"இந்தியா” கூட்டணியை உடைக்க பிரசாந்த் கிஷோர் சதி ? டெல்லியில் கெஜ்ரிவால்- மமதா மருமகன் சந்திப்பு!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: "இந்தியா" கூட்டணி கூட்டம் மும்பையில் நடைபெறும் நிலையில் டெல்லியில் ஆம் ஆத்மி தலைவரும் முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவாலை மேற்கு வங்க முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மமதா பானர்ஜியின் மருமகன் அபிஷேக் பானர்ஜி சந்தித்து பேசியுள்ளார். முன்னதாக தேர்தல் வியூக வல்லுநர் பிரசாந்த் கிஷோரை அபிஷேக் பானர்ஜி சந்தித்ததுதான் ஏன்? என்ற கேள்வியும் எழுப்பப்படுகிறது.

பிகே தலையீடு: "இந்தியா" கூட்டணியின் உள் விவகாரங்களில் பிரஷாந்த் கிஷோர் தலையிட்டு கருத்து தெரிவித்து வருவது சர்ச்சையாகி வருகிறது. "இந்தியா" கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு நிதிஷ்குமாரை தேர்வு செய்யக் கூடாது; அதற்கு பதில் திமுகவின் தலைவரான தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அல்லது மமதா பானர்ஜிக்கு கொடுக்கலாம் என்ற கருத்தை வெளிப்படுத்தி இருந்தார் பிரசாந்த் கிஷோர்.

Why Abhishek Banerjee met Prashant Kishor, Arvind Kejriwal?

அபிஷேக் பானர்ஜி சந்திப்பு: இதனைத் தொடர்ந்து அபிஷேக் பானர்ஜியை பிரசாந்த் கிஷோர் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பில் இருவரும் பேசியது என்ன என்கிற விவரம் வெளியாகவில்லை. ஆனால் பிரசாந்த் கிஷோருடனான சந்திப்பை தொடர்ந்து திடீரென டெல்லி சென்று அரவிந்த் கெஜ்ரிவாலை அபிஷேக் பானர்ஜி சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

கெஜ்ரிவாலை ஏன் சந்தித்தார்?: கடந்த சில நாட்களுக்கு முன்னர், லோக்சபா தேர்தல் நெருங்கும் நிலையில் அபிஷேக் பானர்ஜியை கைது செய்ய மத்திய பாஜக அரசு முனைப்பு காட்டுகிறது என மமதா பானர்ஜி குற்றம்சாட்டி இருந்தார். இப்போது அபிஷேக் பானர்ஜி தனி ஆவர்த்தனமாக அரவிந்த் கெஜ்ரிவாலை பிரசாந்த் கிஷோர் ஆலோசனையின் பேரில் சந்தித்து பேசியுள்ளார்.

பாஜகவின் சதி?: இந்தியா கூட்டணி நிலைத்துவிடக் கூடாது என்பதுதான் பாஜகவின் பெருவிருப்பம். இதனை செயல்படுத்தும் வகையில் "இந்தியா" கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் பிரசாந்த் கிஷோர் கருத்துகளையும் கூறி வருகிறார். "இந்தியா" கூட்டணியின் தலைமை செயலகத்தை சிபிஎம் கட்சியின் டெல்லி அலுவலகத்தில் அமைக்கக் கூடாது என்பதில் மமதா பானர்ஜி உறுதியாக இருக்கிறார். ஆனால் கூட்டணியில் தங்கள் இருப்பை உறுதி செய்ய அது ஒன்றுதான் ஒரே வழி என்பதில் இடதுசாரிகள் உறுதியாக உள்ளனர். இந்த குழப்பத்தை பிரசாந்த் கிஷோர் அறுவடை செய்யலாம் என கணக்குப் போடுகிறாரா? என்கிற கேள்வியும் அரசியல் வட்டாரங்களில் எழுப்பப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+