‛‛பாஜக வைத்த பெரிய செக்’’.. எம்பியாக இருந்தும் கவுதம் கம்பீர் அரசியலில் விலகுவது ஏன்? பரபர பின்னணி
டெல்லி: டெல்லி கிழக்கு தொகுதியின் பாஜக எம்பியாக இருப்பவர் கவுதம் கம்பீர். இந்நிலையில் தான் அரசியல் பொறுப்புகளில் இருந்து தன்னை விடுவிக்குமாறு பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டாவிடம் இன்று அவர் கேட்டுள்ளார். விளையாட்டில் கவனம் செலுத்த உள்ளதாக கவுதம் கம்பீர் கூறியிருந்தாலும் கூட அதன் பின்னணியில் பாஜக மேலிடம் எடுத்த அதிரடி முடிவு தான் காரணம் என கூறப்படுகிறது.
டெல்லியை சேர்ந்தவர் கவுதம் கம்பீர். இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரரான இவர் 2011ல் நம் அணி 50 ஓவர் உலககோப்பையை வெல்ல முக்கிய காரணமாக இருந்தார். இறுதி போட்டியில் கம்பீர் அடித்த 97 ரன்கள் தான் இலங்கையை இந்தியா வீழ்த்த முக்கிய காரணமாக இருந்தது.

அதன்பிறகு கிரிக்கெட்டில் இருந்து விடை பெற்ற கவுதம் கம்பீர் அரசியலுக்குள் நுழைந்தார். அவர் பாஜகவில் இணைந்தார். 2019 மார்ச் மாதம் அவர் பாஜகவில் இணைந்த நிலையில் உடனடியாக நாடாளுமன்ற தேர்தலில் களமிறக்கப்பட்டார். அதாவது 2019 நாடாளுமன்ற தேர்தலில் டெல்லி கிழக்கு தொகுதியில் அவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
இந்த தேர்தலில் கவுதம் காம்பீர் வெற்றி பெற்று எம்பியானார். மொத்தம் 6,95,109 வாக்குகள் பெற்ற கவுதம் கம்பீர் சுமார் 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தார். விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் கவுதம் கம்பீர் மீண்டும் டெல்லி கிழக்கு தொகுதியில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் தான் தான் அவர் அரசியல் பொறுப்புகளில் இருந்த தன்னை விடுவிக்கும்படி திடீரென்று பாஜக தலைமையிடம் கேட்டுள்ளார். இதுதொடர்பாக கவுதம் கம்பீர் தனது எக்ஸ் பக்கத்தில் ஜேபி நட்டாவுக்கு கோரிக்கை வைத்திருந்தார்.
அதில், ‛‛கிரிக்கெட் தொடர்பான பொறுப்புகளில் கவனம் செலுத்த உள்ளதால் அரசியல் பணியில் இருந்து தன்னை விடுவிக்கும்படி பாஜக தலைவர் நட்டாவிடம் கேட்டு கொள்கிறேன். மக்களுக்கு சேவை ஆற்ற வாய்ப்பு அளித்த பிரதமர் மோடிக்கும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கும் மனமார்ந்த நன்றி! ஜெய்ஹிந்த்'' என தெரிவித்துள்ளார். இதன்மூலம் அவர் அரசியலில் இருந்து ஒதுங்குவதாக அறிவித்துள்ளார்.
தற்போது கவுதம் கம்பீர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணியின் வழிகாட்டியாளராக இருக்கிறார். இதனால் அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் உண்மையில் கவுதம் கம்பீரின் முடிவுக்கு பின்னால் பாஜக மேலிடத்தின் முடிவு தான் உள்ளதாக கூறப்படுகிறது. அதாவது வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக 370 தொகுதிகளிலும், பாஜக கூட்டணி என்றால் 400 க்கும் அதிகமான இடங்களிலும் வெல்ல வேண்டும் என மேலிடம் இலக்கு வைத்து செயல்பட்டு வருகிறது.
அந்த வகையில் ஒவ்வொரு தொகுதியிலும் வெற்றி வாய்ப்பு அதிகமுள்ள வேட்பாளர்களை நிறுத்த பாஜக திட்டமிட்டுள்ளது. சிட்டிங் எம்பியாக இருந்தாலும் கூட வெற்றி வாய்ப்பு இருந்தால் மட்டுமே மீண்டும் களமிறக்க பாஜக முடிவு செய்துள்ளது. அப்போது தான் 370 தொகுதியில் வெற்றி பெற்று இலக்கை எட்ட முடியும். அந்த வகையில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ஒவ்வொரு தொகுதி பற்றியும் பாஜக உள்கட்சி சர்வேயை மேற்கொண்டது. அதனடிப்படையில் தான் வேட்பாளர்கள் நிறுத்தப்பட உள்ளனர்.
