கபில் சிபல் ஒரே போடு.. தலைமை நீதிபதி வீட்டுக்குள் மோடி ஏன் போனாரு? திரண்ட கட்சிகளுக்கு பாஜக பதிலடி
டெல்லி: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வீட்டு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றதற்கு எதிர்க்கட்சிகளின் கண்டனங்கள் குவிந்துள்ளன. நீதித்துறை தரப்பிலும் இந்த விவகாரம் எதிரொலித்து வருகின்றன.. இதுகுறித்த விவாதங்களும் சோஷியல் மீடியாவில் வெடித்துள்ளன. என்ன நடந்தது?
விநாயகர் சதுர்த்தி பண்டிகையானது, வட மாநிலங்களில்தான் எப்போதுமே விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கமாகும். எனவே, இந்த வருடமும், கடந்த 10 நாட்களாகவே கணபதி பூஜைகள் களைகட்டி வருகின்றன.

இந்நிலையில், சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்டின் டெல்லி வீட்டிலும், விநாயகர் சதுர்த்தி சிறப்பு பூஜை நடந்துள்ளது.. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டதுடன், பூஜையும் செய்திருக்கிறார்.
எதிர்க்கட்சிகள்: இது தொடர்பான போட்டோக்கள், வீடியோக்கள் இணையத்தில் வெளியாகின.. இதைப்பார்த்ததுமே, தலைமை நீதிபதி வீட்டு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி ஏன் பங்கேற்க வேண்டும் என்று கேட்டு எதிர்க்கட்சிகள் கண்டனங்களை பதிவு செய்துள்ளன. இதுகுறித்து நீதித்துறையை சார்ந்தவர்களும் தங்களுடைய கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.. தன்னுடைய அதன் தொகுப்புதான் இவை:
மூத்த வக்கீல் இந்திரா ஜெய்சிங் கூறும்போது, "உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியின் சுதந்திரம் மீதான அனைத்து நம்பிக்கையும் இப்போது தகர்ந்து விட்டன.. நிர்வாகத்துக்கும் நீதித்துறைக்கும் இடையிலான அதிகார பிரிவினையில் சமரசம் செய்து கொண்டுள்ளதாக இந்த நடவடிக்கை காட்டுவதால், வக்கீல் சங்கம் இதற்கு கண்டனம் தெரிவிக்க வேண்டும்" என்றார்.
சுப்ரீம் கோர்ட்: அதேபோல, சீனியர் வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் கூறும்போது, "சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி சந்திரசூட், பிரதமர் மோடியை தன்னுடைய வீட்டில் தனிப்பட்ட முறையில் சந்தித்தது அதிர்ச்சியை அளிக்கிறது. நிர்வாகத்திடமிருந்து குடிமக்களின் அடிப்படை உரிமைகளை பாதுகாக்கும் மற்றும் அரசியலமைப்பின் வரம்புக்குள் அரசு செயல்படுவதை உறுதி செய்யும் பொறுப்பில் உள்ள நீதித்துறைக்கு இது மிகவும் மோசமான சிக்னலை அனுப்புகிறது" என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.
மூத்த வழக்கறிஞரும், சுப்ரீம் கோர்ட்டு பார் அசோசியேஷன் தலைவருமான கபில்சிபல் சொல்லும்போது, "உயர்ந்த பதவியில் இருப்பவர்கள், தங்களுடைய தனிப்பட்ட நிகழ்ச்சியை இப்படியெல்லாம் விளம்பரப்படுத்தக்கூடாது... அதேபோல, ஒரு தனிப்பட்ட நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பிரதமரும் தன்னுடைய ஆர்வத்தை காட்டக்கூடாது... தலைமை நீதிபதி வீட்டிற்கு செல்வது குறித்து, மோடி ஆலோசனை செய்திருக்க வேண்டும். அப்படி வீட்டு நிகழ்வில் பங்கேற்றால் இது தவறான சிக்னலை அனுப்பக்கூடும் என்றும் அவரிடம் கூறியிருக்க வேண்டும்" என்றார்.
சிவசேனா (உத்தவ்) மூத்த தலைவர் சஞ்சய் ராவத் இதுகுறித்து சொல்லும்போது, "பிரதமர் மோடி வேறு யாருடைய வீட்டுக்கும் சென்றாரா? என்று தகவல் இல்லை. ஆனால் தலைமை நீதிபதி வீட்டுக்கு சென்றிருக்கிறார். அரசியல் சட்டத்தின் பாதுகாவலர்கள் இப்படி அரசியல் தலைவர்களை சந்திப்பது மக்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தும்..
