ஆன்லைனில் வந்த பார்சல்.. ஆசை ஆசையாக பொட்டலத்தை பிரித்தால்.. ஹய்யயோ வித்தியாசமா இருக்கே? ஓ மை காட்
டெல்லி: ஆன்லைனில் ஐஸ்கிரீம் ஆர்டர் செய்திருக்கிறார் ஒரு டாக்டர்.. பார்சலை திறந்து பார்த்துமே அதிர்ச்சியாகிவிட்டார்.. அதேபோல, ஆன்லைனில் ஃபேமிலி ஐஸ்கிரீம் ஆர்டர் செய்த பெண்ணும், பார்சலை திறந்ததுமே அதிர்ச்சியாகிவிட்டார்.. என்ன நடந்தது?
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் 2 நாட்களுக்கு முன்பு ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்தது.. பிரெண்டன் ஃபெராவ் (Dr. Brendan Ferrao- 27) என்ற டாக்டர், ஆன்லைனில் கோன் ஐஸ்கிரீம் ஆர்டர் செய்திருக்கிறார்.
ஐஸ்கிரீம்: கொஞ்ச நேரத்தில் அவர் கேட்ட ஐஸ்கிரீம் டெலிவரி செய்யப்பட்டது.. உடனே அதீத ஆர்வத்துடன் அந்த ஐஸ்கிரீமை எடுத்துவாயில் வைத்தார். அப்போது ஏதோ ஒன்று பெரிதாக வாயில் தென்படுவதாக உணர்ந்துள்ளார்..

ஒருவேளை, ஐஸ்கிரீமில் பெரிய கொட்டை இருக்கலாம் என்று நினைத்துள்ளார்.. அதற்காக இவ்வளவு பெரிய கொட்டைகளை ஐஸ்கிரீமில் சேர்க்க மாட்டார்களே என்று நினைத்து, அதை விழுங்காமல், வாயிலிருந்து எடுத்து பார்த்துள்ளார்.
பரிசோதனை: அப்போதுதான், அது "மனித விரல்" என்று தெரியவந்துள்ளது.. இதைப்பார்த்து அலறியடித்துக்கொண்டு புகார் கொடுக்க சென்றார்.. அந்த புகாரின்பேரில் சம்பந்தப்பட்ட ஐஸ்கிரீம் நிறுவனத்தினரிடம் விசாரணை நடக்கிறது.. ஐஸ்கிரீமில் கண்டெடுக்கப்பட்ட மனித உறுப்பை, டெஸ்ட்டுக்காக தடய அறிவியல் ஆய்வகத்திற்கு போலீஸார் அனுப்பி வைத்திருக்கிறார்கள்.. அந்த விரல், சுமார் 2 செமீ நீளத்துக்கு இருந்ததாம்.
இந்த அதிர்ச்சியே இன்னும் அடங்காத நிலையில், டெல்லியில் ஒரு கொடுமை நடந்துள்ளது.. உத்தரபிரதேசத்தின் நொய்டாவில், செக்டர் - 12 -ல் தீபா என்ற பெண் வசித்து வருகிறார்.. இவர் "பிளிங்கிட்" என்ற ஆன்லைன் ஆப் மூலம் ஐஸ்கிரீம் ஆர்டர் செய்திருக்கிறார். தன்னுடைய குடும்பத்தினர் எல்லாருமே சாப்பிடும்வகையிலான "பேமிலி பேக்" என்ற ஐஸ்கிரீமை நேற்று ஆர்டர் செய்திருக்கிறார்.
பார்சல்கள்: இந்த ஐஸ்கிரீம் அமுல் நிறுவனத்தின் தயாரிப்பாகும்.. சிறிது நேரத்தில், ஐஸ்கிரீம் டெலிவரி செய்யப்பட்டது.. அந்த ஐஸ்கிரீமை பிரித்து பார்த்தால், பூரான் கிடந்திருக்கிறது.. இறந்த நிலையில் ஐஸ்கிரீமின் மேலேயே கிரீமுக்கு பதில் பூரான் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்... உடனே இதனை வீடியோவாக எடுத்து சோஷியல் மீடியாவில் பதிவிட்டார் தீபா.
அடுத்த நிமிடமே, சம்பந்தப்பட்ட பிளிங்கிட் நிறுவனம், தீபா வாங்கிய ஐஸ்கிரீமிற்கான பணத்தை திருப்பித் தந்தது.. ஆனால், பூரான் வீடியோ வைரலாகிவிட்டதால், அதைப்பார்த்த உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள், தீபாவிடம் விசாரணை நடத்தியதுடன், ஐஸ்கிரீம் அனுப்பப்பட்ட நிறுவனத்திற்குள்ளேயே அதிரடியாக நுழைந்தார்கள்..
விசாரணை: அங்கு, விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த ஐஸ்கிரீம்களின் மாதிரிகளை எடுத்து டெஸ்ட்டுக்கு அனுப்பினார்கள்.. ஆனால், ஐஸ்கிரீம் தயாரிக்குமிடத்தை பார்த்து அதிகாரிகள் முகம் சுழித்தனர்.. ஐஸ்கிரீம் வைக்கப்பட்டிருந்த இடம் சுகாதாரமாக இல்லை என தெரிகிறது.. எனவே அதிகாரிகளிடம் விசாரணை நடந்து வருகிறது. சம்பந்தப்பட்ட அமுல் ஐஸ்கிரீம் நிறுவனமும், பிளிங்கிட் நிறுவன நிர்வாகிகளிடம் விசாரணை நடத்தி வருகிறதாம்.
-
Sonia Gandhi: சோனியா காந்தி மருத்துவமனையில் திடீர் அனுமதி.. ஹாஸ்பிடலுக்கு விரைந்த ராகுல், பிரியங்கா! -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்!












Click it and Unblock the Notifications