பிரபல ஆபாச பட நடிகை.. "அதே மாதிரி டிரஸ்".. காம நெடியால் கிறுகிறுத்த கணவன்.. விழுந்தடித்து ஓடிய மனைவி
டெல்லி: ஒரு சம்பவம் டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இது தொடர்பான புகாரை போலீசார் துரிதமாக விசாரித்து வருகிறார்கள்.. அத்துடன், சம்பந்தப்பட்ட பெண்ணின் வாக்குமூலம் வெளியாகி பெரும் அதிர்ச்சியை தந்து வருகிறது.
டெல்லி மாநிலம் கிழக்கு ரோதாஷ் நகரை சேர்ந்தவர் அந்த இளம்பெண்.. கடந்த 2020ல்தான் கல்யாணம் நடந்துள்ளது.. தன் கணவர் மீதுதான் இவர் தந்துள்ள புகார் மிகுந்த பரபரப்பை தந்து வருகிறது.
நடிகைகள்: இந்த பெண்ணை ஆபாச படம் பார்க்கும்படி தொடர்ந்து அவரது கணவர் வலியுறுத்துகிறாராம்.. அதுவும் இல்லாமல், அந்த ஆபாச பட நடிகைகள் அணியும், டிரஸ்களை போலவே, மனைவியையும் அணிய சொல்லி தொந்தரவு செய்துள்ளார்.
அந்த படத்தில் உள்ளதைபோலவே, டிரஸ் செய்துகொண்டு, கணவர் முன்னாடி போய் நிற்க வேண்டுமாம்.. இப்படி ஒரு ஆசையை, நீண்ட நாட்களாகவே அந்த கணவர் மனைவி மீது திணித்து வந்துள்ளார்.. இதற்கு மனைவி மறுத்துள்ளார்.. பலமுறை இதற்கு உடன்படாமல் இருந்துள்ளார்.. ஆனால் நாளுக்கு நாள் தொல்லை அதிகமாகிவிட்டதாம்.. அதனால், ஒரு கட்டத்தில் பொறுத்துக் கொள்ள முடியாமல் மனைவி போலீஸுக்கே போய்விட்டார்.. கணவர் மீது புகாரையும் தந்திருரக்கிறார்.

ஆபாச படங்கள்: அந்த புகாரில், "ஆபாசப் படங்களைப் பார்க்கவும், ஆபாச நடிகைகளைப் போல உடை அணியுமாறு துன்புறுத்துகிறார். அத்துடன் எனது கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் வரதட்சணை கேட்டு மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் தொடர்ந்து துன்புறுத்துகின்றனர். அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகாரில் கூறியிருந்தார்.
இதையடுத்து அந்த பெண்ணின் கணவன் மீது போலீசார் 4 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இன்னும் விசாரணை முடியவில்லை.. இப்போதுதான் முதல் கட்ட விசாரணையே நடந்து வருகிறது.. இதை பற்றி துணை கமிஷனர் ரோகித் மீனா சொல்லும்போது, "வழக்கு நடந்து வருகிறது. வழக்கின் அடுத்தகட்ட நடவடிக்கைக்காக சாட்சிகளின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.. அந்த வாக்குமூலங்கள் டிஜிட்டல் மற்றும் பிற ஆதாரங்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன" என்றார்.
பறிமுதல்: அந்த பெண்ணின் கணவரை போலீஸார் தற்போது கைது செய்திருக்கிறார்கள்.. அவரது செல்போன், மற்றும் கம்ப்யூட்டர்களையும் பறிமுதல் செய்து, அதில் உள்ள விவரங்களையும் சேகரித்து வருகிறார்கள். இந்த தந்த புகார்கள் குறித்து போலீசார் சொல்லும்போது, "பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 30 வயதாகிறது.. கல்யாணம் ஆனதில் இருந்தே இப்படித்தான் தொல்லை இருந்து வந்துள்ளது.. தொடர்ந்து கணவர் திருந்தாத நிலையில், போலீஸ் ஸ்டேஷன் வரை விவகாரம் வந்து நின்றுள்ளது.
நொய்டாவில் உள்ள ஒரு கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார் அந்த பெண்ணின் கணவர்.. திருமணமான புதிதில் கணவனின் நடவடிக்கைகள் வித்தியாசமாக இந்த பெண்ணுக்கு தெரியவில்லை. அதற்கு பிறகுதான், தன்னுடைய ஆபாச வீடியோவுக்கு அடிமையாகியிருப்பதை பார்த்து அதிர்ந்து போயிருக்கிறார்.

வரதட்சணை: பெண்ணின் திருமணத்துக்கு, அவருடைய அப்பா ரூ.3 லட்சத்தை வரதட்சணையாக தந்திருக்கிறார்.. மீதித்தொகையை தவணை முறையில் தருவதாக உறுதியளிக்கவும், அவரது மாமியார் சம்மதமும் தந்திருக்கிறார். ஆனாலும், செக்ஸ் டார்ச்சர் விஷயத்தை திசைதிருப்பவே, வரதட்சணை மேட்டரை கையில் எடுத்து, அதன்மூலம் டார்ச்சரை அதிகப்படுத்தி வந்திருக்கிறார் கணவர்..
இந்த ஆபாச பட நடிகைகளை போலவே டிரஸ் அணிய சொல்லி கட்டாயப்படுத்தியதால் பலமுறை தம்பதிக்குள் தகராறு நடந்தள்ளது.. திருமணமாகி மூன்று நாட்களில், மாதவிடாய் ஏற்பட்டுள்ளது.. அந்த நேரத்திலும், உடலுறவு கொள்ளுமாறு மனைவியை கட்டாயப்படுத்தியிருக்கிறார்.. ஆபாச படம் பார்ப்பதில் அடிமையாக இருப்பதை போலவே, மதுபோதைக்கும் அடிமையானவர்.. செயின் ஸ்மோக்கரும்கூட.. பலமுறை உடல்ரீதியாக அடித்து உதைத்து மனைவியை காயப்படுத்தியும் வந்துள்ளார்..
அசைவ சமையல்: மனைவி என்ற முறையில், துளிகூட மரியாதை தராமல், மிக மிக கேவலமாக நடத்தியிருக்கிறார்.. அதிலும், ஆபாச பட நடிகைகள், நடிகர்களை பற்றி ஸ்பெஷலான தகவல்களை திரட்டி வைத்திருப்பாராம்.. அந்த வகையில், தனக்கு மிகவும் பிடித்த ஆபாச நட்சத்திரங்களைப்போலவே, தனக்கும் அசைவம் சமைத்து தரும்படி மனைவியை கட்டாயப்படுத்தியிருக்கிறார்.. இப்போதைக்கு விசாரணை நடக்கிறது. அந்த நபரின் உறவினர்களிடமும் விசாரணையை நடத்த உள்ளோம்" என்றனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications