இதயங்களை வென்ற ரிஷி சுனக்- அக்ஷதா மூர்த்தி தம்பதி.. எல்லோர் கவனமும் இவங்க மேல தான்.. ஏன் தெரியுமா
டெல்லி: இந்த ஜி20 கூட்டத்தில் அத்தனை பேரின் கண்களும் பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் மற்றும் அவரது மனைவி அக்ஷதா மூர்த்தி மீதே இருக்கிறது. அதிலும் அக்ஷதா மூர்த்தியைக் குறிப்பிட்டுத் தான் சொல்லலாம். அதற்கான காரணத்தை நாம் பார்க்கலாம்.
இந்தியாவின் மிகப் பெரிய பணக்காரர்களில் ஒருவரான இன்போஸிஸ் நாராயண மூர்த்தியின் மகளான அக்ஷதா மூர்த்தி இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கை கரம் பிடித்தவர்,

அக்ஷதா மூர்த்தியை திருமணம் செய்து கொண்ட பிறகு தான் ரிஷி சுனக் வாழ்க்கையில் மிகப் பெரிய வளர்ச்சி ஏற்பட்டது என்றே சொல்லலாம். பிரிட்டன் அரசியலில் மிக வேகமாக வளர்ந்த ரிஷி சுனக், போரீஸ் ஜான்சன் அரசிலேயே அமைச்சராக இருந்தார். அப்போதே ரிஷி சுனக்கிற்கு ஆதரவு அதிகமாக இருந்தது. மிகவும் இக்கட்டான சூழலில் இருவர் பதவி விலகிய நிலையில், பிரிட்டன் பிரதமராகப் பொறுப்பேற்று நாட்டை சிறப்பாக வழிநடத்தி வருகிறார்.
அக்ஷதா மூர்த்தி: ரிஷி சுனக் பிரதமராக பிறகு அவர் இந்தியா வருவது இதுவே முதல்முறை. இந்த பயணத்தில் இந்தியாவுடன் வலுவான உறவை ஏற்படுத்த வேண்டும் என்பதில் அவர்கள் உறுதியாக உள்ளனர். குறிப்பாக அக்ஷதா மூர்த்தியின் பெற்றோரான நாராயண மூர்த்தி மற்றும் அவரது மனைவி சுதா நாட்டின் முக்கியமான நபர்களாக உள்ளனர். மேலும், நடுத்தர வர்க்கத்தில் இருந்து வெற்றியைத் தொட்டவர்களாக உள்ளனர்.
இவர்கள் பலரும் ஒரு இன்ஸ்பிரேஷனாக இருக்கும் நிலையில், ரிஷி சுனக்கும் தன்னை இந்தியாவின் மருமகன் என்று அழைப்பதில் பெருமை கொள்வதாகக் குறிப்பிடுகிறார். ஏனென்றால் அவரது வெற்றிக்கு அக்ஷதா மூர்த்தி முக்கிய காரணம் என்பதை மறுக்க முடியாது. இதை அவரே கூட பல பேட்டிகளில் சுட்டிக் காட்டியுள்ளார்.
டிரெண்டிங்: இதற்கிடையே பிரிட்டன் பிரதமர் அலுவலகம் இந்த ஜோடியின் படங்களைப் பகிர்ந்துள்ளனர். இந்த ஜி20 உச்சி மாநாட்டில் அவர்கள் கலந்து கொண்டுள்ள நிலையில், அவர்கள் போட்டோக்கள் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. பலரின் மனங்களையும் கவரும் வகையில் இந்த ஜோடியின் படம் இருக்கிறது. உலகின் பல முக்கிய நாடுகளில் இருந்து தலைவர்கள் வந்தாலும் ரிஷி சுனக்- அக்ஷதா மூர்த்தி படங்கள் டிரெண்டாக காரணம் இருக்கவே செய்கிறது.
முதல் காரணம் அனைவருக்கும் தெரியும். இருவருக்கும் இந்தியாவுடன் வலுவான இணைப்பு இருக்கிறது. அக்ஷதா மூர்த்தியின் பெற்றோர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். அதேபோல ரிஷி சுனக்கின் பெற்றோரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள். அதேநேரம் இந்த நிகழ்வில் இவர்கள் படம் மட்டும் டிரெண்டாக மற்றொரு காரணமும் இருக்கவே செய்கிறது.
என்ன காரணம்: ஏனென்றால் இந்த ஜி20 நிகழ்வில் ஜோடியாகப் பங்கேற்ற முக்கிய நாட்டின் பிரதிநிதி ரிஷி சுனக் தான். அமெரிக்கா, கனடா நாடுகளின் தலைவர்கள் தனியாகவே இந்தியாவுக்கு இந்த ஜி20 மாநாட்டில் கலந்து கொள்ள வந்துள்ளனர்.
அமெரிக்க அதிபர் பைடனின் மனைவி ஜில் பைடன் உச்சி மாநாட்டில் பங்கேற்கவில்லை. அவர் அங்கே ஆசிரியராக பணிபுரிந்து வரும் நிலையில், அந்த பணிகள் இருப்பதால் ஜி20 கூட்டத்திற்கு வர அவர் விரும்பவில்லை.. அவர் டெல்லிக்கு வரத் திட்டமிட்டிருந்தாலும் அது நடந்திருக்காது. ஏனென்றால் கடந்த வாரம் தான் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.
ட்ரூடோ: அதேபோல சர்வதேச அளவில் மற்றொரு முக்கிய ஜோடியாக இருந்த கனடா பிரதமர் ட்ரூடோ தனது மனைவி சோஃபியை பிரிவதாகக் கடந்த மாதம் அறிவித்திருந்தார். இதனால் எப்போதும் இதுபோன்ற நிகழ்வுகளில் ஜோடியாக வரும் ட்ரூடோ முதல்முறையாகத் தனியாக டெல்லிக்கு வந்துள்ளார்.
இப்படி உலகின் மற்ற டாப் நாடுகளின் தலைவர்கள் தனியாகவே இந்த ஜி20 மாநாட்டில் கலந்து கொள்ள இந்தியா வந்துள்ள நிலையில், ஜோடியாக வந்த ரிஷி சுனக்கின் படங்கள் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications