகு செல்போனை எடுத்து பார்க்கும்போதுதான், பக்கத்து வீட்டு சிறுமியை சீரழித்தது தெரியவந்துள்ளது.
வீடியோ: உடனே இந்த வீடியோவை வைத்து, சிறுமியின் தந்தையை, மகன் மிரட்டியிருக்கிறார்.. 68 வயது நபர் கைதாகி உள்ளார்.. இவரது மனைவி பல வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார்.. 40 வயதான மகனுக்கும் திருமணம் செய்யவில்லை.. இப்போது தந்தை - மகன் 2 பேரையுமே விசாரித்து வருகிறோம்" என்றனர்.












Click it and Unblock the Notifications