இவிஎம் எந்திரத்தை பற்றி இப்போது ஏன் பேசவில்லை?.. எதிர்க்கட்சிகளை சீண்டி பேசிய பிரதமர் மோடி
டெல்லி: மின்னணு வாக்கு எந்திரத்தை சந்தேகப்பட்டவர்கள் எல்லாரும் இப்போது அமைதியாகிவிட்டனர். நாங்கள் தோற்றுவிட்டதாக எதிர்க்கட்சிகள் ஒரு மாயையை உருவாக்கி வருவதாகவும், அடுத்த 10 ஆண்டுகளுக்கு தேசிய ஜனநாயக கூட்டணி தான் ஆட்சி அமைக்கும் என்றும் பிரதமர் மோடி பேசினார்.
டெல்லியில் இன்று தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நடந்தது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நாடாளுமன்ற மைய மண்டபத்தில் இன்று ஆலோசனை கூட்டம் தொடங்கியது. இதில் பாஜக, தெலுங்கு தேசம், ஜேடியு, ஜேடிஎஸ் உட்பட கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளின் எம்பிக்களும், கூட்டணி கட்சி தலைவர்களும், பாஜக முதல்வர்களும் கலந்து கொண்டனர்.

பிரதமர் மோடி உரை: இந்த ஆலோசனை கூட்டத்தில் நாடாளுமன்ற தேசிய ஜனநாயக குட்டணி குழு தலைவராக பிரதமர் மோடி தேர்வு செய்யப்பட்டார். ராஜ்நாத் சிங், நரேந்திர மோடியின் பெயரை பிரதமர் பதவிக்கு முன்மொழிந்தார். இதன்மூலம் அதனை மற்றவர்கள் வழிமொழிந்தனர். இதன்மூலம் 3வது முறையாக நரேந்திர மோடி பிரதமராக உள்ளார்.
இதைத்தொடர்ந்து கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர், "அடுத்த 10 ஆண்டுகளும் நாங்கள் தான் ஆட்சி அமைப்போம் என்றும்,140 கோடி மக்களுக்காக நான் உழைப்பேன் என்றும் என்னை 24/7 நேரமும் என்னை தொடர்புகொள்ளலாம் என்றும் பிரதமர் மோடி பேசினார். மேலும் எதிர்க்கட்சிகளை விமர்சித்து பேசினார். மோடி பேசியதாவது:-
தோற்றுவிட்டதாக கூறுகிறார்கள்: எதிர்க்கட்சி எம்பிக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். நாட்டை முன்னேற்றப் பாதையில் அழைத்து செல்ல கடுமையாக உழைக்க எப்போதும் தயாராக இருக்கிறேன். நாங்கள் தோற்றுவிட்டதாக ஒரு மாய தோற்றத்தை எதிர்க்கட்சிகள் உருவாக்கி வருகிறார்கள். குறிப்பிடத்தக்க வெற்றியை பெறாத அவர்கள் எதற்காக கொண்டாடி வருகின்றார்கள் என்று தெரியவில்லை.
தோற்க மாட்டோம்: நாங்கள் தோற்கவில்லை. நாங்கள் தோற்றதும் இல்லை. நாங்கள் தோற்கவும் மாட்டோம். கடந்த 3 தேர்தல்களில் காங்கிரஸ் வென்ற இடங்களை விட பாஜக அதிகம் வெற்றி பெற்றுள்ளது. ஆண்டுக்கு ஒரு லட்சம் கொடுப்பதாக காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை வெளியிட்டு மக்களை தவறாக வழிநடத்தியது காங்கிரஸ். தோற்றவர்களை விமர்சிப்பது, அவமதிப்பது நமது கலாசாரத்தில் இல்லை.
என்டிஏக்கு புது விளக்கம்: பாஜகவின் கடந்த 10 ஆண்டு ஆட்சி என்பது வெறும் டிரயிலர் தான். புதிய இந்தியா, வளர்ச்சி இந்தியா, லட்சியமிக்க இந்தியா என தேசிய ஜனநாயக கூட்டணிக்கு புதிய விளக்கத்தை மோடி கூறினார். மேலும் அடுத்த 10 ஆண்டுகளுக்கு தேசிய ஜனநாயக கூட்டணி தான் ஆட்சி அமைக்கும் என்றும் பிரதமர் மோடி சூளுரைத்தார்.
பெரும்பான்மை தேவையில்லை: தொடர்ந்து மோடி கூறுகையில், நடுத்தர மக்களின் சேமிப்பை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த 10 ஆண்டுகளில் 25 கோடி மக்களை வறுமையில் இருந்து மீட்டுள்ளோம். தேசத்தின் முன்னேற்றத்திற்கு எப்போதும் நாங்கள் உறுதுணையாக நிற்போம். அரசை நடத்த பெரும்பான்மை பலம் தேவையில்லை. ஒருமித்த கருத்து தான் முக்கியம். அனைவருக்குமான ஆட்சி நடத்துவதில் தேசிய ஜனநாயக கூட்டணி உறுதி பூண்டுள்ளது.
இவிஎம் எந்திரம் என்ன ஆனது?: ஜி 20 மாநாட்டுக்கு பிறகு ஒரு புத்துணர்ச்சி கிடைத்துள்ளது. நாட்டை முன்னேற்றப் பாதையில் அழைத்து செல்ல கடுமையாக உழைக்க தயாராக இருக்கிறோம். தேர்தலுக்கு முன்பு எதிர்க்கட்சியினர் இவிஎம் எந்திரம் மற்றும் தேர்தல் ஆணையம் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்தது. ஆனால் தேர்தல் முடிந்த பிறகு எதிர்க்கட்சியினர் அப்படியே அமைதியாகிவிட்டனர்.
மின்னணு வாக்கு எந்திரத்தை சந்தேகப்பட்டவர்கள் எல்லாரும் இப்போது அமைதியாகிவிட்டனர். இந்தியாவின் தேர்தல் நடைமுறை குறித்து ஒரு தரப்பினர் தொடர்ந்து சந்தேகம் எழுப்பி வந்தனர். மக்களுக்கு தேர்தல் நடைமுறை மீது சந்தேகம் வர தொடர்ந்து முயற்சி செய்தனர்.
தமிழ்நாட்டில் பாஜக வளர்ந்துள்ளது: தமிழ்நாட்டில் பாஜக கூட்டணிக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றி. தமிழ்நாட்டில் இருந்து ஒருவர் கூட எம்பியாக வராத போதும் அங்கு வாக்கு வங்கி அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் பாஜகவுக்கு வாக்கு சதவீதம் அதிகரித்துள்ளதால், வருங்காலத்தில் பாஜகவுக்கு எதிர்காலம் சிறப்பாக உள்ளது. இவ்வாறு மோடி கூறினார்.
-
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்! -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை!












Click it and Unblock the Notifications