ஜெயலலிதா ஸ்டைலில் மோடி ஆட்சி.. இந்தியாவே வளர்ந்துள்ளது.. டெல்லியில் புகழ்ந்து தள்ளிய எடப்பாடி!
டெல்லி: டெல்லியில் நேற்று பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்றார். இந்நிலையில் தான் பாஜகவுடன் கூட்டணியில் அதிமுக அங்கம் வகிப்பது ஏன் என்பது பற்றி விளக்கம் அளித்துள்ளார்.
அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் தீவிரமாக வியூகம் வகுத்து உள்ளன. அதன்படி பெங்களூரில் 2வது கட்டமாக 2 நாள் ஆலோசனை கூட்டம் நேற்று முன்தினம் தொடங்கி நேற்றுடன் முடிவடைந்தது.

இந்த கூட்டத்தில் காங்கிரஸ் திமுக, திரிணாமுல் காங்கிரஸ் உள்பட 26 கட்சிகள் இணைந்து INDIA என்ற பெயரில் கூட்டணியை அமைத்துள்ளன. I-N-D-I-A என்பதற்கு Indian National Developmental Inclusive Alliance என்பது தான் விரிவாக்கமாகும். தமிழில் கூற வேண்டும் என்றால் இந்திய தேசிய வளர்ச்சி உள்ளடக்கிய கூட்டணி என சொல்லலாம்.
இதற்கு போட்டியாக நேற்று டெல்லியில் பாஜக தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நடந்தது. பிரதமர் மோடி தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் பாஜகவின் தேசிய தலைவர் ஜேபி நட்டா உள்பட பிற கட்சி தலைவர்கள் என மொத்தம் 38 கட்சிகளை சேர்ந்தவர்கள் பங்கேற்று கருத்துகளை தெரிவித்தனர்.
தமிழகத்தை பொறுத்தவரை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, தம்பித்துரை எம்பி, தமாகா தலைவர் ஜிகே வாசன், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி உள்ளிட்ட மேலும் சிலர் பங்கேற்றனர். இந்நிலையில் தான் இன்று டெல்லியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
நேற்றைய தினம் பிரதமர் மோடி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணியின் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் நான் பங்கேற்று கருத்துகளை தெரிவித்து உள்ளோம். ஜெயலலிதா, எம்ஜிஆர் தலைமையில் அதிமுக இருந்தபோது நாடாளுமன்றம் அல்லது சட்டசபை தேர்தலாக இருந்தாலும் ஒரேமாதிரியான கருத்துடைய கட்சியுடன் கூட்டணி அமைத்து நாங்கள் வெற்றி பெற்று இருக்கிறாம். இருபெரும் தலைவர்கள் வழியில் அதிமுக செயல்பட்டு வருகிறது.
தேசிய ஜனநாய கூட்டணி ஆட்சியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் 9 ஆண்டில் இந்தியாவின் வளர்ச்சியை நாம் எண்ணிப்பார்க்க வேண்டும். கொரோனா பரவல் நேரத்தில் பல நாடுகளில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. ஆனால் இந்தியாவில் பிரச்சனை என்பது ஏற்படாத வகையில் சிறப்பான ஆட்சியை வழங்கியுள்ளார்.
மேலும் உலகளவில் இந்தியாவின் பெருமையை பிரதமர் மோடி அதிகரித்துள்ளார். இளைஞர்களுக்கு என்ன தேவை என்பதை அறிந்து செயல்பட்டு வருகிறார். தேசிய ஜனநாய கட்சி கூட்டணி நிச்சயமாக இந்தியா முழுவதும் 330 இடங்களில் வெற்றி பெறும் என நம்புகிறோம்.
-
காங்கிரசுக்கு நீங்க ஏன் உயிர் கொடுக்குறீங்க விஜய்? கடுப்பான பாஜக.. கோபத்தின் உச்சிக்கே போன அமித் ஷா -
Waiting Is Over.. பாஜகவுக்கு டாடா சொன்ன அண்ணாமலை! புதிய கட்சி எப்போது உதயம்? லீக்கான தகவல்! -
3வது இடம்.. 2026ல் மண்ணைக் கவ்விய அதிமுக! தோல்விக்கு என்ன காரணம்? உங்க கருத்தை சொல்லுங்க மக்களே! -
“அண்ணாமலைக்கும், அவர் பின்னால் போன ஆட்டு மந்தைக்கும் பாஜகவின் கொள்கை புரியவில்லை” - வேலூர் இப்ராஹிம் -
தமாகாவை கரைத்த பாஜக.. என்டிஏ கூட்டணியில் இருந்து வெளியேறியது ஏன்? ஜிகே வாசன் முடிவில் பின்னணி -
பாஜக கூட்டணிக்கு ‘குட்பை'.. வெளியேறிய தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி - ஜிகே வாசன் அறிவிப்பு -
இனிமே நம்மதான்..பக்காவாய் காய் நகர்த்தும் பாஜக! டெல்லியில் எகிறும் செல்வாக்கு! மோடி போட்ட பலே ப்ளான் -
கைவிட்ட பாஜக.. மம்தாவையும் பகைத்து கொண்ட திரிணாமுல் தலைவர்கள்.. இடியாப்ப சிக்கல்! -
புதுப்பொலிவு பெறும் புதுச்சேரி.. அள்ளி கொடுத்த மத்திய அரசு! எல்.முருகன் சொன்ன குட் நியூஸ்! -
பாபா வங்காவின் ரகசியக் குறிப்புகள்! ஜூன் 15 முதல் கோடீஸ்வர யோகம் பெறப்போகும் அந்த '5' ராசிகள்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை












Click it and Unblock the Notifications