அரசியல் சாசனம்: அரசியல் சாசனத்தைப் பாதுகாக்கிறவர்கள் அரசியலில் இருந்து விலகி நிற்க வேண்டும். பிரதமர் மோடியுடனான சந்திப்பால் எங்களுக்கு நியாயம் கிடைக்குமா? என்பது சந்தேகமாக உள்ளது. ஒரு கட்சியுடன் மிக நெருக்கமான உறவை கொண்டிருக்கும் நிலையில், சந்திரசூட் எப்படி நியாயமான தீர்ப்பை தருவார்? எங்களது இந்த வழக்கு விசாரணையில் இருந்து தலைமை நீதிபதி சந்திரசூட் தாமாக விலகிக் கொள்ள வேண்டும் என்று சஞ்சய் ராவத் விமர்சித்துள்ளார்.
இதுபோலவே, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சி தலைவர்கள் இந்த நிகழ்வை விமர்சித்தும், கண்டித்தும் வருகிறார்கள்.. ஆனால், அனைத்து விமர்சனங்களுக்கும் பாஜக பதிலடி தந்து கொண்டிருக்கிறது.
பாஜக பதிலடி: தேசிய பொதுச்செயலாளர் பி.எல்.சந்தோஷ் சொல்லும்போது, "புலம்பல் ஆரம்பமாகிவிட்டது. நாகரிகம், நல்லுறவு, ஒற்றுமை இவை அனைத்தும் இந்த இடது தாராளவாதிகளுக்கு வெறுப்பாக இருக்கிறது. பிரதமர் கலந்து கொண்டது சமூக நிகழ்வுக்காக கிடையாது. அது புனிதமான கணபதி பூஜைதான்.. இதைகூடவா அரசியலாக்குவது?" என்று பதிலடி தந்துள்ளார்.
-
அண்ணாமலைக்கு சீட் கொடுக்க கூடாது.. எடப்பாடி எடுத்த முடிவு.. பாஜக தொகுதி பங்கீட்டில் என்ன நடந்தது? -
அதிமுக வேட்பாளர்கள் யார்? 146 வேட்பாளர்களை எப்போது அறிவிப்பார் எடப்பாடி! உச்சகட்ட டென்ஷனில் ர.ர.கள்! -
அரைக் கிணறை தாண்டாத அறிவாலயம்.. அதிவேகத்தில் அதிமுக! போட்ட ஸ்கெட்சை பக்காவாக முடித்த எடப்பாடி! -
14 அமைச்சர்களிடம் நேருக்கு நேர் மோதல் இல்லை.. பாஜக, அமமுகவை கோர்த்துவிட்ட எடப்பாடி பழனிசாமி! -
தேர்தலில் போட்டியில்லை.. டெல்லிக்கு கடிதம் எழுதிய அண்ணாமலை.. பாஜகவில் டிவிஸ்ட் -
நடிகை கவுதமியை மீண்டும் ஏமாற்றிய அதிமுக – பாஜக.. ராஜபாளையம் ஜான் பாண்டியனுக்கு ஒதுக்கியதன் பின்னணி -
பலே ஆளுங்க எடப்பாடி பழனிசாமி.. பாஜகவின் 27 தொகுதிகளில் இப்படி ஒரு ட்விஸ்டா! பாவம் ஜிகே வாசன்? -
குமரியில் காலியாகும் அதிமுகவின் அடித்தளம்.. 4 தொகுதிகளை கைப்பற்றிய பாஜக.. சோர்வடைந்த தொண்டர்கள்! -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
2021 vs 2026.. அதிமுக கூட்டணியில் யாருக்கு லாபம்.. பாஜக, பாமக அமமுக வாக்கு சதவீதம் என்ன? -
"அந்த" 54 தொகுதிகள் தான் மேஜிக்.. மம்தாவை காலி செய்ய சக்கர வியூகம்.. இறங்கி அடிக்கும் பாஜக! -
நயினாரை விடவே கூடாது.. சாத்தூரில் வீழ்த்த ஸ்டாலின் ‘ஸ்கெட்ச்’.. இறங்கும் திமுகவின் ‘பெரிய தலை’












Click it and Unblock the Notifications