குழந்தைகள் பாலியல் வன்கொடுமை காணொளிகளை பார்த்து, பரப்பிய நபர்கள்...பாய்ந்தது சிபிஐ ரெய்டு
குழந்தைகள் பாலியல் துன்புறுத்தல் காணொளிகளை எடுப்பது, பார்ப்பது, பகிர்வது என்கிற செயலில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரவுகளை சேகரித்துள்ள சிபிஐ அதிகாரிகள் முதற்கட்டமாக இந்தியா முழுவதும் 76 இடங்களில் அதிரடி ரெய்டு நடத்தினர். இதில் தமிழகத்திலும் 6 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.
பாலியல் காணொளிகளை காணுவது சமூகத்தில் பெரும்பாலானோர் விருப்பமாக உள்ளது. இதில் வக்கிர எண்ணம் கொண்டோர், மனப்பிறழ்வு காரணமாக குழந்தைகளின் பாலியல் காணொளிகளை காண விரும்புகின்றனர். குழந்தைகளை துன்புறுத்தி எடுக்கப்படும் பாலியல் காணொளிகள் உலகம் முழுவதும் பெரிய அளவிலான ஆன்லைன் பொருளீட்டும் வியாபார சந்தையாக உள்ளது.

குழந்தைகள் பாலியல் ஆபாசக் காணொளிகளை பார்ப்பது, தன்னுடைய செல்போனில், லேப்டாப்பில் சேமித்து வைப்பது, அதை ஷேர் செய்வது சட்டப்படி குற்றம். இந்தியாவிலும் இது தடை செய்யப்பட்டுள்ளது. நாம் ரகசியமாகத்தானே செய்கிறோம் யார் பார்க்கப்போகிறார்கள் என்று பார்ப்பதோ, பரப்புவதோ, சேமிப்பது போன்ற காரியங்களில் ஈடுபடுபவர்களை கண்காணிப்பதற்கு என்றே பிரத்யேக டூல்களை பல நாடுகள் உருவாக்கிவிட்டன. இந்தியாவிலும் அப்படிப்பட்ட பிரத்யேக டூல்கள் மூலம் சம்பந்தப்பட்டவர் ஐபி அட்ரஸை சேகரித்து எளிதாக பிடிக்க முடியும்.
இவ்வாறு குழந்தைகளை பாலியல் குற்றங்களில் ஈடுபடுத்துவதை படமெடுத்து இணையதளத்தில் விற்று காசு பார்ப்பவர்கள் உள்ளனர். குழந்தைகள் பாலியல் துன்புறுத்தல் பதிவுகள் (CSAM) என இதை அழைப்பார்கள், இதற்காக குழந்தைகள் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுவதும் நடக்கிறது. இது தவிர கொரோனா காலக்கட்டத்தில் வீட்டில் முடங்கிக்கிடந்த ஆண்களால் இதுபோன்ற தேடல்கள் அதிகரித்து அதுவே வக்கிர எண்ணமாக மாறி அதிக அளவில் குழந்தைகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட நிகழ்வுகள் நடந்துள்ளது. இது 200% வரை அதிகரித்துள்ளதாக ஆய்வு கூறுகிறது. இவ்வாறு செய்பவர்கள் அதை காணொளியாக ஆன்லைனில் பரப்புவதும் நடந்துள்ளது.
இதுபோன்ற குற்றச் செயல்களைத்தடுக்க 2019 ஆம் ஆண்டில், சிபிஐ அதன் சிறப்புக் குற்றப் பகுதியின் ஒரு பகுதியாக OCSAE எனும் ஆன்லைன் குழந்தை பாலியல் வன்கொடுமை மற்றும் தவறான நோக்கோடு பயன்படுத்துதல் தடுப்பு/விசாரணைப் பிரிவை அமைத்தது. அதன் முக்கியப்பணி குழந்தைகள் பாலியல் வன்கொடுமையை தடுத்தல் மற்றும் அதை காணொளியாக எடுத்து பரப்புவதை தடுத்தல் மேற்கண்ட காரணத்துக்காக குழந்தைகளை கட்டாயப்படுத்தி பயன்படுத்துவதை தடுப்பது ஆகும்.
அவ்வாறு சேகரித்த தரவுகள் அடிப்படையில் ஆன்லைன் குழந்தை பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் தவறான செயலுக்காக பயன்படுத்துதல் தொடர்பான குற்றச்சாட்டுகளில் மொத்தம் 83 குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது சிபிஐ நவம்பர் 14 அன்று 23 தனித்தனி வழக்குகளை பதிவு செய்துள்ளது.
இந்நிலையில் இத்தகைய குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் குறித்த தரவுகளை நாடெங்கும் சேகரித்து வரும் சிபிஐ அதிகாரிகள் முதற்கட்டமாக நாடுமுழுவதும் நேற்று 76 இடங்களில் அதிரடி ரெய்டு நடத்தினர். இதில் தமிழகத்திலும் திருவள்ளூர், சேலம், திருப்பூர், நாமக்கல், திண்டுக்கல், திருவண்ணாமலை உள்ளிட்ட 6 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. சோதனையின் விவரங்கள், கைது உள்ளிட்டவை இனிதான் தெரியவரும்.
-
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
Velmurugan: அதிமுகவின் "3+10" மெகா ஆஃபரால் திக்குமுக்காடிய வேல்முருகன்? திமுகவுக்கு தவாக கெடு! -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
அதிமுகவை அசிங்கப்படுத்திய பாஜக.. ஆண்ட கட்சிக்கு இவ்வளவு தான் சீட்டா? வயிற்றெரிச்சலில் ர.ரத்தங்கள்! -
என்ன விஜய் இதெல்லாம்? சேலத்தில் மானத்தை வாங்கிய தவெகவினர்.. அப்பட்டமான விதிமீறல்! -
விஜய்க்கு அமித்ஷா மகன் அனுப்பிய மெசேஜ்.. கமலாலயத்துக்கு பனையூர் க்ரீன் சிக்னல்.. தவெக பாஜக அஜென்டா -
சனிக்கிழமை காலையில் இடியை இறக்கிய மத்திய அரசு.. அதிரடியாக உயர்ந்த பெட்ரோல் விலை! ஒரே ஒரு ஆறுதல்! -
திமுகவிடம் பணியக்கூடாது.. உதயசூரியன் வேண்டாம்.. கமலிடம் சொன்ன நிர்வாகிகள்!












Click it and Unblock the Notifications