Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

விஐபி வேட்பாளர்கள் காலி.. கங்கனா, அகிலேஷ் என பல ஸ்டார் தொகுதிகளில் ஷாக் ரிசல்ட்! டைம்ஸ் நவ் கணிப்பு!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: லோக்சபா தேர்தலில் போட்டியிடும் “விஐபி” வேட்பாளர்கள் பலர் தோல்வியை சந்திப்பார்கள் என எக்ஸிட் போல் கணிப்பில் தெரிவித்துள்ளது டைம்ஸ் நவ். அதிர்ச்சி தோல்வி காணப்போவதாக டைம்ஸ் நவ் குறிப்பிடும் ஸ்டார் வேட்பாளர்கள் யார் என பார்க்கலாம்.

நாட்டின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான 2024 மக்களவைத் தேர்தல் நடைபெற்று முடிந்துள்ள நிலையில், ஜூன் 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற இருக்கிறது. இந்தியாவை ஆளப் போவது யார் என்பது ஜூன் 4 ஆம் தேதி இந்த நேரத்தில் தெரிந்து விடும். நேற்று இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்ததுமே, தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகளை ஊடகங்கள் வெளியிடத் தொடங்கின.

Lok Sabha Election 2024 Lok Sabha Election Exit Poll BJP Congress 2024


எக்ஸிட் போல் முடிவுகள்: பாஜக கூட்டணி 350+ இடங்களிலும், இந்தியா கூட்டணி 130+ இடங்களிலும், மற்ற கட்சிகள் 40+ இடங்களிலும் வெற்றி பெற சாத்தியக் கூறுகள் இருப்பதாக தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. பெரும்பான்மைக்கு 272 தொகுதிகள் தேவை என்பது குறிப்பிடத்தக்கது. பாஜக தனிப் பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் தெரிவித்துள்ளன.

அதேசமயம், வெகுசில எக்ஸிட் போல் கணிப்புகள், பாஜக பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களை பெறத் தவறலாம் என்றும், இந்தியா கூட்டணி 280க்கும் அதிகமான இடங்களைப் பெறக்கூடும் என்றும் கணிப்புகளை வெளியிட்டுள்ளன. போல் டிராக்கர் அமைப்பு இந்தியா கூட்டணி 237 முதல் 273 தொகுதிகள் வரை வெல்ல வாய்ப்புள்ளதாக கணித்துள்ளது.

ட்விஸ்ட் கொடுத்த கணிப்புகள்: அதேபோல, தேசபந்து நாளேட்டின் டிஜிட்டல் பிரிவு வெளியிட்டுள்ள எக்ஸிட் போல் கருத்துக்கணிப்பின்படி, இந்தியா கூட்டணிக்கு 255 முதல் 290 தொகுதிகள் வரை கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாஜகவின் என்டிஏ கூட்டணி 207 முதல் 241 தொகுதிகளை மட்டுமே பெறும் என கூறப்பட்டுள்ளது. இந்தக் கணிப்பு அப்படியே உண்மையானால் பாஜக ஆட்சியை இழக்கும்.

முன்னணி ஊடகமான டைம்ஸ் நவ், நேற்று மாலை முதல் மாநில வாரியாக எக்ஸிட் போல் கணிப்புகளை வெளியிட்டு வருகிறது. டைம்ஸ் நவ் - ETG நடத்திய தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளும் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, தமிழ்நாட்டில் திமுக கூட்டணி 34 இடங்களிலும், பாஜக கூட்டணி 3 இடங்களிலும் வெல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக கூட்டணி 2 இடங்களில் வெல்லக்கூடும் என அந்த எக்ஸிட் போல் முடிவு தெரிவிக்கிறது.

விஐபி வேட்பாளர்களின் வெற்றி வாய்ப்பு: ஆனால், பாஜகவே மத்தியில் மீண்டும் ஆட்சி அமைக்கும் எனக் கணித்துள்ளது டைம்ஸ் நவ். ஒட்டுமொத்தமாக, பாஜகவின் என்.டி.ஏ கூட்டணி 358 இடங்களையும், இந்தியா கூட்டணி 152 இடங்களையும், மற்ற கட்சிகள் 33 இடங்களையும் பிடிக்கக்கூடும் எனக் கணித்துள்ளது டைம்ஸ் நவ் - ETG எக்ஸிட் போல்.

மேலும், நாடு முழுவதும் ஸ்டார் வேட்பாளர்களின் தொகுதிகளின் எக்ஸிட் போல் கணிப்புகளையும் வெளியிட்டுள்ளது டைம்ஸ் நவ். அதில் பல்வேறு அதிர்ச்சி தரத்தக்க விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, பல ஸ்டார் வேட்பாளர்கள் அதிர்ச்சி தோல்வியை சந்திக்க உள்ளதாக தெரிவிக்கிறது டைம்ஸ் நவ்.