அதன்படி டெல்லி கிழக்கு தொகுதியில் கவுதம் கம்பீருக்கு மக்கள் மத்தியிலும், பாஜகவினர் இடையேயும் செல்வாக்கு இல்லை என்பது தெரியவந்துள்ளது. மேலும் மீண்டும் அவருக்கு தொகுதியில் வாய்ப்பளித்தால் பின்னடைவை சந்திக்க வாய்ப்புள்ளதாக பாஜக மேலிடத்துக்கு தகவல் சென்றது. இதனால் வரும் நாடாளுமன்ற தேர்தலில் கவுதம் கம்பீருக்கு டெல்லி கிழக்கு தொகுதியில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படாது என்ற தகவல்கள் வெளியாகின. இதையடுத்து தான் கவுதம் கம்பீரே முன்கூட்டியே தன்னை அரசியல் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கும்படி ஜேபி நட்டாவிடம் கோரிக்கை வைத்துள்ளார். இதன்மூலம் அரசியலில் பெருந்தன்மையுடன் வெளியேறலாம் என்பதால் கவுதம் கம்பீர் இந்த முடிவை எடுத்துள்ளார்.
அதேபோல் தான் பாஜகவின் ஜார்கண்ட் மாநிலம் ஹசாரிபாக் தொகுதியின் பாஜகவின் எம்பியான ஜெயந்த் சின்ஹாவும் தன்னை அரசியல் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கும்படி கூறியுள்ளார். அவரும் பிரதமர் மோடி, அமித்ஷா, ஜேபி நட்டா உள்ளிட்டோருக்கு நன்றி தெரிவித்து இதனை செய்துள்ளார். ஜெயந்த் சின்ஹா பிரதமர் மோடியின் அமைச்சரவையில் மத்திய அமைச்சராக இருந்தார். மேலும் முன்னாள் மத்திய அமைச்சரான யஷ்வந்த் சின்ஹாவின் மகன் ஆவார். இவர் ஹசாரிபாக் தொகுதியில் 2 முறை தொடர்ந்து வெற்றி பெற்ற நிலையில் தற்போது தொகுதியில் செல்வாக்கு இல்லை என கூறப்படுகிறது. இதனால் அவருக்கும் பாஜக மீண்டும் போட்டியிட வாய்ப்பு அளிக்காது என கூறப்படுகிறது. இதனை அறிந்து தான் ஜெயந்த் சின்ஹாவும் இப்படி அறிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
-
தேர்தல் நேரத்தில் கிளம்பிய பூதம்.. ரூ.4 கோடி பிடிபட்ட வழக்கில் நயினார் நாகேந்திரனை ED விசாரிக்க மனு! -
ஷாக்கில் அதிமுக! விழுந்து விழுந்து வேலை பார்ப்பாரே அந்த சரவணனா? பாஜக விஐபிகள் போட்ட மெகா ஸ்கெட்ச் -
ஜோதிடர் சொன்ன வார்த்தை? நயினார் நாகேந்திரன் நெல்லை தொகுதியில் போட்டியிடாதது ஏன்? பரபரப்பு தகவல் -
சிங்காநல்லூர் அல்லது கவுண்டம்பாளையம்.. ஒரு தொகுதியை கொடுங்க.. பியூஷ் கோயலிடம் கேட்ட அண்ணாமலை? -
மதுரை தெற்கில் பாஜக வெல்லுமா.. செளராஷ்டிரா வாக்குகளை நம்பும் ராம சீனிவாசன்.. பூமிநாதன் சமாளிப்பாரா? -
அதிமுக வேட்பாளர்கள் யார்? 146 வேட்பாளர்களை எப்போது அறிவிப்பார் எடப்பாடி! உச்சகட்ட டென்ஷனில் ர.ர.கள்! -
குமரியில் காலியாகும் அதிமுகவின் அடித்தளம்.. 4 தொகுதிகளை கைப்பற்றிய பாஜக.. சோர்வடைந்த தொண்டர்கள்! -
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி.. வெயிட்டான தொகுதிகளை வச்சுகிட்டாரே! எந்தெந்த தொகுதிகளில் போட்டி? -
சேப்டி கேம் ஆடுகிறாரா எடப்பாடி? தென் மண்டலத்தை பாஜகவிற்கு தாரை வார்த்ததில் உள் அர்த்தம் இருக்கிறதா? -
பாமக போட்டியிடும் 18 தொகுதிகள் எவை? வெளியானது உத்தேச பட்டியல்.. எல்லாமே வட மாவட்டங்களில்? -
அதிவேகத்தில் அதிமுக.. ஏரியா பிரித்த எடப்பாடி! அதிமுக கூட்டணியில் யார்? எங்கே போட்டி? உத்தேச லிஸ்ட்! -
கடைசி நிமிடத்தில் மாறிய பாஜக எண்கள்! அதிமுக கோட்டையில் தாமரையின் அசத்தல்! முழு அதிரடி பலன்கள் இதோ












Click it and Unblock the Notifications