யாழ்ப்பாணத்தில் சீன தூதர்.. அடுத்து துறைமுகம்தானா? இந்தியாவிற்கு எதிராக அரங்கேறும் காய் நகர்த்தல்?
டெல்லி: ஈழத் தமிழ் மீனவர்களுக்கு பல்வேறு உதவிகளை வழங்கி இந்தியாவுக்கு எதிராக மெகா சதித் திட்டத்துடன் சீனா களமிறங்கி இருப்பதாக அரசியல் பார்வையாளர்கள் எச்சரித்துள்ளனர்.
Recommended Video
இந்தியாவின் தமிழகம் மற்றும் இலங்கையின் வடக்கு பகுதியை சேர்ந்த ஈழத் தமிழ் மீனவர்களிடையேயான பிரச்சனையில் சீனா தலையிட தொடங்கி உள்ளது. இருநாட்டு மீனவர்களிடையேயான பிரச்சனை நீண்டகாலமாக இருந்து வருகிறது.
தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடிப்பதாக இலங்கை கடற்படை கைது செய்வதும் தாக்குதல் நடத்துவதும் நீடித்து கொண்டே இருக்கிறது. தமிழக மீனவர்களின் படகுகள் அத்துமீறி நுழைவதால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் ஈழத் தமிழ் மீனவர்கள் கூறி வருகின்றனர்.

கைவிடப்பட்ட காற்றாலை திட்டம்
இப்போது ஈழத் தமிழ் மீனவர்களுக்கு உதவிகளை வழங்குவதாக கூறி சீனா களமிறங்கி இருக்கிறது. இந்தியாவின் தென் எல்லைப் பகுதியில் அதாவது இலங்கையின் மன்னார் வளைகுடா பகுதியில் உள்ள தீவுகளுக்கு சீனா நீண்டகாலமாகவே குறிவைத்திருக்கிறது. இப்பகுதியில் மெகா காற்றாலை மின்திட்டங்களை அமைக்க சீனா முயற்சித்தது. ஆனால் இந்தியாவின் கடும் எதிர்ப்பால் சீனா இத்திட்டத்தை கைவிட்டது.

வடபகுதியில் சீனா குழு
இந்த நிலையில் இலங்கைக்கான சீன தூதர் தலைமையிலான குழு 2 நாட்கள் பயணமாக யாழ்ப்பாணம், மன்னார் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்றுள்ளது. யாழ்ப்பாணம் மீனவர்களுக்கு வலைகள், உலர் உணவு பெட்டகங்களையும் சீனா குழு வழங்கி இருக்கிறது. அத்துடன் மன்னார் வளைகுடாவில் ராமர் பாலம் எனப்படுகிற மணல் திட்டுகளிலும் சீனா குழு ஆய்வு செய்திருக்கிறது.

ஈழத் தமிழ் மீனவர்கள்
இலங்கையின் வடக்கு பகுதியை குறிவைத்து சீனா காய்நகர்த்தி வருவது இந்தியாவுக்கு மிகப் பெரிய ஆபத்தாகவே அமையக் கூடும் என எச்சரிக்கை விடுக்கின்றனர் யாழ்ப்பாணம் தமிழர்கள். இருநாட்டு மீனவர்களிடையேயான பிரச்சனைக்கு எந்த ஒரு தீர்வும் காணப்படாத நிலையில் ஈழத் தமிழ் மீனவர்களை தங்களது சதிவலையில் சிக்க வைக்கும் நடவடிக்கையை தொடங்கி இருக்கிறது சீனா.

மீனவர் பிரச்சனை
சீனாவின் இந்த போக்கை தொடக்கத்திலேயே இந்தியா முறியடித்தாக வேண்டும். அதற்கு ஒரே தீர்வு இருநாட்டு மீனவர் பிரச்சனைக்கு முடிவு கட்டுவதுதான்.. இப்போது படகு தருகிறோம்; வலை தருகிறோம் என்கிற சீனா, நாளை கொழும்பு துறைமுக நகரம் போல யாழ்ப்பாணத்திலோ, மன்னார் வளைகுடாவிலோ துறைமுக நகரைக் கட்டுவதற்கான அனைத்து சாத்தியங்களும் இருக்கின்றன. அப்படி சீனா துறைமுகநகரத்தை கட்டினால் சீனா ராணுவம் அங்கு குவிக்கப்படும். இது தமிழக மீனவர்களின் எதிர்காலத்தையே குழிதோண்டிப் புதைக்கக் கூடியது; இந்தியாவின் தென் எல்லைப் பகுதியில் சீனா ராணுவம் குவிக்கப்படுவதும் தேசப் பாதுகாப்புக்கு பேராபத்து என்கின்றனர் மூத்த பத்திரிகையாளர்கள்.

தமிழக அரசு செய்யுமா?
தமிழக அரசாங்கமாவது இந்த பிரச்சனையின் தீவிரத்தை கவனத்தில் வைத்துக் கொண்டு உடனடியாக ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும்; தொப்புள் கொடி உறவுகளான தமிழர்களை மோதவிட்டு இந்தியாவில் அமைதியை சீர்குலைக்க சீனாவும் இலங்கையும் சதித்திட்டத்துடன் யாழ்ப்பாணத்தில் கால் வைத்திருக்கிறது. இது நிச்சயம் இந்தியாவுக்கும் தமிழக மீனவர்களுக்கு மோசமான விளைவுகளைத் தரும் என்று எச்சரிக்கின்றனர் ஈழத் தமிழ் அரசியல் கட்சித் தலைவர்கள்.
-
"தேங்க் யூ இந்தியா.. உங்க உதவியை நாங்கள் மறக்கவே மாட்டோம்.." போருக்கு நடுவே நன்றி சொன்ன ஈரான் -
பெரிய சிக்கலில் இந்தியா! 1970ல் நடந்தது போல.. இப்போதும் நடக்கப்போகுது! வெளியான ஷாக் தகவல்! -
ரெடியா இருங்க மக்களே! சட்டுன்னு ஏறப்போகும் பெட்ரோல், டீசல் விலை! தேதி குறிச்சாச்சு! -
துரந்தர் இல்லை.. துரோகி.. இந்திய விமான படை வீரர் அதிரடி கைது! பாகிஸ்தானுக்காக உளவு பார்த்தது அம்பலம் -
ஈரானில் விழுந்த குண்டுகளால்.. இந்தியாவில் உயர்ந்த குடிநீர் விலை.. இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ! -
தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்! பாதாளத்திற்கே போகும் இந்திய பங்குச்சந்தைகள்.. 3 காரணங்கள் -
வந்தாச்சு LPG ATM.. இனி காத்திருக்கவே வேண்டாம்! வெறும் 2 நிமிடத்தில் புதிய சிலிண்டர் ஈஸியா வாங்கலாம் -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்?












Click it and Unblock the Notifications