அகிலேஷ் தோல்வியடைய வாய்ப்பு: உத்தர பிரதேச மாநிலத்தின் கன்னூஜ் தொகுதியில் போட்டியிடும் சமாஜ்வாதி கட்சி தலைவரும், உ.பி முன்னாள் முதலமைச்சருமான அகிலேஷ் யாதவ் தோல்வியைச் சந்திப்பார் என்கிறது டைம்ஸ் நவ் எக்ஸிட் போல். பாஜகவின் சுப்ரத் பதக்கிடம் அகிலேஷ் தோல்வி அடைவார் என இந்தக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கங்கனா ரணாவத்: இமாச்சல பிரதேச மாநிலத்தின் மண்டி தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் நடிகை கங்கனா ரணாவத் தோல்வி அடைவார் என்றும், அவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் விக்ரமாதித்ய சிங் வெல்வார் என்றும் டைம்ஸ் நவ் கருத்துக்கணிப்பை வெளியிட்டுள்ளது.

ராஜீவ் சந்திரசேகர் நிலை: கேரள மாநிலம் திருவனந்தபுரம் தொகுதியில் பாஜக சார்பில் அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், காங்கிரஸ் சார்பில் சசி தரூர் போட்டியிடும் நிலையில், ராஜீவ் சந்திரசேகர் தோல்வி அடைவார் என்றும், 3 - 6 சதவீத வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸின் சசி தரூர் வெல்வார் என்றும் டைம்ஸ் நவ் கணிப்பை வெளியிட்டுள்ளது.

கன்னையா குமார் தோல்விக்கு வாய்ப்பு: டெல்லி வடகிழக்கு தொகுதியில் பாஜக சார்பில் மனோஜ் திவாரி காங்கிரஸ் சார்பில் கன்னையா குமார் போட்டியிடும் நிலையில், கன்னையா குமார் தோல்வியைச் சந்திப்பார் என்கிறது டைம்ஸ் நவ் சர்வே. ஆம் ஆத்மி - காங்கிரஸ் கூட்டணி அமைத்துள்ள நிலையிலும் கன்னையா குமார் தோல்வி அடைவார் என்கிறது இந்தக் கணிப்பு.

கமல் நாத் மகன் நிலை: மத்திய பிரதேச மாநிலம் சிந்த்வாரா மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் நகுல் கமல்நாத், பாஜகவின் பண்டி விவேக் சாஹுவிடம் தோல்வியைத் தழுவுவார் என்கிறது டைம்ஸ் நவ். காங்கிரஸ் மூத்த தலைவர் கமல்நாத்தின் மகன் நகுல் நாத். கடந்த 2019ல் மத்திய பிரதேச மாநிலத்தில் மொத்தமுள்ள 29 மக்களவைத் தொகுதிகளில் பாஜக 28 சீட்களிலும், சிந்த்வாரா தொகுதியில் மட்டும் காங்கிரஸ் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

திக்விஜய் சிங் அதிர்ச்சி: ராஜ்கார் தொகுதியில் காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங், பாஜகவின் ரோட்மால் நகரிடம் தோல்வியைத் தழுவுவார் என டைம்ஸ் நவ் எக்ஸிட் போல் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மஹுவா மொய்த்ரா: மேற்கு வங்கத்தின் கிருஷ்ணாநகர் மக்களவைத் தொகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் மஹுவா மொய்த்ரா தோல்வியைச் சந்திப்பார் என்றும், அவரை எதிர்த்து போட்டியிடும் பாஜகவின் அம்ரிதா ராய் வெல்வார் என்றும் டைம்ஸ் நவ் தெரிவித்துள்ளது.

இதுவரை நடந்ததே இல்ல. பிரதமர் மோடி மிகப்பெரிய சாதனையை படைக்கப் போகிறார்.. சொல்வது அல் ஜசீரா!


அண்ணாமலை: தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் மக்களவை தொகுதியில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் ஆகியோர் தோல்வி அடைவார்கள் என்றும், அதிமுகவின் சிங்கை ராமச்சந்திரன் வெல்வார் என்றும் கணித்துள்ளது டைம்ஸ் நவ் எக்ஸிட் போல்.

ராகுல் காந்தி: அதேசமயம், ரேபரேலி தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வெற்றி பெறுவார், ரேபரேலி பாஜக வேட்பாளர் தினேஷ் பிரதாப் சிங் தோல்வி அடைவார் என டைம்ஸ் நவ் கணித்துள்ளது. கடந்த முறை உ.பியின் அமேதியில் ராகுல் காந்தி, ஸ்மிருதி இரானியிடம் தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.

காங்கிரஸ் ஆட்சிக்கு வருவது எளிதல்ல.. ரிசல்ட்டுக்கு பின் இதுவே நடக்கும்! திமுக நிர்வாகி பரபர கணிப்பு!


ஸ்டார் வேட்பாளர்கள் வெற்றி வாய்ப்பு: விஐபி வேட்பாளர்களான ஏ.ஐ.எம்.ஐ.எம் தலைவர் அசாதுதீன் ஓவைசி ஹைதராபாத் தொகுதியிலும், மும்பை வடக்கு தொகுதியில் பாஜக அமைச்சர் பியூஷ் கோயல், ஹர்மிர்பூர் தொகுதியில் அமைச்சர் அனுராக் தாக்கூர், பெங்களூர் ரூரல் தொகுதியில் டிகே சுரேஷ், அமேதி தொகுதியில் ஸ்மிருதி இரானி, ஆகியோர் அவரவர் தொகுதியில் வெற்றி பெறுவார்கள் என டைம்ஸ் நவ் கணிப்பு வெளியிட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+