Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இந்தியாவில் மீண்டும் லாக்டவுன் வருமா? நாடு முழுக்க வேகமாக பரவும் கொரோனா! மருத்துவர்கள் சொல்வது என்ன!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்தியாவில் கடந்த சில காலமாகவே வைரஸ் பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. நாட்டின் பல மாநிலங்களில் வைரஸ் பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. இதற்கிடையே கொரோனா பாதிப்பு திடீரென அதிகரிக்க என்ன காரணம் என்பதை விளக்கியுள்ள ஆய்வாளர்கள், இதனால் என்ன மாதிரியான ஆபத்துகள் ஏற்படலாம் என்பது குறித்தும் முக்கிய விளக்கத்தைக் கொடுத்துள்ளனர்.

கடந்த 2019ல் அடித்த கொரோனா அலையை அவ்வளவு சீக்கிரம் யாரும் மறக்க மாட்டார்கள். உலகெங்கும் கொரோனா அப்போது மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தியது. அமெரிக்கா தொடங்கி எந்தவொரு நாடும் கூட கொரோனா வைரஸில் இருந்து தப்பவில்லை. உயிரிழப்புகள், பொருளாதார இழப்புகள் என்று பாதிப்பு மிக மோசமாகவே இருந்தது.

Why Corona cases are raising in India Will there be any lockdown

கொரோனா பாதிப்பு

வேக்சின், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என பல்வேறு நடவடிக்கைகள் மூலமாகவே வைரஸ் பாதிப்பைக் கட்டுக்குள் கொண்டு வந்தோம். இதற்கிடையே கடந்த சில வாரமாக வைரஸ் பாதிப்பு மீண்டும் அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. முதலில் ஹாங்காங், சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் வைரஸ் பாதிப்பு அதிகரித்த நிலையில், இப்போது உலகெங்கும் பல நாடுகளில் வைரஸ் பாதிப்பு உயர ஆரம்பித்துவிட்டது.

அதன்படி இந்தியாவிலும் சில காலமாகவே வைரஸ் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி இந்தியாவில் கொரோனா கேஸ்களின் எண்ணிக்கை 5755ஆக உள்ளது. அதிகபட்சமாகக் கேரளாவில் வைரஸ் பாதிப்பு 1800ஐ கடந்துள்ளது. மேற்கு வங்கத்தில் 622, டெல்லியில் 665 ஆக்டிவ் கேஸ்கள் உள்ளது. அதேபோல மகாராஷ்டிராவிலும் வைரஸ் பாதிப்பு 577ஆக உள்ளது.

புதிய திரிபு

NB.1.8.1 என்ற திரிபு காரணமாகவே இப்போது கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. இங்கிலாந்து, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, தாய்லாந்து, சீனா மற்றும் ஹாங்காங்கில் உள்ளிட்ட பிற நாடுகளில் இந்த வேரியண்டு பதிவாகியுள்ளன. இது இப்போது சீனா மற்றும் ஹாங்காங்கில் ஆதிக்கம் செலுத்தும் திரிபாக மாறியுள்ளது. அதேபோல LF.7 என்ற வேரியண்ட் காரணமாகவும் வைரஸ் பாதிப்பு அதிகரித்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இதில் NB.1.8.1 என்பது ஒரு வகை ஒமிக்ரான் வேரியண்ட் ஆகும். ஏற்கனவே உள்ள இரண்டு வேரியண்டுகள் சேர்ந்ததால் இந்த வேரியண்டு உருவாகியிருக்கலாம் என்கிறார்கள் ஆய்வாளர்கள். கடந்த மே மாதம் இறுதியிலேயே இந்த வேரியண்டை கண்காணிக்கும் வேரியண்டாக உலக சுகாதார அமைப்பு அறிவித்திருந்தது. இந்த வைரஸ் வேகமாகப் பரவலாம் என்று ஆய்வாளர்கள் எச்சரிக்கிறார்கள்.

காரணம் என்ன

புதிய திரிபு மனித செல்களுடன் வலிமையான பிணைப்பை ஏற்படுத்தும் திறனைக் கொண்டிருந்தது என்பதை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். முந்தைய திரிபுகளை விட மனித செல்களில் இது அதிக பாதிப்பை ஏற்படுத்தலாம் என்றும் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். NB.1.8.1 வகை பொதுவான அறிகுறிகளாகத் தொண்டை வலி, இருமல், தசை வலி, காய்ச்சல் மற்றும் மூக்கு ஒழுகுதல் ஆகியவை உள்ளன. இது குமட்டல் மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற அறிகுறிகளையும் ஏற்படுத்துகிறது.

வேக்சின்

தற்போதைய வைரஸ்களுக்கு எதிராகவும் வேக்சின் வேலை செய்யும் என்றே ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். ஒருவருக்குத் தீவிர பாதிப்பு மற்றும் மருத்துவமனையில் அட்மிட் ஆகும் சூழல் ஏற்படுவதை வேக்சின் தடுக்கிறது. குறிப்பாக மரணத்தைக் கணிசமாகவே வேக்சின் குறைப்பதாக ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

லாக்டவுன் வருமா!

தற்போது வரை புதிய வேரியண்ட் வேகமாகப் பரவினாலும் கூட அவை அதீத ஆபத்தை ஏற்படுத்தும்.. அல்லது உயிரிழப்புகளை அதிகரிக்கும் என்பதற்கு ஆதாரங்கள் இல்லை. இதனால் மக்கள் அஞ்சத் தேவையில்லை.. மாஸ்க் அணிந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றினாலே போதும்.. தற்போதைய சூழலில் லாக்டவுன் அறிவிப்பு எல்லாம் வர வாய்ப்பே இல்லலை என்றே ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+