Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இதுவரை நடந்ததே இல்ல. பிரதமர் மோடி மிகப்பெரிய சாதனையை படைக்கப் போகிறார்.. சொல்வது அல் ஜசீரா!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: லோக்சபா தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில் எக்ஸிட் போல் கணிப்புகள், பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரும் எனத் தெரிவிக்கின்றன. எக்ஸிட் போல் கணிப்புகள் குறித்து அல்ஜசீரா செய்தி தளம் கட்டுரை வெளியிட்டுள்ளது. அதோடு, இந்த எக்ஸிட் போல் கணிப்புகள் உண்மையானால் பிரதமர் மோடி இன்னொரு மிகப்பெரிய சாதனையை படைப்பார் என்றும் அல் ஜசீரா குறிப்பிட்டுள்ளது.

பிரபலமான சர்வதேச செய்தி ஊடகமான அல் ஜசீரா, இந்தியாவின் லோக்சபா தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் பற்றி அலசும் வகையில் விரிவான கட்டுரையை வெளியிட்டுள்ளது. இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி, பெரும்பான்மையுடன் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டு, மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க வாய்ப்புள்ளதாக எக்ஸிட் போல் கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது. பாஜக உலகின் மிகப்பெரிய ஜனநாயக வாக்கெடுப்பில் எதிர்க்கட்சி கூட்டணியை வீழ்த்துவதாகத் தெரிகிறது என அல் ஜசீரா குறிப்பிட்டுள்ளது.

Lok Sabha Election 2024 Lok Sabha Election Exit Poll Narendra Modi BJP 2024

மோடி படைக்க உள்ள மெகா சாதனை: வரும் செவ்வாய்க்கிழமை (ஜூன் 4) வெளிவர இருக்கும் அதிகாரப்பூர்வ முடிவுகள், தற்போது வெளியிடப்பட்டுள்ள எக்ஸிட் போல் கருத்துக்கணிப்புகளை ஒத்து இருக்கும் பட்சத்தில், பாரதிய ஜனதா கட்சி, 2019 லோக்சபா தேர்தலில் பெற்றதை விட மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்யும். மேலும், பிரதமர் நரேந்திர மோடி, இன்னொரு மிகப்பெரிய சாதனையையும் எட்டுவார்.

சுதந்திர இந்தியாவில் இதற்கு முன் எந்தப் பிரதமரும் ஒவ்வொரு முறையும் அதிகரித்து வரும் சீட் எண்ணிக்கையுடன் மூன்று லோக்சபா தேர்தல்களில் தொடர்ச்சியாக வெற்றி பெற்றதில்லை. 2014ல் பாஜக 282 சீட்களையும், 2019ல் பாஜக 303 சீட்களையும் வென்றது. 2024 ரிசல்ட்டில் பாஜக அதைவிட அதிக இடங்களை வெல்லக்கூடும் என்கின்றன எக்ஸிட் போல்கள்.

3 முறை.. அதுவும் தொடர் வளர்ச்சி: அதன்படி, பாஜக இந்த முறை 303 க்கும் அதிகமான இடங்களை வென்றால், தொடர்ச்சியாக 3 முறை மிகப்பெரிய ஜனநாயக நாட்டில் ஆட்சி அமைக்கும் பிரதமர் என்ற பெருமையோடு, ஒவ்வொரு முறையும் முந்தைய தேர்தல்களை விட அதிக சீட்களுடன் வென்ற பெருமையையும் மோடி பெறுவார் எனக் குறிப்பிட்டுள்ளது அல் ஜசீரா.

அதாவது, காங்கிரஸ் கட்சி சார்பில் ஜவஹர்லால் நேரு தொடர்ந்து 3 முறை பிரதமராக இருந்தபோதும், அப்போது, 1951 தேர்தலில் காங்கிரஸ் 364 இடங்களையும் 1957 தேர்தலில் 371 இடங்களையும், 1962 தேர்தலில் 361 இடங்களையும் பிடித்தது. அதன்பிறகு இந்திரா காந்தி, வாஜ்பாய் காலத்திலும் ஊசலாட்டங்கள் இருந்தன. தொடர்ச்சியாக 3 முறை அதுவும் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் சீட் வளர்ச்சி என்ற பெருமையை மோடி பெறுவார்.

எக்ஸிட் போல் பற்றி அல் ஜசீரா: இந்தியாவின் முன்னணி ஊடகங்களால் வெளியிடப்பட்ட ஏழு எக்ஸிட் போல் கருத்துக் கணிப்புகளில், மக்களவையில் உள்ள 543 இடங்களில் 350 - 380 இடங்களை பாஜகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் வெல்லும் என்று கணித்துள்ளது என்று அல் ஜசீரா தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கருத்துக் கணிப்புகள் ஒரு சீரற்ற பதிவைக் கொண்டுள்ளன மற்றும் கடந்த கால ஆய்வுகள் வெவ்வேறு கட்சிகளின் எண்ணிக்கையை குறைத்து மதிப்பிடுகின்றன மற்றும் மிகைப்படுத்தியுள்ளன. இருப்பினும், சில விதிவிலக்குகளுடன், கடந்த இரண்டு தசாப்தங்களில் பெரும்பாலும் சரியாகக் கணித்துள்ளனர் என்றும் அல் ஜசீரா தெரிவித்துள்ளது.

அதோடு, எதிர்க்கட்சியான இந்தியா கூட்டணி நாட்டின் தென் மாநிலங்களில் சிறப்பாக செயல்படும் என்று எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில், பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் பாஜக அங்கும் பிரமிக்க வைக்கும் அளவிலான ரிசல்ட்டை பெறும் என்று எக்ஸிட் போல் முடிவுகள் கூறுகின்றன என அல் ஜசீரா தெரிவித்துள்ளது.

தென்னிந்தியாவிலும் கால் தடம்: பாஜக ஒருபோதும் வெற்றி பெறாத இடதுசாரிகளின் கடைசி கோட்டையான கேரளாவில் பாஜக 2-3 இடங்களை கைப்பற்றலாம் என்று பல கருத்துக்கணிப்புகள் கணித்துள்ளன. தமிழகத்தில் பாஜக 1-3 இடங்களில் வெற்றி பெறலாம் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. அங்கு கடந்த தேர்தலில் பாஜக வெற்றி பெறவில்லை. எக்ஸிட் போல் கணித்துள்ளபடி, தென் இந்தியாவில் பாஜகவுக்கு இந்த வெற்றிகள் நிறைவேறினால், பல தசாப்தங்களாக போராடி வரும் எதிர்க்கட்சிகளின் கோட்டைகளில் பாஜக காலூன்ற முடியும்.

பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளும் கர்நாடகாவில் தங்கள் இடங்களைத் தக்கவைத்துக் கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2019 ஆம் ஆண்டில் மாநிலத்தில் உள்ள 28 இடங்களில் 25 இடங்களில் பாஜக வெற்றி பெற்றது. இந்த முறை அதனை தக்க வைக்கும் என்கின்றன கணிப்புகள். மேலும் தெலுங்கானாவிலும் பாஜக கணிசமான இடங்களைக் கைப்பற்றும்.

பாஜக வெற்றியை நோக்கி: இந்த முடிவுகள், கடந்த ஆண்டு கர்நாடகா மற்றும் தெலுங்கானா ஆகிய 2 மாநிலங்களிலும் சட்டமன்றத் தேர்தல்களில் பாஜகவை தோற்கடித்து வெற்றி பெற்ற எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு மிகப்பெரிய பின்னடைவைக் குறிக்கும். தென் மாநிலங்களில் வலுவாக காலூன்றுவதற்கு பாஜகவுக்கு நம்பிக்கை அளிக்கும்.

மேலும், குஜராத், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், டெல்லி, உத்தரகாண்ட், இமாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட பாஜக செல்வாக்கு மிக்க மாநிலங்களில் பாஜக மீண்டும் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி பீகார் மற்றும் ராஜஸ்தானில் ஓரளவு வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இந்த இரண்டு மாநிலங்களிலும் பாஜக கடந்த தேர்தலில் கிட்டத்தட்ட ஸ்வீப் செய்திருந்தது.

இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமான உத்தரபிரதேசத்தில், கடந்த தேர்தலில் 62 இடங்களை பெற்றிருந்த பாஜக, அதன் கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்து மொத்தமுள்ள 80 இடங்களில் 65-க்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது என அல் ஜசீரா தமது கட்டுரையில் தெரிவித்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+