இந்தியா திரும்ப மறுக்கும் 27 பயணிகள்.. பிரான்ஸில் 4 நாட்கள் நின்ற "கழுதை" விமானம்! என்ன நடந்தது
டெல்லி: பிரான்ஸ் நாட்டில் தடுத்து நிறுத்திவைக்கப்பட்ட இந்திய விமானம், மும்பையில் தரையிறங்கிய போதிலும், 27 இந்தியர்கள் நாடு திரும்பவில்லை. அவர்கள் எங்கே போனார்கள் என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.
துபாயில் இருந்து மத்திய அமெரிக்க நாடான நிகரகுவா என்ற நாட்டிற்கு விமானம் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த விமானம் வத்ரி விமான நிலையத்தில் எரிபொருளை நிரப்பத் தரையிறங்கியது.

அப்போது அதில் ஆள் கடத்தல் நடந்ததாகத் தகவல் கிடைத்த நிலையில், விமானத்தைத் தடுத்து நிறுத்தி அதிகாரிகள் விசாரணை நடத்தினர். சுமார் 4 நாட்கள் வரை அதிகாரிகள் விமானத்தில் விசாரணை நடத்தினர்.
27 இந்தியர்கள் திரும்பவில்லை: விமானத்தில் 300+ பேர் இருந்த நிலையில், அவர்களில் பெரும்பாலானோர் இந்தியர்கள் என்று கூறப்பட்டது. பாரீஸுக்கு அருகே வாட்ரி விமான நிலையத்தில் இந்த விமானம் சனிக்கிழமை தரையிறக்கப்பட்டது. இப்போது இன்று காலை 4 மணியளவில் அந்த ஏர்பஸ் ஏ340 விமானம் 276 பயணிகளுடன் மும்பையில் தரையிறங்கியுள்ளது. இருப்பினும், விமானத்தில் இருந்த மற்ற 27 பேர் இந்தியா திரும்பவில்லை.
என்ன காரணம்: அவர்கள் இந்தியா வர அனுமதி தரப்பட்ட போதிலும், அவர்கள் இந்தியா திரும்பவில்லை. இதற்கான காரணம் என்ன என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது நாடு திரும்பாதவர்களில் 5 சிறார்கள் உட்பட 20 பேர் பிரான்ஸில் அகதிகளாக இருக்கப் புகலிடம் கோரியுள்ளனர். அவர்களின் விண்ணப்பங்கள் இப்போது பாரீஸ் விமான நிலையத்தில் பரிசீலனையில் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அவர்களில் எத்தனை பேர் இந்தியர்கள் என்பது தெளிவாகத் தெரியவில்லை..
சர்வதேச சட்டத்தின் கீழ் அகதிகளாகப் புகலிடம் கோருபவர்களைச் சொந்த நாட்டிற்குத் திருப்பி அனுப்ப முடியாது. இந்த 25 பேர் போக இன்னும் இரண்டு பேரை பிரான்ஸ் அதிகாரிகள் தடுப்புக் காவலில் வைத்திருந்தனர். ஆள் கடத்தல் விவகாரத்தில் அந்த இரண்டு பேரைத் தான் பிரான்ஸ் அதிகாரிகள் தடுத்து நிறுத்தி இருந்தனர். அதேநேரம் அவர்களும் கூட அவர்கள் பிரான்சிலிருந்து வெளியேற அனுமதி பெற்றுவிட்டதாக உள்ளூர் அதிகாரிகள் கூறியுள்ளனர். இதில் அவர்களுக்குத் தொடர்பு இல்லை என்று பிரான்ஸ் போலீசார் நம்பியதால் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
வழக்கறிஞர் சொல்வது என்ன: இது குறித்து அவர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறுகையில், "இந்த வழக்கில் வெளியே இருந்து அழுத்தம் அதிகமாகவே இருந்தது. குறிப்பாக ஊடகங்கள் ஒரு வித அழுத்தத்தை ஏற்படுத்தினர். இதனால் விசாரணை முறையாக நடக்குமா என்பதில் சிரு சந்தேகம் ஏற்பட்டது. இருப்பினும், அந்த அழுத்தங்களை எல்லாம் கண்டுகொள்ளாமல் நீதிபதி இந்த வழக்கை விசாரித்துள்ளார்" என்று அவர் தெரிவித்தார்.
இவர்கள் சட்ட விரோதமாக அமெரிக்காவில் நுழைய முயன்றதாகச் சந்தேகிக்கப்படுகிறது. சட்ட விரோதமாக அமெரிக்காவில் நுழைய முயல்வோர் பொதுவாக 'கழுதை விமானங்கள்' அதாவது ஆங்கிலத்தில் 'donkey flights' என்ற நீண்ட விமான ரூட்டை எடுப்பார்கள். அதன்படி முதலில் ரூல்ஸ் குறைவாக இருக்கும் நாடுகளுக்குச் செல்லும் இவர்கள் அங்கிருந்து அமெரிக்காவுக்கு எளிதாகச் செல்வார்கள்.
அப்படி சட்ட விரோதமாக நுழைய முயல்வோர்களே இப்படி நிகரகுவா நாட்டிற்குச் செல்ல முயன்று இருக்கலாம் என்று கூறப்படுகிறது. நிகரகுவா நாட்டிற்குச் சென்றுவிட்டால் போதும். அதன் பிறகு அங்கிருந்து அமெரிக்காவுக்குச் சாலை மார்க்கமாகவே கடந்துவிடலாம் என்பதால் அங்கே செல்ல முயன்று இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
-
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications