அன்று காங்கிரஸை அப்படியெல்லாம் கடுமையாக விமர்சித்த நாயுடுவுக்கு.. இன்று இப்படி ஒரு நிலை
Recommended Video
டெல்லி: அரசியலில் நிரந்தர நண்பணும் இல்லை, நிரந்த எதிரியும் இல்லை என்பது நிதர்சனமான உண்மை. இது ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு விஷயத்தில் முற்றிலும் பொருந்தும்.
முன்பு எந்த காங்கிரஸ் கட்சியை ஊழல் கட்சி என்றும், அந்த இயக்கத்தை ஆந்திராவிலேயே இல்லாமல் செய்ய வேண்டும் என்று போராடியவர் தெலுங்குதேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு.
இப்போது அதே காங்கிரஸ் இயக்கத்தை மத்தியில் ஆட்சிக்கு கொண்டுவர வேண்டும் என்றும், அந்த கட்சி தலைவர் ராகுலை பிரதமராக்க வேண்டும் என்றும் ஊர் ஊராக போய் தலைவர்களை சந்தித்து வருகிறார்.

காங்கிரஸ் மீது தாக்கு
1995ம் ஆண்டுகளில் தனது மாமனார் என்.டி.ராமராவுடன் இணைந்து காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சித்து அரசியலை ஆரம்பித்தார் தெலுங்குதேசம் கட்சி தலைவர் சந்திரராபு நாயுடு. தனது மாமனாரிடம் இருந்து குறுக்கு வழியில் ஆட்சியை கைபற்றினாலும் தனது சாதூர்ய திறமையால் தெலுங்கு தேசம் கட்சியை ஆந்திராவில் தொடர்ந்து ஆட்சியைமைக்க வைத்தார்.

புதிய ஆந்திராவின் முதல்வர்
இன்றைய நவீன ஹைதராபாத்துக்கு 1995ம் ஆண்டுகளில் அடித்தளம் போட்டவர் சந்திரபாயு நாயுடு தான். தொடர்ந்து 10 ஆண்டுகள் ஒருங்கிணைந்த ஆந்திராவின் முதல்வராக இருந்தவர், 2004ம் ஆண்டு காங்கிரஸ் மூத்த தலைவர் ராஜசேகர் ரெட்டியிடம் ஆட்சியை பறிகொடுத்தார். அதன் பிறகு சரியாக 10 வருடம் கழித்து 2104ம் ஆண்டு ஆந்திரா இரண்டாக பிரிந்த பின் புதிய ஆந்திராவின் முதல்வராக ஆனார் சந்திரபாபு நாயுடு.

சிறப்பு அந்தஸ்து
பிரதமர் மோடி தலைமையிலான பாஜகவுடன் கூட்டணி வைத்து கடந்த 4 ஆண்டுகளாக மத்தியில் ஆட்சியில் இருந்தவர், பாஜக அரசு ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து தராததால், பாஜக கூட்டணியில் இருந்து விலகினார். அதன்பின்னர் காங்கிரஸ் கட்சியுடன் நெருக்கம் காட்ட ஆரம்பித்த சந்திரபாபு நாயுடு, இப்போது மத்தியில் காங்கிரஸ் கட்சியை ஆட்சி பொறுப்புக்கு கொண்டுவர பாடுபட்டு வருகிறார்.

தலைவர்களுடன் நாயுடு
ராகுலை கடந்த சில நாட்களில் 3முறைக்கு மேல் சந்தித்துவிட்ட சந்திரபாபு நாயுடு, அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களையும் சந்தித்து ராகுல் பிரதமராக ஆதரவு திரட்டி வருகிறார். மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயவதி, ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்யின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, உள்பட பலரை சந்தித்து ராகுலுக்கு ஆதரவு திரட்டி வரும் நாயுடு சோனியாவை சந்தித்தும் ஆலோசனை நடத்த உள்ளாரார்,

மே23ம் தேதி தெரியும்
சந்திரபாபு நாயுடு ஆந்திராவின் முதல்வராக தொடர்வாரா அல்லது ஜெகன் மோகன் ரெட்டியிடம் முதல்வர் பதவியை பறிகொடுப்பாரா என்பது மே 23ம் தேதி தெரிந்துவிடும் என்ற சூழலில் சந்திரபாயு நாயுடு ராகுலை பிரதமாராக்கினால், தேசிய அரசியலில் தனது இருப்பை வலிமையாக உறுதி செய்ய முடியும். ஒருவேளை முதல்வர் பதவியை இழக்க நேரிட்டாலும். ராகுல் பிரதமரானால் தேசிய அரசியலில் களம் பதிப்பார் என உறுதியாக நம்பலாம். எனவே தான் எந்த கட்சியை ஒருகாலத்தில் கடுமையாக விமர்சித்தாரோ, அதே கட்சிக்காக இப்போது நாயுடு பாடுபட்டு வருகிறார்.
-
மாணிக்கம் தாகூருக்கு தொடரும் சிக்கல்.. விஜய பிரபாகரன் தொடர்ந்த வழக்கை டிஸ்மிஸ் செய்தது ஐகோர்ட்! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
டிகே.சிவகுமார் என்ட்ரி.. விஜய் கொடுத்த பலம்.. அசைக்க முடியாத CBN.. வரலாற்று சம்பவம் மக்களே! -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
விஜய்யை பார்க்க வேண்டாம்.. ஸ்டாலினை கைவிட்டு இருக்க கூடாது.. ராகுலிடம் எகிறிய ப்ரியங்கா காந்தி! -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய்












Click it and Unblock the Notifications