உலக நாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு நீடிக்கிறது.. குறையவில்லை.. உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை
டெல்லி: உலகின் பல நாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்ந்து நீடிக்கிறது; கொரோனா வைரஸ் பாதிப்பு குறையவில்லை என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.
இது குறித்து உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி செளமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளதாவது

உலக சுகாதார அமைப்பின் 6 பிராந்தியங்களில் 5-ல் கொரோனா தொற்று அதிகமாக உள்ளது. ஆப்பிரிக்காவில் கொரோனா மரணங்கள் 30% முதல் 40% வரை அதிகரித்துள்ளன.
கடந்த 24 மணிநேரத்தில் 5,00,000 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவால் கடந்த 24 மணிநேரத்தில் 9,300 பேர் மரணம் அடைந்துள்ளனர். டெல்டா வகை கொரோனா வைரஸ், லாக்டவுன் தளர்வுகள், கொரோனா தடுப்பூசி போடுவதில் சுணக்கம் உள்ளிட்டவைதான் கொரோனா பரவலுக்கு காரணமாக இருக்கின்றன.
டெல்டா வகை கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவுகிறது. மிகவும் ஆபத்தான இந்த வைரஸால்தான் கொரோனா பாதிப்பு தொடர்ந்து கொண்டே இருக்கிறது. ஒருவருக்கு டெல்டா வகை கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்தால் அந்த நபருக்கு நெருக்கமான 3 முதல் 8 பேருக்காவது தொற்றும்.
கொரோனா தடுப்பூசி போடுவதால் சில நாடுகளில் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது. இன்னமும் உலக நாடுகளில் ஆக்சிஜன் பற்றாக்குறை, மருத்துவமனைகளில் படுக்கைகள் கிடைக்காத நிலைமை இருந்து வருகிறது.
லாக்டவுன்களில் தளர்வுகளை செயல்படுத்தும் போது நாடுகள் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும். பொதுமக்கள் முக கவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது மிக முக்கியமானது. இவ்வாறு செளமியா சுவாமிநாதன் கூறியுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications